பலா மஞ்சள் குரங்கு மஞ்சள் மற்றும் நாகமஞ்சள் பற்றி பார்ப்போம் - ThulirKalvi

Latest

Search Here!

Monday, June 29, 2020

பலா மஞ்சள் குரங்கு மஞ்சள் மற்றும் நாகமஞ்சள் பற்றி பார்ப்போம்

பலா மஞ்சள் குரங்கு மஞ்சள் மற்றும் நாகமஞ்சள் பற்றி பார்ப்போம்



பலா மஞ்சள்


பலா மஞ்சள் என்பது மஞ்சள் வகைகளில் ஒன்று. இது பலா மரத்தின் சில பகுதிகளில் மஞ்சள் போன்று ஒட்டிக்கொண்டிருக்கும். இதற்கு தனியாக வேர் கிடையாது.  இலை பூ என்று எதுவுமில்லை. இது பலா மரத்தின் சத்தை உறிஞ்சி வளர்கிறது. இந்த பலா மஞ்சளுக்கு நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு. 

இது வீக்கத்தைக் குணப்படுத்துவதில் தன்னிகரற்றது. எத்தகைய வீக்கமாக இருந்தாலும் இந்த மஞ்சளை கல்லில் உரைத்து வீக்கத்தின் மீது பற்றுப் போட்டு வர வாடிவிடும். கடகை வீக்கம் என்பதைத்தான் புட்டாலம்மை எனஙபர். இதையே பொன்னுக்கு வீங்கி என்றும் கூறுவர்.  இதற்கு பலா மஞ்சளை உரைத்து பற்றாகப் போட வீக்கம் வற்றிவிடும். அம்மை நோய் கண்டவர்களுக்கு முகத்திலும் உடலிலும் மருக்கள் தோன்றி இருக்கும் . அந்நிலையில் பல மஞ்சளை நெருப்பில் சுட்டு கரியாக்கி அதை பொடித்து அத்துடன் தேங்காய் எண்ணெய்விட்டு குழைத்து பூசி வர படிப்படியாக மறைந்துவிடும்.

குரங்கு மஞ்சள் 


மஞ்சள் வகைகளில் குரங்கு மஞ்சள் ஒருவகைஃ இது கொடி இனத்தைச் சேர்ந்தது. இது காடுகளில் அதிகம் வளர்ந்திருப்பதைக் காணலாம். காட்டு குரங்குகள் இதன் இலைகளை பறித்து தன் முகத்தில் விருப்பமுடன் தேய்த்துக் கொள்ளும். அதனாலேயே குரங்கு மஞ்சள் என்று பெயர் பெற்றது. இதனுடைய காயும் மிளைக விட சற்று பெரியதாக இருக்கும். இந்த மஞ்சள் செடியின் இலையும் காயும் மருத்துவ குணம் நிறைந்ததாக உள்ளன.  இந்த மஞ்சள் ஊரல் தழுவணை, தேமல் போன்ற நோய்களை குணமாக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதன் இலை மதுமேகம் எனும் நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக திகழ்கிறது. இதன் இலையை சுத்தப்படுத்தி அம்மியில் வைத்து மைபோல அரைத்து 40 நாட்களுக்கு உள்ளுக்கு அருந்தி வர நீரிழிவு நோய் கட்டுப்படும்.

இத்துடன் நீர் இரக்கம் நீர்த்தாரையில் புண் கடுப்பு போன்றவற்றை குணமாக்கும் குரங்கு மஞ்சளில் தாய் விஷத்தன்மை உள்ளது இருந்தாலும் இதையே மருந்தாக பயன்படுத்தி விஷத்தை முறிப்பது நோய்க்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது மற்றும் தலைச்சுற்றல் போன்றவற்றை குணமாக்க வல்லது

நாக மஞ்சள் 

நாக மஞ்சள் என்பது மஞ்சள் வகைகளில் ஒன்று. இது கொடி இனத்தைச் சேர்ந்தது.  இது மருத்துவ குணம் நிறைந்தது ஆகும். கஸ்தூரி மஞ்சள் போன்றே இதுவும் ஒரு வகை வாசனை பொருந்தியதாகும். நாக மஞ்சள் பல வகை நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றதாக உள்ளது, சன்னிவாதம், வலி, சீதளம், வெட்டுக்காயம் போன்றவற்றை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது. கொடிய விஷத்தையும் முறிக்கும் தன்மை உண்டு. நாக மஞ்சளை தீயில் சுட்டு கரியாக்கிய சூரணத்தை விளக்கெண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி மேல் பூச்சாகப் ஓட மூல மூளை கரையும்,

 புரையோடி இருக்கும் புண்கள் மீதும் தடவி வர குணமாகும். இடத்தை நல்லெண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி மேல் பூச்சாகப் தடவி வர கரப்பான் போன்ற சரும நோய்கள் குணமாகும். இதையே  தேங்காய் எண்ணையுடன் சேர்த்து காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வரலாம். இதனால் சன்னி வலிப்பு நோய்கள் குணமாகும்.  

இதன் இலையை பறித்து அம்மியில் வைத்து மை போல அரைத்து  மகோதரம் நீராம்பல், வீக்கம், நீர் வடிதல் போன்றவற்றிற்குப் பயன்படுத்த குணமாகும்.  

இதன் இலை கல்கத்தை உடல் முழுவதும் பூசி வர வேண்டும்.  அவ்வாறு பூசும் போது உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி விடும். இது நல்லெண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி உடலில் தேய்த்துக் குளித்து வரலாம் இதனால் உடலில் வீக்கம் குணமாகும்.

குஷ்ட நோயாளிகள் இந்த இலையின் வாசனையை நுகர்ந்து வர சருமத்தில் ஏற்பட்டுள்ள தினவுகள் குறையும.