DEE - முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை TNSED School Appல் உள்ளீடு செய்தல் சார்ந்து- வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு - துளிர்கல்வி

Latest

Search This Site

السبت، 5 أكتوبر 2024

DEE - முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை TNSED School Appல் உள்ளீடு செய்தல் சார்ந்து- வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

தொடக்க கல்வி 2024 - 2025 ஆம் கல்வியாண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கான முதல் பருவ தொகுத்தறிவு மதிப்பெண்கள் TNSED SCHOOLS செயலி உள்ளீடு செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் தொகுத்தறி மதிப்பெண்கள் 60 கேள்வி வாரியாக அக்டோபர் 09.10.2024 தேதிக்குள் உள்ளீடு செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது
முதல் பருவத் 2024-25ஆம் கல்வி ஆண்டு மதிப்பெண்களை TNSED செயலியில் உள்ளீடு செய்தல் சார்ந்து பின்வரும் அறிவுரைகள் தொகுத்தறி மதிப்பீட்டு வழங்கப்படுகிறது. 

1. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான முதல் பருவத் தொகுத்தறி தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை TNSED. செயலியில் ஆசிரியர்கள் உள்ளீடு செய்திடல் வேண்டும். 

2. விடைத்தாள்களை திருத்திய பின்னர் தொகுத்தறி மதிப்பெண்களை (60 மதிப்பெண்கள்) கேள்விவாரியாக அக்டோபர் 09ஆம் தேதிக்குள் உள்ளீடு செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் இணைப்பில் கண்டுள்ளவாறு இணைக்கப்பட்டுள்ளது. 

3. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இது சார்ந்த விவரத்தினை தெரிவிக்குமாறும் ஆசிரியர்கள் இப்பொருள் சார்ந்து தெளிவுற அறிந்திருப்பதை உறுதி செய்யவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق