அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘கையடக்க மின்னணு பெட்டகம்' - பயிற்சி வகுப்புகள் விரைவில் - பள்ளிக்கல்வித்துறை - துளிர்கல்வி

Latest

Search This Site

الأحد، 1 سبتمبر 2024

அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘கையடக்க மின்னணு பெட்டகம்' - பயிற்சி வகுப்புகள் விரைவில் - பள்ளிக்கல்வித்துறை

அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘கையடக்க மின்னணு பெட்டகம்' - பயிற்சி வகுப்புகள் விரைவில் - பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு எலக்ட்ரானிக்ஸ் அறிவியலில் ஆர்வத்தை அதிகரிக்க செய்யும் வகையில் கையடக்க மின்னணு பெட்டகம் மூலம் பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. 


மின்னணு பெட்டகம் சென்னை ஐ.ஐ.டி., பள்ளிக்கல்வித்துறை இணைந்து அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு எலக்ட்ரானிக்ஸ் அறிவியலில் ஆர்வத்தை தூண்டும் வகையில் கையடக்க மின்னணு பெட்டகம் (எலக்ட்ரானிக்ஸ் கிட்) வழங்கும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் தொடங்கிவைத்தார். அனைவருக்கும் சென்னை ஐ.ஐ.டி. என்ற திட்டத்தின் கீழ் சென்னை ஐ.ஐ.டி., இந்தியா எழுத்தறிவு திட்டம் என்ற தன்னார்வ அமைப்பு மூலம் இதனை வழங்கி வருகிறது. (துளிர்கல்வி)தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 253 அரசு பள்ளிகளை அடையாளம் கண்டு அந்த பள்ளிகளுக்கு இந்த “எலக்ட்ரானிக்ஸ் கிட்” வழங்குவதற்கான பணிகள் தற்போது நடக்கிறது. ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 9 கிட் வீதம் வழங்கப்படுகிறது. இந்த எலக்ட்ரானிக்ஸ் கிட் மூலம் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையில் உள்ள பாடத்திட்டங்களில் வரும் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த பரிசோதனைகளையும் செய்து பார்க்க முடியும். 

பணிகள் முழுவீச்சில்.... இந்த பரிசோதனைகளையெல்லாம் மாணவ-மாணவிகளுக்கு செய்து காண்பிப்பதற்கு ஆசிரியர்கள் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். ஆனால் இந்த கிட்டை பயன்படுத்தி பயிற்சி வகுப்புகளின் வாயிலாக மாணவ-மாணவிகளுக்கு எளிதில் கற்றுக்கொடுக்கலாம். அவர்களும் விரைவாகவும், எளிதாகவும் புரிந்துகொள்வார்கள். கிட்டதட்ட 300-க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த பரிசோதனைகளை இதில் மேற்கொள்ளலாம் எனவும், 9-ம் வகுப்பு முதல் டிப்ளமோ மற்றும் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு வரையிலான எலக்ட்ரானிக்ஸ் பாடம் சார்ந்த பரிசோதனைகளை இதில் மேற்கொள்ளும் வகையில் கிட் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது (துளிர்கல்வி)எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக சென்னை ஐ.ஐ.டி. வளாகத்துக்கு 4 குழுக்களாக ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு தங்க வைத்து பயிற்சிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து மாணவ-மாணவிகளுக்கு இந்த பயிற்சி வகுப்புகளும், பரிசோதனை செய்முறைகளும் அளிக்கும் வகையில், தற்போது அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. 

ஓரிரு வாரத்தில் வகுப்புகள்... 253 பள்ளிகளுக்கு முதலில் எலக்ட்ரானிக்ஸ் கிட் அனுப்பும் பணி முடிந்துள்ளது. இதனையடுத்து மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்குவது தொடர்பான அட்டவணையை தயாரிக்க கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது. வாரத்துக்கு ஒரு மணி நேரம் இதற்காக நேரத்தை ஒதுக்க சென்னை ஐ.ஐ.டி. தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு இருப்பதாக சொல்லபடுகிறது. அதற்கேற்றாற்போல் அட்டவணை தயாரிக்கப்பட்டு இன்னும் ஓரிரு வாரத்தில் அதற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க இருக்கிறது. சென்னையில்(துளிர்கல்வி) விருகம்பாக்கம், அசோக்நகர், வேளச்சேரி, அரும்பாக்கம், கொருக்குப்பேட்டை, மணலி, போரூர், துரைப்பாக்கம், திருவான்மியூர் ஆகிய அரசு பள்ளிகளில் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இந்த 253 பள்ளிகளின் செயல்பாடுகளை பொறுத்து மற்ற பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படுமா? என்று அதிகாரிகளிடம் கேட்டபோது, பொறுத்து இருந்து பாருங்கள் என பதில் அளித்தனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق