சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது - துளிர்கல்வி

Latest

الجمعة، 9 فبراير 2024

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது 
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை மற்றும் எம்.சி.ஏ, எம்.பி.ஏ பட்டப்படிப்பிற்கான 2023 ஜூன் மாத செமஸ்டர் தேர்வு, கடந்த ஆண்டு செப்டம்பர் தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெற்றது. இந்த தேர்வை, தொலைதூர கல்வி நிறுவனத்தில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதினர். இந்த நிலையில், இதற்கான தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள், மாலை 6 மணிக்கு www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை அறியலாம் என்று சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق