இதய நோய் உள்ளவர்கள் ஏன் எண்ணெய் பண்டங்களை சாப்பிடக்கூடாது? - துளிர்கல்வி

Latest

Saturday, July 4, 2020

இதய நோய் உள்ளவர்கள் ஏன் எண்ணெய் பண்டங்களை சாப்பிடக்கூடாது?

1. இதய நோய் உள்ளவர்கள் ஏன் எண்ணெய் பண்டங்களை சாப்பிடக்கூடாது?

களைப்படையா பண்புகளைக் கொண்ட தசைகளால் ஆன இதயம் சுருங்கி விரிவதால் ரத்தம் உடல் முழுவதும் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரத்த ஓட்டத்தின் முக்கிய வேலைகளில் உணவு சத்துக்களையும் ஆக்சிஜனையும் எல்லா உறுப்புகளுக்கும் கொடுத்துவிட்டு அதேசமயம் கழிவுப்பொருட்களை கழிவு உறுப்புகளுக்கு எடுத்துச் செல்வதாகும். 

இதயமும் ஓர் உறுப்பு இதன் செயல்பாட்டிற்கு இதய தமனி மூலம் தேவையான ஆக்ஸிஜனும் ஊட்டப் பொருட்களும் பகிர்ந்து அளிக்கப் படுகின்றது. பொதுவாக தமனியின் சுவர் அதிக மீழ்தன்மை கொண்டதாக இருக்கும்.  இத்தன்மையுடன் இதயம் ஒரு குறிப்பிட்ட அழுத்தத்துடன் ரத்தத்தை பம்ப் செய்தாக வேண்டியது அவசியம்.

 கொழுப்பு சத்து அடங்கிய பண்டங்களை அதிக அளவு உட்கொள்ளும்போது அவை கொலஸ்ட்ரால் என்ற பொருளாக மாற்றப்படுகிறது.  இது தமனியின் சுவர்களில் படிந்து அதன் குறுக்களவை குறைக்கின்றது.  இதனால் ரத்த ஓட்டம் தடைபடுகிறது.  இதயம் அதிக அழுத்தத்துடன் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 

ஏற்கனவே இதய நோயால் பீடிக்கப்பட்டவர்கள் இதயம் பலவீனப்பட்டு இருக்கும்.  இவர்கள் எண்ணெய் பண்டங்களை எடுத்துக்கொண்டால் இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டு மேலும் பலவீனப்படும் என்ற காரணத்திற்காக அவற்றை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.

2. ஜீரோ வாட் பல்பு மின்சாரத்தை உபயோகிக்காதா?

ஜீரோ வாட் பல்பு மின்சாரத்தை உபயோகிக்கிறது.  மின்சாரத்தை உபயோகிக்காவிடில் அப்பல்பத்திலிருந்து எந்த வெளிச்சமும் வராதே.  ஜீரோ வாட்ஸ் பல்ப்பை ஏறக்குறைய 5 வாட்ஸ் மின் சக்தியை பயன்படுத்துகிறது.  

3. நாம் வீட்டைக் கூட்டும்போது ஏன் மற்றொரு  கையைப் பின்பக்கமாக வைத்துக் கொள்கிறோம்?


வீட்டை கூட்டும்போது எல்லோரும் கையை பின்பக்கமாக வைத்துக்கொள்வதில்லை. மையம் கால் பரப்புக்குள் விழுகிறது.  எனவே சமநிலை உறுதிப்படுத்தப்படுகிறது.

 கை வெறுமனே தொங்கிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் நம் உடல் பரப்பில் பொருந்தியிருப்பதையே விரும்புகிறோம். எனவே கையை பின் பக்கமாகவோ வயிற்றை ஒட்டியோ  இடுப்பிலோ கூடுதலாக தாங்கிக் கொள்வதற்கு வைத்துக் கொள்கிறோம்.

4. நம்மைப்போல் விலங்குகளுக்கும் வியர்ப்பது உண்டா?

நம்மைப்போல் விலங்குகளுக்கும் வியர்ப்பது உண்டு. பாலூட்டி வகை உயிரினங்களில் பெரும்பாலும் உயிரிகளில் வியர்வை சுரப்பிகள் உண்டு. இதனால் வளர்சிதைமாற்ற கழிவுப் பொருட்களை வெளியேற்றுவது மட்டுமல்லாமல் உடல் வெப்பநிலையை மாறாமல் செய்ய அவசியமாகின்றது. பூனை எலி சுண்டெலிகளுக்கு பாதத்தில் அதிகமான சுரப்பிகள் உள்ளன . முயலுக்கு உதட்டைச் சுற்றி வியர்ப்பது உண்டு. வெளவாலுக்கு தலையின்  பக்கவாட்டிலும் அசைபோடும்  விலங்குகளுக்கு (மாடு ஆடு) விரல் இடுக்கிலும்,  நீர்யானைக்கு  புறச்செவிமடல் பகுதிகளிலும் அதிகமான வியர்வை சுரப்பிகள் உள்ளன.  நீர் வாழ் பாலூட்டிகளான திமிங்கலம் டால்பின் ஆகியவற்றுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லை.


5. மின்சாரத்தை நிலையாக ஓரிடத்தில் சேமிக்க முடியுமா

நாம் தினந்தோறும் பயன்படுத்தும் ஏசி வகை மின்சாரத்தை நிலையாக ஓரிடத்தில் சேமிக்க முடியாது.  மின்னாற்றலை வேதி ஆற்றல் நிலை ஆற்றல் முதலிய வேறு ஆற்றலாக மாற்றி சேமிக்கலாம்.

மின்சாரத்தை பாய்ச்சி நீரை ஆக்சிஜனாகவும்,  ஹைட்ரஜனாகவும் பிரித்து இந்த வேதி வளிமங்களை சேமித்து வைக்கலாம். தேவைப்படும்போது இந்த வளிமங்களை வினை புரிய வைத்து கிடைக்கும் ஆற்றலில் மின்சாரம் பெறலாம்.

மின்னாற்றலினால் நீரை உயரமான பகுதிக்கு குழாய் மூலம் ஏற்றி நிலைப்பு ஆற்றலாக சேமிக்கலாம்.  தேவை ஏற்படும்போது இந்த நீரை கீழே ஓடவிட்டு நீர் மின்சாரம் பெறலாம்.

மாறாக டிசி மின்சாரத்தை கன்டன்சரில் நிலையாக சேமித்து வைக்க முடியும்.

No comments:

Post a Comment