மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி: கலையரசி பட்டத்தை வென்ற கோவை மாணவி - துளிர்கல்வி

Latest

الأربعاء، 7 فبراير 2024

மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி: கலையரசி பட்டத்தை வென்ற கோவை மாணவி

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் வேலூர் மாவட்டத்தில் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் கதை எழுதுதல், ஓவியம் வரைதல், பறை இசை வாசித்தல், நாடகம் உள்ளிட்ட பிரிவுகளில் நடந்த போட்டியில் கோவை சரவணம்பட்டி ஷாஜகான் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பலர் பங்கேற்றனர். அதில் 8-ம் வகுப்பு மாணவி கோபிகா ஓவியம் வரைதல் போட்டியில் முதலிடம் பிடித்தார். கதை எழுதுதல், பறை இசை வாசித்தல், நாடகம் உள்ளிட்ட போட்டியில் 8-ம் வகுப்பு மாணவி தமிழிசை 2-வது இடம் பெற்றார். அதிகளவு பரிசுகளை வென்றதால் இவருக்கு கலையரசி பட்டம் வழங்கப்பட்டது. இதுபோன்று வேலுநாச்சியார் நாடக போட்டியில் இந்த பள்ளியை சேர்ந்த 9 மாணவர்கள் 2-வது இடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மேயர் கல்பனாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் உடன் இருந்தார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق