வெற்றிக்கு வழி : வெற்றிக்கு வழிகாட்டும் கட்டுரை : உங்களுக்கு ஒரு கனவு இருந்து அதை அடைவதற்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா? - ThulirKalvi

Latest

Search Here!

Tuesday, June 30, 2020

வெற்றிக்கு வழி : வெற்றிக்கு வழிகாட்டும் கட்டுரை : உங்களுக்கு ஒரு கனவு இருந்து அதை அடைவதற்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா?

வெற்றிக்கு வழி : வெற்றிக்கு வழிகாட்டும் கட்டுரை : உங்களுக்கு ஒரு கனவு இருந்து அதை அடைவதற்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா?

உங்களது வெற்றியின் முதலாவது எதிரி யார் தெரியுமா?  

உங்க பக்கத்திலேயே இருப்பவர்கள் தான். வாழ்க்கையை நீங்கள் எதைச் செய்வதாக இருந்தாலும் அதில் இவங்களோட தாக்கமும் நிச்சயம் இருக்கும்  அடுத்தவனின் தொல்லை என்பது இந்த உலகிற்கே பொதுவானதாக இருந்தாலும் இதில் அதிகமாக தலைவிரித்தாடுமிடம் நம்மள மாதிரி வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் நாடுகளில் தான்.

இந்த பதிவைப் படித்துகொண்டிருக்கும் உங்க கிட்டயே ஒரு கேள்வியை கேட்கின்றோம்.

 வாழ்வில் இதுவரை நீங்கள் மேற்கொண்ட முடிவுகளை எண்ணிப் பாருங்கள் . அதில் எத்தனை முடிவுகளை நீங்கள் சுயமாக எடுத்து இருப்பீர்கள். பெரும்பாலும் 1 2 அல்லது எதுவுமே இருக்காது. ஒரு உடையை வாங்கிப் போடுவதில் இருந்து வாழ்வின் துணையை தேர்ந்தெடுப்பது வரைக்கும் அனைத்திலுேம அடுத்தவனின் திருப்திக்கு முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டிய சூழ்நிலையில் தான் நாம இதுவரை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.  சரி இப்படி ஒரு சூழலில் வாழ்வதால் நம்ம நிம்மதி பறிபோகும் என்பது வெளிப்படையான விடயம்

 அது தாண்டி வேறு என்ன தாக்கங்கள் இதனால் நமக்கு உருவாகும்?

இங்கு ஒவ்வொரு மனிதனுக்கும் தனித் திறமைகள் இருக்கும் வாழ்வில் வெற்றி அடையும் நீ நினைத்தால் அதை உங்களிடம் உள்ள தனித் திறமைகளை கொண்டே அடைய முடியும்.

இருந்தாலும் டாக்டராக இன்ஜினியராக தும் தான் வெற்றி என்ற மனநிலை நம்ம சமூகத்தில் மேலும் இருப்பதாலே இங்கே இருக்கும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தங்களது தனித் திறமைகளை வெளிக்கொண்டு வருவது மிகக் கடினமாகவே மாறியுள்ளது.

உலகில் எங்கு பார்த்தாலும் மேற்கத்தைய நாடுகளின் ஆதிக்கம் தான் சாதனைகள் கண்டுபிடிப்புகள் என நம்மிடம் வருபவை எல்லாம் ஏதோ ஒரு அமெரிக்கரின் படைப்பாகத்தான் இருக்கும்.  

ஏன் அதை இந்தியாவில் இருக்கும் ஒரு மாணவன் செய்யக்கூடாதா சனத்தொகையை கோடிகளில் எண்ணிக் கொண்டிருக்கும் நமக்கு சாதனைகளைப் பத்தின் மடங்கில் கூட எண்ண முடியாமல் இருப்பது ஏன்? 

நம்ம புத்திசாலிகள் இல்லையா நிச்சயம் இருக்கிறார்கள் ஆனால் அவர்களை யாரும் ஊக்குவிப்பதில்லை நிச்சயம் ஊக்குவிப்பு உங்களுக்கு மிகப் பெரும் நம்பிக்கையை தரும் 

ஆனால் இக்காலத்தில் யாரிடம் இருந்தும் அதை எதிர்பார்க்காதீர்கள் உங்க வெற்றிக்குத் தேவையான ஊக்குவிப்பை நீங்களே உங்களுக்கு கொடுத்துக் கொள்ளுங்கள் 

அதிகம் தாண்டி டாக்டராக இன்ஜினியராக வேண்டும் என்ற இந்த தேவையற்ற அழுத்தம் தான் இன்று பல மாணவர்களின் தற்கொலைகள் காரணமாக இருக்கின்றது.  நம்ம மாணவர்களின் இந்த மனநிலையே நாம மாற்றித்தான் ஆக வேண்டும். 

நீ கஷ்டப்பட்டு படித்து உன்னால டாக்டராக முடியலேன்னா உனக்கு புடிச்ச மாதிரி வேற ஒண்ணா ஆகிக்கோ ஆர்வத்தோடு செஞ்சா எந்த வேலையும் சந்தோஷமாகத்தான் இருக்கும் ஆர்வம் என்பது நிச்சயம் நமக்கு பல துறைகளில் இருக்கலாம் ஒரு துறையை உங்களுக்கு கிடைக்கலன்னா அடுத்த துறைக்கும் மாறிடுங்க.  

என்றும் தோல்வியை கண்டு பயம் கொள்ளாதீர்கள் தோற்காம ஜெயிச்சவன் இங்கு இங்கு எவனும் இல்லை.  நீங்கள் வாழ்க்கையில் வெற்றி அடையும் நினைச்சா முதல்ல எவனையும் கண்டுக்காதீங்க உங்களுக்கு ஒரு கனவு இருந்து அதை அடைவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் தைரியமாக அதை பயன்படுத்தி பாருங்க 

உங்க முயற்சியை நிச்சயம் ஒரு கூட்டம் எதிர்க்கும் உங்களை மட்டம் தட்டும் உங்களால் எதுவும் முடியாது எனக் கூறும் இவங்க கதை எல்லாம் நீங்க கேக்க ஆரம்பிச்சா நிச்சயம் வெற்றி என்பது எட்டாக் கனிதான் 

இந்த உலகம் என்றும் புதிய முயற்சிகளை ஏற்றுக்கொண்டதில்லை உங்க முயற்சியும் வழமைக்கு மாறாக இருந்தால் நிச்சயம் உங்களையும் இதை ஏற்றுக் கொள்ளாது. அதை எண்ணி நீங்க வருந்த தேவை இல்லை உங்க முயற்சி சரியானதுதான் என யாரிடமும் நிரூபிக்க தேவையும் இல்லை நீங்க செய்ய வேண்டியது எல்லாம் உங்க முயற்சியை தொடர்வது மட்டுமே

 அங்கு நீங்க அடையவிருக்கும் வெற்றி உங்களை விமர்சித்தவர்கள் வாயெல்லாம் அடைத்துவிடும். இப்படியான விமர்சனங்களை நீங்கள் எதிர்கொள்ளும் போது ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள் இன்று நாம பார்த்து வியந்து கொண்டிருக்கும் வெற்றியாளர்கள் எல்லாம் ஏதோ ஒரு காலத்திலே இந்த உலகத்தால புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டவர்கள் தான் 

ஆனால் அவங்க அந்த புறக்கணிப்புகளையும் விமர்சனங்களையும் கண்டுக்காதே தங்களது இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தார்கள் அந்த விடாமுயற்சியே அவர்களை வெற்றியாளர்கள் ஆக்கியது 

நீங்களும் இதே வழியை தான் பின்பற்றியாக வேண்டும் உங்களை ஒருவர் விமர்சிக்கும் போது அது கவனமாக கேளுங்கள். அவர் சொல்வது சரியா உங்ககிட்ட மாற்ற வேண்டிய பழக்கங்கள் இருக்கா என்பதை சிந்தியுங்கள் அப்படி மாற்ற வேண்டியதை மாற்றுங்கள்.  

ஆனால் அந்த விமர்சனம் உங்களை மட்டம் தட்டுவது ஆக இருந்தாலோ அல்லது உங்கள் தன்னம்பிக்கையையும் உடைப்பதாக இருந்தாலோ அந்த நொடியிலேயே அதை மறந்து விட்டு அங்கிருந்து நகர்ந்து விடுங்கள் அதைதான் வெற்றியாளர்களும் செய்வார்கள்.