நீண்ட காலமாக வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து வந்த ஸ்டிக்கர் சேவையை, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் மொபைல்களுக்குவாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய மெசேஜிங் சேவையான வாட்ஸ்அப் நிறுவனம் பல புதிய அப்டேட்களை வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. சமீபத்தில், அனுப்பும் மெசேஜ்களை டெலீட் செய்யும் வசதி, வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப்பில், மெசேஜ்ஸ்டிக்கர்கள் அனுப்பும் வசதியை வழங்க நீண்ட நாட்களாக ஆலோசனை நடந்து வந்தது.
இந்நிலையில், ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயன்படுத்தும் மொபைல் போன்களுக்கு புதிய அப்டேட் மூலம், ஸ்டிக்கர் சேவையை வழங்கியுள்ளது வாட்ஸ்அப். வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும்இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்கள் கூகுள் பிளேஸ்டோர் சென்றும், ஐஓஎஸ் வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோர் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்து இந்த வசதியை பெற்றுக் கொள்ளலாம். இந்த புதிய அப்டேட் 30 MB அளவு இருக்கும்.
ليست هناك تعليقات:
إرسال تعليق