2,240 கிராம செவிலியர் பணியிடம் நிரப்பப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - துளிர்கல்வி

Latest

الثلاثاء، 6 فبراير 2024

2,240 கிராம செவிலியர் பணியிடம் நிரப்பப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

நாகர்கோவிலில் மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
தமிழக வரலாற்றில் முதல் முறையாக பயிற்சி முடித்த 1,021 டாக்டர்களுக்கு நாளை (அதாவது இன்று) காலை 10 மணிக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. இதேபோல 983 மருந்தாளுனர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். கோர்ட்டு வழக்குகள் முடிந்த பிறகு 1,266 சுகாதார ஆய்வாளர்களும் நியமிக்கப்பட இருக்கிறார்கள். 

இன்னும் ஒரு மாதத்தில் 2,240 கிராம சுகாதார செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில் தென்காசி, மயிலாடுதுறை, ராணிபேட்டை, திருப்பத்தூர் மற்றும் காஞ்சிபுரம் உள்பட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசிடம் அறிவுறுத்தி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق