புதுவை பல்கலைக்கழகத்தில் புதிய ஆராய்ச்சி படிப்புகள் அறிமுகம் - துளிர்கல்வி

Latest

الثلاثاء، 4 يوليو 2023

புதுவை பல்கலைக்கழகத்தில் புதிய ஆராய்ச்சி படிப்புகள் அறிமுகம்

புதுவை பல்கலைக்கழகத்தில் புதிய ஆராய்ச்சி படிப்புகள் அறிமுகம் 

புதுவை பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஆராய்ச்சி படிப்புகளில் சேர வருகிற 10-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். புதுவை பல்கலைக்கழகம் விடுத்துள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- காலம் நீட்டிப்பு புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சி படிப்புகளில் (பி.எச்டி.) சேருவதற்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது வருகிற 10-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு இதன் மூலம் வாய்ப்பு வழங்கப்படுகிறது. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் (https://www.pondiuni.edu.in/admissions-2023-24) இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். 

 புதிய பாடப்பிரிவுகள் மேலும் இந்தி, சுற்றுலா கல்வி, ஆங்கிலம் ஆகிய பிரிவுகளில் பி.எச்டி பாடப்பிரிவுகள் இந்த கல்வியாண்டில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான விவரங்கள் பல்கலைக்கழக இணையதளததில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் இது பற்றிய விவரங்களை தெரிந்து நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் உள்ள பி.எச்டி படிப்புகள் தொடர்பான விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق