'அ' னா 'ஆ' வன்னா அரிச்சுவடி ஆரம்பம்! முன் பதிவு துவக்கம்!! - துளிர்கல்வி

Latest

الخميس، 19 سبتمبر 2024

'அ' னா 'ஆ' வன்னா அரிச்சுவடி ஆரம்பம்! முன் பதிவு துவக்கம்!!

'அ' னா 'ஆ' வன்னா அரிச்சுவடி ஆரம்பம்! முன் பதிவு துவக்கம்!!
தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' சார்பில் நடத்தப்படும், 'அ'னா... 'ஆ'வன்னா... அரிச்சுவடி ஆரம்பம்' என்ற, குழந்தைகளின் கல்விக்கண் திறக்கும் நிகழ்ச்சிக்கான முன்பதிவு துவங்கி உள்ளது.தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழும், 'வேலம்மாள் நியூஜென் கிட்ஸ்'சும் இணைந்து வழங்கும், 'அ'னா... 'ஆ'வன்னா... அரிச்சுவடி ஆரம்பம் என்ற நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 
வித்யாரம்பம் குழந்தையின் கையால், நெல் மணியில் அகரம் எழுதி, வித்யாரம்பம் செய்வது விஜயதசமி நாளில் தான். அந்த நாளில், நம் நாளிதழ் சார்பில், 'அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 
இதில், கல்வியாளர்கள், பல்துறை வல்லுனர்கள், கலைஞர்கள் பங்கேற்று, குழந்தைகளின், 'அ'கரத்தை துவக்கி வைக்க உள்ளனர். சென்னை படப்பை, வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி வளாகம், வடபழனி ஆண்டவர் கோவில், நாவலுார் வேலம்மாள் நியூ ஜென் பள்ளி, தாம்பரம் ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சூரப்பேட் வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி வளாகம் ஆகிய ஐந்து இடங்களில், அக்., 12, காலை 7:00 மணி முதல் 12:00 மணி வரை நடக்க உள்ளது.


ليست هناك تعليقات:

إرسال تعليق