குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்குப் பெற்றோர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவைகள் - ThulirKalvi

Latest

Search Here!

Tuesday, July 7, 2020

குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்குப் பெற்றோர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவைகள்

1.  குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்குப் பெற்றோர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவைகள்.

குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கு ஓய்வும் உறக்கமும் மிக மிக அவசியமாகும். ஆரோக்கியமான குழந்தை அன்றாட பணிகளை முடித்து வருகிறது. அதற்கு புத்துணர்வு தேவை. இழந்த சக்தியை பெறுவதற்கு நல்ல காற்றோட்டம் உள்ள அறையில் 9 முதல் 10 மணி நேரம் வரை நன்கு உறங்கவேண்டும்.  

உறங்கும் போது அதிகமான குளிர் அல்லது வெப்பம் இருக்க கூடாது. கொசு, மூட்டைப் பூச்சிகள் போன்றவை குழந்தைகளின் உறக்கத்திற்கு ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது. 

படுக்கை சுத்தமாக இருத்தல் வேண்டும். படுக்கை துணியை அடிக்கடி மாற்றி சூரிய வெளிச்சத்தில் சீராக உலர்த்த வேண்டும். ஒரே அறையில் பலரோடு சேர்ந்து படுப்பதால் காச நோய் தோல் நோய்கள் சிரங்கு தொழுநோய் போன்ற தொற்று நோய்கள் வர வாய்ப்பு ஏற்படுகின்றன. 

உடற்பயிற்சியும், திறந்த வெளி விளையாட்டும் குழந்தைகளுக்கு தசை வளர்ச்சியையும் உடல் வளைந்து கொடுக்கும் தன்மையும் அளிக்கிறது மேலும் நல்ல பசியை தூண்டுகிறது. தூய்மையான காற்றும் வெளிச்சமும் கிடைக்கிறது. அறையில் அடைந்து கிடந்து அதிகமாக படிப்பதால் ஏற்படும் மனச்சோர்வை தடுக்கிறது.

குழந்தை உட்காரும் போதும் நடக்கும் போதும் ஓடும் போதும் சரியான நிலைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். மேற்கண்ட செயல்களில் ஏதேனும் குறைகள் இருக்கும் ஆனால் முதுகு தண்டுவடத்தில். வலது கை கால்களில் குறைகள் இருப்பதாக தெரிந்து கொள்ளலாம். இதனை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிக் கொள்ள முடியும். 

2.  குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவதால் என்ன ஏற்படுகிறது?

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைந்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட குழந்தைகள் ஆரோக்கியமான குழந்தைகளை விட வலிமை குறைந்தும், சுறுசுறுப்புக் குறைந்தும், எதிலும் அதிக ஆர்வம் இல்லாமலும் காணப்படுகின்றன. இதன் காரணமாக சிந்திக்கும் திறனும் கேட்கும் திறனும் குறைந்து போகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போவதால் அடிக்கடி நோய்களுக்கு ஆளாகின்றனர், இந்த குழந்தைகள் தொடர்ந்து பலவீனமடைகின்றன. 

தவறான உணவு அளிக்கப்படும் போது குழந்தைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு அதிகம் ஆகும் போது குழந்தைகளுக்கு சக்தி இல்லாமல் போகிறது.  அவைகளுடைய உடல் மெலிந்து தளர்ந்து போய் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. சில குழந்தைகளுக்கு உடல் முழுவது வீங்கிப்போய் சருமத்தில் வெடிப்புகள் ஏற்பட்டு உதிர்ந்து விடுகின்றன.

3. ஊட்டச்சத்துள்ள உணவுகளை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?

மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

 வளர்ச்சி தரும் உணவுகள்

 சக்தியை அழிக்கும் உணவுகள்

 நோய் பாதுகாப்பு உணவுகள்


வளர்ச்சி தரும் உணவுகள் என்றால் என்ன 

குழந்தை பிறந்ததில் இருந்து சிறிது சிறிதாக வளர்ச்சி அடைகின்றன. அதுபோல உடலில் இருக்கும் திசுக்களில் சில வகை திசுக்கள் தினமும் தேய்வ அடைகின்றன.

அப்படி தேய்வு அடையும் போது திசுக்களை உடல் புதிய திசுக்களால் ஈடுசெய்கிறது. உடல் வளர்ச்சிக்கும் புதிய திசுக்கள் வளர்ச்சிக்கும் உதவுகிறது நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. வளரும் குழந்தைகள் புரதசத்தை அன்றாடம் உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

முட்டை, பால், தயிர், மீன், இறைச்சி, ஆகியவற்றில் புரதச் சத்து அதிக அளவில் உள்ளது. மேலும் அவரை மொச்சை பட்டாணி காராமணி துவரை உளுந்து பாசிப்பயிறு நிலக்கடலை பொட்டு கடலை சோயா மொச்சை அவற்றிலிருந்து சத்து நமக்கு கிடைக்கிறது


சக்தி தரும் உணவுகள் என்றால் என்ன?

நம் உடல்  இயங்கத் தேவையான எரிபொருளை நாம் உண்ணும் உணவில் இருந்தே பெறுகிறோம். இந்த எரிபொருளை கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புப் பொருட்கள் தருகின்றன.  அரிசி கோதுமை கம்பு கேழ்வரகு போன்ற தானியங்கள் உருளைக்கிழங்கு வள்ளி கிழங்கு போன்ற கிழங்கு வகைகளும் சர்க்கரை வெல்லம் போன்ற பொருட்களை நமக்கு கார்போஹைட்ரேட்டினைத்  தருகின்றன. 

கொழுப்பு பொருட்கள் நமக்கு கார்போஹைட்ரேட் விட அதிக அளவு சக்தியைத் தருகின்றன. கடலை எண்ணெய் நல்லெண்ணெய் பாமாயில் சூரியகாந்தி எண்ணெய் போன்றவையும் முட்டையில் மஞ்சள் கரு மீனின் ஈரல் மாமிசம் போன்றவையும் நமக்குப்  கொழுப்புப் பொருட்களை  தருக்கின்றன.

நோய் பாதுகாப்பு உணவுகள் என்றால் என்ன?

உயிர்சத்து எனப்படும் வைட்டமின்களும் இரும்பு சத்து சுண்ணாம்பு சத்து அயோடின் சத்து போன்றவைகளும் அடங்கியுள்ள  உணவு வகைகள் நோய் பாதுகாப்பு உணர்வுகளாகும்.