ஓமம் மருத்துவ குணங்கள் - ThulirKalvi

Latest

Search Here!

Tuesday, July 28, 2020

ஓமம் மருத்துவ குணங்கள்

ஓமம் மருத்துவ குணங்கள் 

ஓமம் பூண்டு வகை செடியில் இருந்து கிடைக்கிறது.  ஓமப்பழம் பழுப்பு நிறத்தில் சாம்பல் பூசியது போலிருக்கும்.  இதன் ஆங்கில பெயர் அஜோவான்  ஆகும். குடை பூங்கொத்து வகைக் குடும்பத்தை சேர்ந்தது.  

இது உலக அளவில் ஈரான் எகிப்து ஆப்கானிஸ்தான் இந்தியா ஆகிய நாடுகளில் பயிராகிறது.  இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பயிராகிறது.

ஓமத்தின் குடைப்பு இனம் 270 பிரிவுகளும் 2500 வகைகள் உள்ளது.  ஓமம் அக்டோபர் நவம்பர் மாதங்களில் பயிரிடப்பட்டு மே ஜூன் மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது.  உணவுக்கான நறுமணப் பொருளாக பயன்படுகிறது.  ஆக்சிகரணத்தைன  தடுப்பதற்கும் இது பயன்படுகிறது. பதனிடப்படுவதற்கும் மருந்து தயாரிப்பிற்கும் இது பயன்படுகிறது.  வாசனைப் பொருள் தயாரிக்கவும் இது உதவுகிறது.  இதிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. ஓமத்தை அரைத்து  நீராவி மூலம் வடித்து எடுத்தால்  2.5 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை தைலம் கிடைக்கும். 

இதில் தைமால் என்ற பொருள் கிடைக்கிறது.  ஓமம் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.  அங்கு அதை வடி்த்தெடுத்து தைலம், தைமால் தயார்த்தார்கள்.  அங்கு செயர்க்கை  தைமால் தயாரிப்பு தொடங்கிய பிறகு இங்கிருந்து ஏற்றுமதி நின்றது. 

இதன் தைலம் நிறமற்றதாக இருக்கும். இதற்கு தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது ஆகும்.  இதன் தைமால் மருந்து வகைகளுக்கு பயன்படுகிறது. அறுவை சிகிச்சையில் இது கிருமி நாசினியாக பயன்படுகிறது.  குடல்புழு அகற்றும் மருந்து இந்த தைலத்தில் தயாரிக்கப்படுகிறது.  நீர் சேர்த்த கரைசல் வாய் கொப்பளிக்க உதவுகிறது.  பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது.  காலராவுக்கு தடுப்பு மருந்தாக பயன்படுகிறது.

வயிற்றுப் பொருமல், பெருங்குடல் நோய்,  வயிற்றுக்கக் கடுப்பு,  உணவு செரியாமை,  வயிற்று வலி ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. ஓமத்தைத் தனியாகப் பயன்படுத்தாமல்   கடுக்காய்,  பெருங்காயம் போன்றவற்றுடன்  கலந்து பயன்படுத்துவார்கள்.  கீல் வாத நோய்,  நரம்பு வலி ஆகியவற்றிற்கு இந்த தைலத்தை தடவி சிகிச்சை மேற் கொள்வார்கள். செரிமானத்துக்கு ஓம உப்பு கலந்து கொடுப்பது விட்டு  வைத்தியம் ஆகும். மயக்கமற்றவர்களுக்கு கைகால்களில் ஓமச்சாந்து தடவி  ஒத்தடம் கொடுப்பார்கள். அடிக்கடி கோழை வருவது ஓமம் சாப்பிட்டால் நின்று விடும். ஓம இலைகள் புழுக்களைக் கொல்லும் தன்மை கொண்டவை. ஓம வேர்களும் மருந்துக்கு  பயன்படுத்தப்படுகிறது. இதுவே ஓமத்தின் மருத்துவ பயன்களாகும்.