இந்து சமய அறநிலையத்துறையில் உதவி சமையல்காரர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்! கடைசி நாள் 01-09-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

الأحد، 4 أغسطس 2024

இந்து சமய அறநிலையத்துறையில் உதவி சமையல்காரர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்! கடைசி நாள் 01-09-2024

நிபந்தனைகள் 



விண்ணப்பதாரர் 01.07.2074.ம் தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். 

2. இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும். 

3. இவ்விளம்பரம் செய்யப்பட்ட தேதிக்கு பிறகு உரிய காலத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 

4 விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களுக்கு அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் (Attested Xerox Copy Only) பெற்று அனுப்பப்பட வேண்டும். 
5. விண்ணப்பதாரர் வயதிற்கான சான்று ஆவணம் அல்லது கல்வி நிலையத்தால் வழங்கப்பட்ட மாற்று சான்றிதழ் (Transfer Certificatc)நகல் இணைக்கப்பட வேண்டும் 

6. விண்ணப்ப படிவத்தில் விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலும் கேட்கப்பட்ட சான்று நகல்கள் இணைக்கப்படாமலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஆரம்ப நிலையிலேயேநிராகரிக்கப்படும். 


7.தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர் இத்திருக்கோயிலின் உபகோயில்களுக்கும், பணியிட மாறுதல் செய்யப்படுவார். 

8. பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர் பணியில் சேர வரும் நேரத்தில் விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்ற சான்றிதழ் மற்றும் உடல் தகுதி சான்றிதழ்களின் அசல் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

9 விண்ணப்பங்களை அனுப்பும் போது மேல் உறையின் மீது பதவியின் பெயரை குறிப்பிட்டு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பப்படவேண்டும். 
10. நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்கு எவ்வித பயணப்படியும் வழங்கப்படமாட்டாது. 

11 விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் கல்வி தகுதி மற்றும் பிற தகுதிக்குரிய ஆவணங்களின் அசல் சான்றிதழ்கள் நேர்முக தேர்வின் போது கண்டிப்பாக கொண்டு வரப்பட வேண்டும். 

12 விண்ணப்பதாரரால் தெரிவிக்கப்படும் விவரங்கள் அனைத்தும் சரியானவை என் உறுதியளிக்க வேண்டும் தவறான தகவல்கள் அல்லது போலியான ஆவணங்கள் ஏதேனும் அளித்து பணி நியமன ஆணை பெறப்படும் பட்சத்தில் எவ்வித முன் அறிவிப்புமின்றி பணி நீக்கம் செய்தும் சட்ட ரீதியான குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படுவர். 

13 நிர்ணயிக்கப்பட்ட காலகெடுவிற்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். மேலும், தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே பரிசீலனைக்கு பின்னர் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவர். தகுதி இல்லாத விண்ணப்பங்களுக்கு திருக்கோயிலிருந்து எவ்வித தகவலும் அனுப்பப்படமாட்டாது. 
14. விண்ணப்பதாரர்களால் வழங்கப்படும் சான்றுகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட துறைகளின் மூலம் உண்மைத் தன்மை குறித்து பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். 


15.திருக்கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் அவர்களின் வாரிசுதாரர்கள் அரசு பணி மற்றும் பொது நிறுவனங்கள், இதர திருக்கோயில்களில் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். 15. உரிய முறையில் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் காரணம் தெரிவிக்கப்படாமல் நிராகரிக்கப்படும். 

17. பணி நியமனம் அரசாணை எண்.114 சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (அநி.4-2 நாள் 03.09.2020 விதிகளுக்குட்பட்டது. அரசாணை எண். 219 சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (அநி 4:2) நாள். 02.092022 விதிகளுக்குட்பட்டது. 

18 அரசாணை (நிலை) எண்.114 சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (அறி47) துறை நாள் 03.09.2020 விதி எண்.9-ன் படி முதுநிலை அல்லாத திருக்கோயில்களில் பணிபுரியும் தகுதியான பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம். 
19. தேர்வு முறையானது அனுபவம், செயல்முறை தேர்வுகள் கூடுதல் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும். 

20.விண்ணப்பப் படிவத்தினை www.thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in www.hrce.tn.gov.in என்ற மற்றும் திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.50). செலுத்தி விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். 

21 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் - உதவி சமையல்காரர் பணியிடத்திற்கான விண்ணப்பம்” என தெளிவாக குறிப்பிட்டு "உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல், திருவரங்கம் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் 620005" என்ற முகவரிக்கு நேரிலோ/அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும். 
22 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாள் 01.09.2024 பிற்பகல் 5.00 மணிக்குள் வந்து சேர வேண்டிய கடைசி ம.லெட்சுமணன் தக்கார் உதவி ஆணையர் ஆஇரவிச்சந்திரன், உதவி ஆணையர்/செயல் அலுவலர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق