குளிர்காலத்தில் நம் உடல் ஏன் நடுங்குகிறது - ThulirKalvi

Latest

Search Here!

Wednesday, July 1, 2020

குளிர்காலத்தில் நம் உடல் ஏன் நடுங்குகிறது

1. குளிர்காலத்தில் நம் உடல் ஏன் நடுங்குகிறது

மனித உடலின் வெப்பம் 37.1 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கவேண்டும் . இவ்வெப்பநிலை ஆங்கிலத்தில் கிரிடிகல் லெவல் என்று அழைக்கப்படுகிறது .குளிர் காலத்திலோ காய்ச்சலின் போது நாம் குளிர்ச்சியான சூழ்நிலையில் அமர்ந்திருக்கும் போது உடலின் வெப்பநிலையானது குறைந்துவிடும். 

இதை அறிந்து கொள்ளும் மூளையின் ஹைப்போ தலாமஸ் பகுதியானது உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் படி தண்டுவடத்திற்கு கட்டளை பிறப்பிக்கிறது. உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் பொருட்டு தண்டுவடமானது  உடலின் தசைகளை இறுக்கி உடல் தக்கவைத்து கொள்ள வேண்டிய வெப்பநிலையான 37.1 டிகிரி செல்சியஸ்  அதற்கு மேலான வெப்பநிலைக்கு கொண்டு வருகிறது.

குளிர்காலத்தில்  நமது உடலின் தசைகள் இறுகுவதாலேயே நமது உடலில் நடுக்கம் உண்டாகிறது. பொதுவாக குளிர்காலத்தில் பறவைகளும் பாலூட்டிகளுமே அதிக நடுக்கம் பெறுவதை  நாம் காணமுடியும். நீர்வாழ் உயிரினங்களோ பாம்பு போன்ற ஊர்வனவோ அதிகம் நடுங்குவதில்ைல என்பது குறிப்பிடத்தக்கது.

2. குளிர்காலத்தில் நாம் மூச்சு ஏன் புகைபோல் வெளியேறுகிறது?

பொதுவாக நாம் வெளிவிடும் மூச்சுக் காற்றில் கார்பன் டை ஆக்சைடும் நீராவி யும்நிரம்பி உள்ளன.  நாம் வெளிவிடும் மூச்சு காற்று 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உள்ளது.  வெளிப்புற வெப்பநிலையோ மூச்சுக்காற்றை விட சற்று குறைவாகவே அமைந்திருக்கும்.  அவ்வெப்ப நிலையில் நமது மூச்சுக் காற்று வெளி காற்றோடு கலந்து விடும்.  எனவே அது நமது கண்ணுக்குப் புலப்படாது.  ஆனால் குளிர் காலத்திலோ குளிர் பிரதேசங்களிலோ வெளிக் காற்றின் வெப்பநிலை மிகவும் குறைவாக இருக்கும்.  அவ்வேளைகளில் நமது மூச்சுக்காற்று வெளியேறியவுடன் தனது வெப்பநிலையில் பத்து டிகிரி சென்டிகிரேட் குறையும்.  எனவே அதில் உள்ள நீராவியும் கார்பன்-டை-ஆக்சைடு மிகச் சிறிய நீர் திவலைகள் ஆக மாறிவிடும்.  அவை வெளிக்காற்றில்  உடனடியாக கலக்காமல் மிதந்து செல்லும். அந்நீர்த்திவலைகளே   நமது கண்களுக்கு புகைப் போலத் தோன்றுகின்றன.

3. தோளில் மச்சம் எவ்வாறு தோன்றுகிறது?

மச்சம் என்பது ஒருவர் பிறக்கும் போதே அவரது தோளின் மீது அமைந்துள்ள கரும் பழுப்பு மற்றும் கருப்பு நிறப் புள்ளிகள் ஆகும்.  மச்சம் அதிகப்படியாக 6 மில்லி மீட்டர் குறுக்களவுக்கும் குறைவாகவே காணப்படும்.  மச்சத்தின் விஞ்ஞானப்பெயர் நெவஸ் என்பதாகும்.

 நமது உடலில் உள்ள தோலின் மேல்பாகம் எபிடெர்மிஸ் என்றும் அடிபாகம் டெர்மிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. டெர்மிஸ்  பகுதியில் மெலனின் என்னும் நிறமி பொருளின் தனி செல்கள்  கெராட்டினோசைட்ஸ் என்னும் செல்களுடன் இணைந்து வட்டவடிவில் உருமாறுகிறது. இதுவே மச்சம் என்பது ஆகும்.

 இந்த மெலெனோசைஸ் என்னும் செல்களே நெவஸ் செல் அல்லது மச்சம் என்று அழைக்கப்படுகிறது. இது தோலின் அடிப்பாகத்தில் காணப்படும் மச்சத்தின் மெலனின் மற்றும் கருப்பு பிக்மென்ட்கள் காணப்படுகின்றன மச்சமானது உடலின் எந்த பாகத்திலும் தோன்றலாம். மச்சங்களில்  பலவகை இருப்பினும் முக்கியமாக நான்கு வகை மச்சங்கள் மருத்துவ ரீதியாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.  அவை கஞ்ஜெனிடல் நெவி ஆகியன.  

பொதுவாக தலைமுடியை போன்ற எந்த பாதிப்புக்களும் மச்சத்தால் உண்டாவதில்லை. இருப்பினும் அமச்சத்தில் நிலை மாற்றம் ஏற்பட்டாலும் உணர்வற்ற தன்மை ஏற் பட்டாலும் அது புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்பதால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது பாதுகாப்பானது.