பள்ளிக்கல்வித் துறை சார்பில் ‘பெற்றோரை கொண்டாடுவோம்' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சி மொத்தம் 7 கட்டமாக நடத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக, வருகிற 29-ந்தேதி மதுரையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாகவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செயலாளர் குமரகுருபரன் உள்பட அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரையில் தொடங்கும் இந்த முதற்கட்ட நிகழ்ச்சியில், தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு 4 பெற்றோர், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் என 30 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ليست هناك تعليقات:
إرسال تعليق