உமிழ்நீரின் முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கியமாக உள்ளவர்களின் நகங்கள் எப்படி இருக்கும்? அசத்தலான விள்க்கம். - துளிர்கல்வி

Latest

Saturday, July 18, 2020

உமிழ்நீரின் முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கியமாக உள்ளவர்களின் நகங்கள் எப்படி இருக்கும்? அசத்தலான விள்க்கம்.

உமிழ்நீரின் முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கியமாக உள்ளவர்களின் நகங்கள் எப்படி இருக்கும்? அசத்தலான விளக்கம்.


1. உமிழ்நீரின் முக்கியத்துவம்


ஆங்கிலத்தில் சலைவா (Saliva) என்று அழைக்கப்படும் எச்சில் நீர் 99.5 சதவீதமும் திடப்பொருள் 7.5 சதவீதமாக உள்ளது.  இது நிறமற்ற மேற்புறம்  ஒரு வகையான மேகமூட்டம் தன்மையுடன் காணப்படும். இதற்கு காரணம் எச்சிலில்  உள்ள செல்களும் மஸ்கின்  என்ற பொருளும் ஆரோக்கியமான மனிதனின் வாயில் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லிட்டர் முதல் 1.5 லிட்டர் வரை நீர் சுரக்கிறது. இது அமிலத்தன்மை கொண்டது. இதன்  பிஎச் மதிப்பு 6.02 லிருந்து 7.05  வரை வேறுபடும். 

செலுவார் பகுதிப் பொருட்களாக உமிழ்நீரில் வெள்ளை அணுக்கள்  ஈஸ்ட் பாக்டீரியா புரோட்டோசோவா முதலியவை உள்ளன.  சலைவாவின் கனிம உறுப்புகளாவன:  சோடியம் குளோரைடு, பொட்டாசியம் குளோரைடு, கால்சியம் பாஸ்பேட், சோடியம் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம். 

உமிழ்நீரில் உள்ள என்சைம்கள் டையலின் லிப்பேஸ் கார்பானிக் அன்ஹைடிரேஸ் லைசோசோம். 

இதில் உள்ள கரிம பொருட்கள் அமினோ அமிலங்கள் வைட்டமின்கள் மற்றும் கொலஸ்ட்ரால்.

வாயுக்களான ஆக்சிஜன் ஹைட்ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு போன்றவை கூட எச்சிலில் உள்ளன. 

வாயினை ஈரமாக வைத்துக் கொள்ள உதவும் உமிழ்நீரினால் பேசுதல் தெளிவாக்க படுகிறது. 

உணவுடன் கலந்து உணவு செரித்தல் முக்கிய பங்காற்றுவது உமிழ்நீர் ஆகும். 

உமிழ்நீரில் கலந்துள்ள பைகார்பனேட்கள் பாஸ்பேட்டுகள் முதலியன தாங்கல் கரைசலாய் செய்யப்படுகின்றன. எஞ்சிய உணவுகளை அகற்றுவது உமிழ்நீரே இதனால் பாக்டீரியா பற்களின் இடுக்குகளில் வளர்வது குறைக்கப்படுகிறது.

மியூகஸ் சவ்வுக்கு  ஊறு விளைவிக்கும் பொருட்களில் வீரியத்தை குறைக்க உதவுகிறது.  சூடான உணவுப் பொருட்களை குளிர்விக்கப் பயன்படுவது உமிழ்நீர். சுவை அறிதல் வாய்க்குழியின்  உயவு பொருள் தாகத்தை தணிப்பதும் இதுவே.


2. ஆரோக்கியமாக உள்ளவர்களின் நகங்கள் எப்படி இருக்கும்?


லேசான சிவப்பு நிறத்தில் சற்று பளபளப்பாக இருக்கும் 

கைவிரல் நகங்களில்  அரை வட்ட வடிவம் போன்று  காணப்பட்டால் உடம்பில்  ரத்த ஓட்டம் சீராக உள்ளது என்று அறிந்து கொள்ளலாம்.

நகங்களில் சொத்தை விழுந்து கறுப்பாக காணப்பட்டால் உடலுக்கு போதிய சத்தான உணவுப்  பொருள் கிடைக்கவில்லை என்று அர்த்தம். உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

நகங்கள் மிகவும் சிவப்பாக காணப்பட்டால் உடலின் ரத்த அளவு அதிகம் இருக்கறது என்றுப் பொருள். இவர்களுக்கு ரத்த கொதிப்பு நோய் வர வாய்ப்பு உண்டு 

கைவிரல் நகங்களில் வளர்பிறை காணப்படவில்லை என்றால் உடலில் சீரான இரத்த ஓட்டம் இல்லை என்று பொருள். 

விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் அவர்கள் இதயத்தை பலப்படுத்தும் மருந்துகளை உண்டு இதயத்தை வலிமையானதாக்க வேண்டும்.

விரல் நகங்கள்  மஞ்சள் வண்ணத்தில்தென்பட்டால் நிகோடின் விஷம் அவர்கள் ரத்தத்தில் ஊறி இருக்கிறது என்று அர்த்தம். இப்படிப்பட்டவர்கள் புகையிலையை அறவே விட்டுவிட வேண்டும். சுருட்டு பீடி சிகரெட் பொடி ஆகியவற்றை உடனே நிறுத்த வேண்டும்.

கை விரல் நகங்கள் உப்பினால் போல் இருந்தால் அவர்களுக்கு ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான வியாதிகள் வர வாய்ப்புண்டு என்பதை தெரிந்துகொள்வது நல்லது.

கைவிரல் நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் காணப்பட்டால் உடல் நலம் குறைந்து இருக்கிறது என்று அறியலாம். தக்க மருந்துகளை உண்டு உடல் நலத்தை மீண்டும் பெற்றால் வெள்ளைப்புள்ளிகள் மாயமாக மறையும்.

கைவிரல் நகங்கள் வெளுத்து காணப்பட்டால் உடலில் போதிய அளவு ரத்தம் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.

No comments:

Post a Comment