இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - துளிர்கல்வி

Latest

الخميس، 1 فبراير 2024

இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

கொரோனா காலகட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளிகள், இழப்புகள் ஆகியவற்றை சரிசெய்ய பள்ளிக்கல்வித்துறை இல்லம் தேடி கல்வி திட்டத்தை கொண்டு வந்தது. 

இதற்காக அப்போது ரூ.199 கோடியே 96 லட்சம் செலவிடப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.50 கோடியும், 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.114 கோடியே 17 லட்சமும், 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.173 கோடியே 31 லட்சமும், கடந்த ஆண்டு (2023) மார்ச் மாதம் ரூ.52 கோடியே 85 லட்சமும், செப்டம்பர் மாதம் ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டது. 

இந்த நிலையில் 2023-24-ம் ஆண்டுக்கான இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கான மையங்கள் 1 லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 25 ஆயிரமாக குறைக்கப்படும் என்றும், அந்த திட்டத்தை மேலும் செயல்படுத்துவதற்காக ரூ.191 கோடியே 90 லட்சம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் இல்லம் தேடி கல்வியின் சிறப்பு அதிகாரி பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்து இருந்தார். 

அதனை அரசு கவனமாக ஆராய்ந்து, இல்லம் தேடி கல்வி திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.100 கோடியை ஒதுக்கி பள்ளிக்கல்வித்துறை அரசாணையாக வெளியிட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق