அரசுத் தேர்வுகள் இயக்ககம்- தேசிய
வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத்
திட்டத் தேர்வு (NMMS) பிப்ரவரி 2024 - தேர்வுமைய
பெயர்ப்பட்டியலுடன் கூடிய வருகை தாட்கள்
(Nominal Roll Cum Attendance Sheet) மற்றும் தேர்வுக்
கூட நுழைவுச் சீட்டுகள் (Hall Ticket) பதிவிறக்கம்
செய்தல் - தொடர்பாக.
2023 - 2024-ம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி
படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) 03.02.2024 (சனிக்கிழமை) அன்று
நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு வருகைபுரியும் மாணவர்களின் பெயர்பட்டியலுடன்
கூடிய வருகைத்தாட்கள் (Nominal Roll Cum Attendance Sheet) தேர்வு மையம் வாரியாக
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 24.01.2024 (புதன் கிழமை) பிற்பகல்
முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே,
ஒவ்வொரு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும் தவறாமல் பெயர்
பட்டியலினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
தலைமையாசிரியர்களுக்கு
கொள்ளப்படுகிறது.
தேர்வுகூடநுழைவுச்சீட்டு:
தலைமையாசிரியர்கள்
மேற்படி தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை (Hall Ticket)
24.01.2024 (புதன்கிழமை) பிற்பகல் முதல் பள்ளித்
www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் பள்ளிக்கான User ID
/Password -ஐ கொண்டு பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கவும், தேர்வு
பள்ளித்
மைய
விவரத்தினை
மாணவர்களுக்கு
தெரிவிக்கவும்
அறிவுரை வழங்குமாறு கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும்
பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதை உறுதி செய்யுமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தேர்வர்களின் தேர்வுகூட நுழைவுச் சீட்டுக்களில் பெயர் / புகைப்படம் / பிறந்த
தேதி/ வகுப்பினம் (Community) ஆகியவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின்
திருத்தத்தினை சிவப்பு நிற மையினால் சுழித்து சரியான பதிவினை குறிப்பிட்டு
பள்ளி தலைமையாசிரியர்களிடம் சான்றொப்பம் பெற்று தேர்வெழுத
அத்தேர்வர்களுக்கு அனுமதி வழங்க தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு
அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நகல்
ஒம்/-
இணை இயக்குநர் (மேல்நிலை)
1.அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மேற்காண் தேர்விற்கான
பெயர்ப்பட்டியல்களை அனைத்து தேர்வுமைய கண்காணிப்பாளர்கள்
பதிவிறக்கம் செய்ய உரிய அறிவுரை வழங்கவும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட
அனைத்து தலைமையாசிரியர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை
பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறது.



ليست هناك تعليقات:
إرسال تعليق