3,397 பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி - துளிர்கல்வி

Latest

الثلاثاء، 6 فبراير 2024

3,397 பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் ஏற்பாட்டில், ஆவடி போலீஸ் கமிஷனரகத்துடன் ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற தனியார் அமைப்பு இணைந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்ற உலக சாதனையை உருவாக்கும் விதமாக போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆவடி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகள் இடையே போதை தடுப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். பின்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 126 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 3,397 மாணவ-மாணவிகள் சேர்ந்து “எனக்கு வேண்டாம் போதை, நமக்கும் வேண்டாம் போதை” என்ற போதை விழிப்புணர்வு வாசகம் வடிவில் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் முன்னிலையில் போதை பொருட்கள் ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதனை உலக சாதனையை உருவாக்கும் நிகழ்ச்சியாக ஏசியா புக் ஆப் ரெகார்ட்ஸ் என்ற தனியார் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் டாக்டர் என்.ஓ.சுகபுத்ரா, ஆவடி கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق