உங்களது டீனேஜ் மகள் மன அழுத்தத்துக்கு உள்ளாகி இருந்தால் அதனை கண்டறிவது எப்படி - துளிர்கல்வி

Latest

Wednesday, October 17, 2018

உங்களது டீனேஜ் மகள் மன அழுத்தத்துக்கு உள்ளாகி இருந்தால் அதனை கண்டறிவது எப்படி

கடுமையான போட்டி, அதிகபட்ச சோஷியல் மீடியா பயன்பாடு மற்றும் மாறி வரும் மனித உணர்வுகள் நிரம்பிய இவ்வுலகில் டீனேஜ் பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் அவளது பிரச்சனை என்னவென்றே தெரியாமலும் அதற்கு தீர்வு கண்டுபிடிக்க முடியாமலும் நீங்கள் திகைத்து நிற்கும் சூழல் ஏற்படலாம். வீட்டிலும் பள்ளி அல்லது கல்லூரியில் ஏற்படும் பிரச்சனைகளால் அவள் மன அழுத்தத்துக்கு ஆளாகும் போது அதன் அடையாளங்களை கண்டு கொள்வதில் உங்களுக்கு சிரமம் ஏற்படக்கூடும்.



உங்களது டீனேஜ் பிள்ளைகளுக்கு ஏற்படும் அழுத்தத்தை நீங்கள் பின்வரும் வழிகளில் கண்டுபிடிக்க முடியும் -


1. தூங்கும் வழக்கத்தில் ஏற்படும் மாறுதல்கள் -இரவு வெகு நேரம் கண் முழித்து அதனால் காலையில் லேட்டாக கண் விழித்தல், நாள் முழுவதும் பல முறை தூங்கி எழுதல், குழம்பியபடி வார இறுதிகளில் படுக்கையில் சும்மாவே புரண்டு படுத்தபடி இருப்பது. இதன் காரணம் மன அழுத்தத்தை அவளால் கையாள முடியாத நிலையாக இருக்கலாம். கல்வியில் அவளது செயல்பாடுகள், வேலைக்கான சாய்ஸ்கள், உடனிருப்பவர்களுடனான உறவு, தான் யார் என்பது குறித்த குழப்பம் ஆகியவை இள வயதினரிடையே பெரும்பாலும் ஏற்படும் கவலைக்கு காரணமாகும்.


2. பேசுவதில் ஆர்வமின்றி இருத்தல் - இரவு உணவின் போது, அனைவரும் சேர்ந்து உண்ணும் வேளைகளில் பேசுவதில் ஆர்வமின்றி இருக்கிறாளா? சில நேரங்களில் நீங்கள் பேச தொடங்கும் போது அதனை அலட்சியம் செய்து புறக்கணிக்கிறாளா? சிறு வயதில் அனைத்து விஷயங்களை பற்றியும் உங்களிடன் ஆர்வமாக பகிர்ந்து கொண்ட அவள் இப்போது அதனை முற்றிலும் தவிர்க்கிறாளா? இதன் காரணம் சுய மரியாதை குறைவு அல்லது திட்டு விழுமோ என்ற பயமாக இருக்கலாம்.



3. பேச்சு அல்லது உடல் ரீதியாக முரட்டுத்தனமாக நடந்து கொள்ளுதல் - உங்களது சிறு பெண் குழந்தை ஒரு இள நங்கையாக மாறிக்கொண்டிருக்கிறாள். உடல் ரீதியான மாறுதல்களினால் அவள் சிறு சிறு விஷயங்களுக்கு கூட கோபப்படக் கூடும். கதவினை கோபத்துடன் வேகமாக சாத்துவது அல்லது புத்தகத்தை தூக்கி வீசுவது போன்ற செயல்களை அவள் செய்வது உங்களுக்கு திகைப்பாக இருக்கக்கூடும். இதன் மூலம் அவளுக்கு ஏதோ பிரச்சனை இருப்பதையும் அதனை சமாளிக்க முடியாமல் திணறுதையும் அல்லது வளர்ச்சியின் காரணமாக ஏற்படும் மாறுதல்களை சமாளிக்க முடியாமல் குழம்புவதையும் அல்லது பரிட்ச்சை நெருங்கி வருவதால் ஏற்படும் பயத்தையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


4. பசியின்றி இருத்தல் / அதிகம் உண்ணுதல் - எல்லா நேரத்திலும் அழகாக இருக்க வேண்டும் என்ற உந்துதல் அதுவும் சோஷியல் மீடியாவுக்காக. ஒல்லியான தோற்றம் தான் "அழகான வடிவம்" என்ற கருத்து அவளது மனதில் ஆழ பதிந்து அதன் காரணமாக எடை கூடிவிடல் கூடாது என பட்டினி கிடப்பது. அதே நேரத்தில் தேர்வு குறித்த ஸ்ட்ரெஸ் அதிகமாவதால் கண்ட நேரத்திலும் சாப்பிட்டபடி இருப்பது.


5. பொதுவாக பழகும் விதத்தில் தோன்றும் மாறுதல்கள் - அதிக ஃப்ரெண்ட்லியாக நடந்து கொள்வது அல்லது தன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறாளா? புத்தகம் அல்லது மொபைல் போனில் அதிக நேரம் செலவழிக்கிறாளா? கடந்த சில மாதங்களில் அவளது நட்பு வட்டத்தில் மாறுதல் ஏற்பட்டுள்ளதா? கல்லூரி அல்லது பள்ளிகளில் போதை மருந்துக்கு அடிமையாகுதல் இப்போது ஈசியாகி வருகிறது. இதனால் அது போன்ற தீய பழக்கங்கள் கொண்டுள்ளவர்களிடம் நட்பு ஏற்பட வாய்ப்புள்ளது.


இது போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு மட்டுமே இருப்பதாக எண்ண வேண்டாம். மற்ற பெற்றோர்கள் இது போன்ற சிக்கல்களை எப்படி கையாள்கிறார்கள் என்ற சந்தேகமா? Hamam இன் மதர் சேஃப்டி ஃபோர்ஸ் இல் இணைந்து அனைத்து குழந்தைகளும் பாதுகாப்புடன் வெளியே செல்ல உதவுங்கள்



No comments:

Post a Comment