சிறுதொழில் செய்து சம்பாதியுங்கள் || தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் ஆலோசனைகள் - ThulirKalvi

Latest

Search Here!

Thursday, July 9, 2020

சிறுதொழில் செய்து சம்பாதியுங்கள் || தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் ஆலோசனைகள்

சிறுதொழில் செய்து சம்பாதியுங்கள் || தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் ஆலோசனைகள்.

இந்த பகுதியில் தரப்பட்டிருக்கும் பல தொழில்களை சிறிய இயந்திரங்கள் உதவியுடன் செயல்படுத்தினால் உற்பத்தி அதிகமாகி அதிக லாபம் சம்பாதிக்க முடியும்/ இந்த தொழில்களை செய்வதற்கு ஏறத்தாழ 50000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். 

தொழிலுக்கான இயந்திரங்கள் பெரும்பாலும் கோயம்புத்தூர் பகுதியில் தயார் செய்யப்படுகின்றன. சென்னை நகரில் பாரிமுனை பகுதியில் உள்ள தம்பு செட்டி தெரு லிங்கி செட்டி தெரு போன்ற தெருக்களில் உள்ள எந்திரங்கள் விற்பனையாளர்களிடம் கிடைக்கும். உடனடியாக கிடைக்கவில்லை என்றாலும் ஆர்டர் கொடுத்தால் தந்துவிடுவார்கள். மற்றும் தமிழகத்தின் பெரிய நகரங்களில் உள்ள தொழில் எந்திர விற்பனையாளர்கள் மூலமும் பெறலாம்.எந்திரங்களை வாங்கும்போதே அவற்றை இயக்குவதற்கான வழிவகைகளையும் சொல்லித்தருவார்கள். மற்றும் உங்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் அளிப்பார்கள்.


எந்த தொழில் தொடங்கினாலும் எடுத்த எடுப்பிலேயே எல்லாம் சரியாக அமைந்துவிடும் என்று எதிர்பார்க்கக்கூடாது. இயந்திரங்களை இயக்கும் பொருள்களை உற்பத்தி செய்யும் போதும் பல சிக்கல்கள் குறுக்கிடத்தான் செய்யும். மனம் தளராது பிரச்சனைகளை சமாளிக்க வேண்டும்.

மனம் விரும்பிய போக்கில் எடுத்து தொழிலை செய்தாலும் வெற்றி கண்டுவிட முடியும் என எண்ணக்கூடாது. உங்களுக்கென ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்துக்குமுன் அது குறித்து தீர்க்கமான சிந்தனை செய்ய வேண்டும். உங்களுக்கு எந்த தொழிலில் ஆர்வம் இருக்கிறதோ அதைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டும். தேர்ந்தெடுத்த பின் தொழிலை அடிக்கடி மாற்ற நினைக்கக்கூடாது.

எந்த அளவுக்கு உங்களால் மூலதனத்தை திரட்ட முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். கடன் வாங்கிய மூலதனத்தை திரட்ட கூடாது.  கடன் வாங்கித்தான் ஆக வேண்டும் என்றால் குறைந்த வட்டிக்கு பணம் பெற வங்கிகளை நாடலாம். இயந்திரங்கள் உதவியுடன் புதிதாக தொழில் தொடங்குவோருக்கு அரசாங்கமும் கடன் தருகிறது. வங்கிகளும் கடன் தருகின்றன. 

வங்கிகள் கடன் தரவதில் சிக்கல் ஏதும் இல்லை. வங்கிகள் தொழில் தொடங்குவோர் தம் தொழிலுக்கென தேர்வு செய்து வாங்க கூடிய எந்தரங்களின் விலைக்குரிய தொகையை நேரடியாக  தொழில் தொடங்குவோற்கு தரமாட்டார்கள். எந்திர விற்பனையாளர்களுக்குத்தான்  பணம் தருவார்கள்.  எந்திரத்தின் முழு ஆவணங்களையும் கடன் திருப்பி செலுத்தப்படும்வரை தங்கள் பொறுப்பிலே  வைத்திருப்பார்கள்.  

கடனைத் திருப்பித்தருவதில் சிக்கல் ஏற்பட்டால் எந்திரத்தை பறிமுதல் செய்து விடுவார்கள்.  நீங்கள் நாணயமாக நடந்து கொண்டால் இந்த பிரச்சினை பிரச்சினை எழ வாய்ப்பில்லை.  தொழிலில் ஆர்வமும், ஊக்கத்துடன் கூடிய உழைப்பும் தளராத மன உறுதியுடன் கூடிய செயற்பாடும் இருந்தால் தொழில் வெற்றிக்கு நிச்சயமான உத்தரவாதம் உண்டு.

1. ஆஸ்பிட்டல் கூரைத்தகடு 

ஆஸ்பெஸ்டாஸ் என்னும் இந்த கல்நாரின் உபயோகத்தை பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரிய நாட்டினர் அறிந்தனர். பின்பு அது உலகெங்கும் பரவியது. இந்தியாவில் இன்று சுமார் 60 மில்லியன் தகடுகள் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுகின்றன. தொடக்கத்தில் வெறும் பலகை போன்ற சமப் பப்புர ததந்தார்கள் தகடுகளாக கல்நார்கள் தயாரிக்கப்பட்டன. பின்பு அவை காலத்திற்கு ஏற்ப நவீன வடிவமைப்பில் தயாரிக்கப்படும் நிலையை அடைந்தன. இவ்வகை தகட்டமைப்பில் பாலிதின்கள் தற்போது தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. பாலிதீன் தகடுகள் அலங்காரம் கவர்ச்சியாயும் இருக்குமே தவிர கல்நார் தகடுகள் போல உறுதியாகவும் நிலையாகவும் இரா. பாலிதீன் தகடுகள்  பெருங் காற்றடித்து பீய்த்து கொண்டு போய்விடும்.

தகரங்களும் கல்நார்  தகட்டமைப்பில் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் தகரங்களை மக்கள் பெருமளவு விரும்பவில்லை. ஏனெனில் அவை எளிதில் வெப்பத்தை கிரகித்து வெளியிடும் இயல்பு உள்ளவை.  தகரங்கள் வெயில் காலங்களில் தாங்க முடியாத அனலை கடத்தும் என்பதால் அவற்றை அதிகமாக பயன்படுத்த பெரும்பாலானோர் முன்வருவதில்லை. ஆகவே நவீன வாழ்க்கையுடன் இணைந்துவிட்ட கூரைத்தகடு களைத் தயாரித்து  விற்பதன் மூலம் நிரந்தர வருவாய் பெறலாம்.

மாதம் ஒன்றுக்கு சுமார் 20 ஆயிரம் வரை லாபம் ஈட்டக்கூடிய அளவில் ஒரு கல்நார் தொழிற்சாலையை அமைக்க ஆயிரம் சதுர மீட்டர் நிலம் 350 சதுர மீட்டர் பரப்பளவும் கட்டடமும் 15 லட்ச ரூபாய் முதலீடும் தேவையாகும்.

கல்நார் தகட்டுத் தொழிலுக்குத் தேவையான மூலப் பொருள்கள் 


  • முதல் தரக்கல்நார்
  • போர்ட்லேண்ட் சிமெண்ட்
  • சுத்தமான தண்ணீர் 


தயாரிப்பு முறை 

கலவை இயந்திரத்தில் கல்நாரையும் சிமெண்டையும் இட்டு சீராக கலந்தபின் அதை திண்ணிங் வெஸ்ஸல் என்னும் இயந்திரத்திற்கு மாற்ற வேண்டும். அங்கு தண்ணீர் சேர்க்கப்பட்டு கரைசலாக மாற்றப்படுகிறது. கல்நார் தகடுகள்  எந்த அளவிற்கு எந்த கணத்தில் வேண்டுமோ அவற்றிகு தகுந்தபடி கல்நார் கரைசல்  கொரகேஷன்  என்னும் வடிவமைப்பு இயந்திரத்திற்குள் செலுத்தப்படுகிறது. 

இவ்வாறு வார்ப்பு அச்சுகளில் கரைசல் படிந்ததும் மிக அதிகமான அழுத்தம் கொடுக்கப்பட்டு உபரி தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு கல்நார் தகடுகள்  உறுதிப் படுத்தப்படுகின்றன. 

அதற்கு பின் அவை சுமார் 48 மணி நேரத்திற்கு உலர வைக்கப்பட்டு  நிலைப்படுத்தப்படுகின்றன. அவை வெப்ப உலைகளில்  குறிப்பிட்ட அளவுக்கு வெப்பப்படுத்தப்பட்டு முழுமைபெற்ற தகடுகளாக விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

தேவையான இயந்திர சாதனங்கள் 


  • ஆஸ்பெஸ்டாஸ் ஓப்பனர் கலவை இயந்திரம் 
  • திண்ணிங் வெஸ்ஸல் 
  • வேகம்  பாக்ஸ் 
  • கொரகேஷன் மிஷன் 
  • வெப்ப உலை 


குறிப்பு :  சிமெண்ட் கல்நார் ஆகியப் பொருட்களை காற்று நீர் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பான இடங்களில் சேமித்து வைக்கவேண்டும்.


2. தார் காகிதம் தயாரித்தல்

இரசாயனப் பொருட்கள் பூச்சி மருந்தகள் பயிர் உரங்கள் துணிகள் ஆகியவற்றிற்கு சிப்பம் கட்டும் பொருளாக பெருமளவுக்கு பயன்படுபவை தார்காகிதங்கள் ஒட்டப்பட்ட சாக்குகளாகும்.இவை அனல்  துணி அல்லது பாலிதீன்களில் இருக்கும். காற்று மற்றும் ஈரத்தினால் கெட்டுவிடாமல் பொருள்களை பாதுகாக்கவே இந்த தார் காகிதங்கள் ஒட்டப்படுகின்றன.

பட்டாசு மத்தாப்பு தீப்பெட்டி போன்ற பயர் ஒர்க்ஸ் பொருள்கள் இந்த தார் காகிதங்களால் சுற்றப்பட்டு பின்னரே சிப்பம் செய்யப்படுகின்றன.  நிலையான தேவையும் வர்த்தக வாய்ப்பும் உள்ளதால் காகிதங்களை தயாரித்து விற்பது நல்ல வருவதற்குரிய வழிகளில் ஒன்றாகும்.

ஆண்டிற்கு சுமார் 75 ஆயிரம் ரூபாய் நிகர லாபம் ஈட்டும் தார்காகித தொழிற்சாலை அமைப்பதற்கு 500 சதுர மீட்டர் இடம் 250 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட கட்டடம் 25 லட்சம் முதலீடும் தேவையாகும்.

தேவையான மூலப்பொருட்கள் 

ஸ்டில் தகடுகள் 24 முதல் 28S770 WG 120-160 மெஸ் பவுடர்கள் எமரி பவுடர் அல்லது டிரிப்போலி வெள்ளை பாலிஜ் பவுடர்கள் ரிவிட்டுகள், ஸ்டிக்கர்.

தயாரிப்பு முறை 

ஸ்டீல் தகடுகளை தயாரிப்பு பொருள்களுக்கு தேவையான அளவில் வட்ட வடிவ வில்லைகளாக சர்க்கிள் கட்டர்களில் நறுக்க வேண்டும். அவ்வில்லைகளை டபுள்ஆக்ஸன் பவர் பிரஸ்களில் செலுத்தி முதற்கட்ட வடிவமைப்பு உருவாக்க வேண்டும். பின்பு அவற்றிற்கு ஸ்பின்னிங் லேத்  மூலம் இறுதி வடிவம்  அளிக்கப் பட வேண்டும்.

அவை பாலிஷ் செய்யப்பட்டபின் பினிஸிங் கொடுக்கப்பட்டு தயாரிப்பு நிறைவு செய்யப்படுகிறது.  டம்ளர்கள் சிறிய மற்றும் பெரிய குவளைகள் தட்டுகள் சட்டிகள் டப்பாக்கள்  போன்றவை இம்முறையில் தயாரிக்கப்படுகின்றன. வாளி கூஜா தூக்குகள் போன்ற பொருட்கள் அவற்றின் உதிரிபாகங்கள் செல்டு மற்றும் ரிவிட்டிங் செய்யப்பட்டு உருவாக்கப்படுகின்றன.

தேவையான இயந்திர சாதனங்கள்


  • ஸ்பின்னிங் லேத் 1 
  • சியரிங் மிஷின் 1 
  • ரவுண்டு ரோஸ் டூல் 1 
  • ரைஸிங்கப்டூல் 2 
  • நாப்ரைஸர் 2 
  • டர்னிங் ஓவர் டூல் 2 
  • குரூப் கட்டிங் டூல் 2 
  • பிளானர் 2 டிரிம்மர் 2 
  • பாலிஷிங் வீல் 1 மற்றும்
  • வெல்டிங் சாதனங்கள். 


குறிப்பு : தமிழ்நாட்டில் சேலத்தில் தயாரிக்கப்படும் ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் தகடுகளில் செய்யப்படும் பாத்திர வகைகளுக்கு தனியான வர்த்தக மதிப்பு உள்ளதால் அவ்வகை ஷீட்களைப்  பயன்படுத்துவது சிறப்பாகும்.