மிளகாய் மற்றும் தக்காளி பயிரிடுவது பற்றிய தகவல்கள் - ThulirKalvi

Latest

Search Here!

Tuesday, July 28, 2020

மிளகாய் மற்றும் தக்காளி பயிரிடுவது பற்றிய தகவல்கள்

மிளகாய் மற்றும் தக்காளி பயிரிடுவது பற்றிய தகவல்கள்


1 மிளகாய் பயிரிடும் முறை

நம் நாடு மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் காரம் என்பது இன்றியமையாத தேவையாக கருதப்பட்டு வருகின்றது. எனவே காரத்தைத் தரும் மிளகாய் அத்தியாவசிய உணவுப் பண்டங்களில் ஒன்றாக உள்ளது. 

மிளகாய் பயிரிடும் காலம் 

இது கோடை காலத்திலேயே தன்னுடைய பலனை தர வல்லதாக இருக்கக்கூடிய காரணத்தினால் இதனை தை மாதத்தில் தான் பயிரிட வேண்டும்.  தையில் பயிரிடும் மிளகாய் பங்குனி சித்திரை மாதங்களில் காய்களை தருகின்றது.

மிளகாய் காய்க்கும் காலம் 

மிளகாய் செடிகள் நட்ட மூன்றாவது மாதத்திலிருந்து நான்காவது மாதத்திலோ அல்லது  நான்காவது மாதத்திலோ காய்க்கிறது.  

எப்படி நடுவது?

இதனை நடுவதில்  முறையும் விதிகள் உள்ளன.  நன்றாக பழுத்த பின் உலர்ந்துபோய் விட்ட காய்ந்த மிளகாய்களை எடுத்து கொள்ளுங்கள்.  இந்த காய்களில் உள்ள விதைகளை தனியே உதிர்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.  இந்த விதைகளை ஈரத் துணியில் போட்டு கட்டி வையுங்கள். இவ்வித  ஏற்பாடுகளை இரவுப் பொழுதிலே ஆரம்பியுங்கள். மறுநாள் காலையில் மூட்டையை அவிழ்த்து விதைகளை விதைக்க ஏற்பாடு செய்யுங்கள். அப்போதுதான் விதைகள் சீக்கிரமாக முளைக்க ஆரம்பிக்கும்.  

மிளகாய்  பாத்திகளை  எப்படி காப்பாற்றுவது?

இவ்விதமான மிளகாய் பாத்திகளை மனிதர்களிடமிருந்தும் விலங்குகளில் இருந்து காப்பாற்றுவது அவசியம்.  ஏனென்றால் தெரிந்தோ தெரியாமலோ இவற்றினை இவர்கள் மிதித்து விட நேரிடலாம்.  அப்பொழுது இதன் காரணமாக விதைகள் முளைக்காமல் போய்விடக் கூடும்.  எனவே இவ்விதம் நேராதிருக்க மிளகாய் பார்த்து பாத்திகளின் மேல் தென்னை  ஓலைகளினால் பின்னப்பட்டுள்ள தட்டிகளின்மேல்   உள்ளே போட்டு வைத்துக் காப்பாற்ற வேண்டியது அவசியம்.  

பாத்தி அமையுங்கள்

விதைகள் முளைத்து எழுந்த  பின்னர் பாத்திகளில் அதனை மாற்றி நட நட வேண்டும்.  இப்படி செய்து வந்தால் மிளகாயினால்  நீடித்த லாபத்தை அடையலாம்.


2. தக்காளி பயிரிடும் முறை

இன்று நம் நாட்டு சமையலில் முக்கியமான அங்கம் வகிப்பது தக்காளி.  இந்த தக்காளி இல்லாத எந்த காய்கறிகளையும் குழம்பும் ரசமும் சுவைத்தது கிடையாது என்று மக்கள் நம்பும் அளவு மக்களின் மனதில் இடம் பெற்றுவிட்டது.  இந்த தக்காளி பயிர் செய்வதன் மூலம் நமக்கும் பயன்படுகிறது,  விற்பனைக்கும் உதவுகிறது.  

தக்காளியை நடக்கூடிய காலம் 

தக்காளியை ஆனி மாதத்திலோ ஆடி மாதத்திலோ  அதற்கு முன் பின் மாதங்களிலோ நடலாம்.   வேறு காலங்களில் நடப்படும் தக்காளி விளைச்சல் குறைவையோ சேதத்தையோ   உண்டாக்குகிறது என்பது தக்காளி பயிரிடுவோரின்  ஆழ்ந்த கணிப்பு.  

தக்காளியின் எதிரி 

அதிகமாக கூடிய பெய்யக்கூடிய மழையும் அதிகமாக அடிக்கக்கூடிய வெயிலும் தான் தக்காளி இயற்கையான போது எதிரிகளாக அமைகின்றன.  

பயிரிடுவோருக்கு முன்னோடிகள் 

தக்காளியை பயிரிடுவோருக்கு முன்னோடிகளாக நம் நாட்டு பெரியவர்கள் திகழ்கின்றனர்.  இவர்கள் தக்காளியின்  எதிரிகளை அறிந்து வைத்திருந்த காரணத்தினால்....  தக்காளி செடிகளை தங்கள் வீட்டின் அருகே உள்ள சுவர் ஓரங்களில் ஏற்றி விட்டனர்.  அவை படர்ந்து சரியான விளைச்சலைத் தந்தன. அதுபோன்று கூட நாம் செய்யலாம்.  

தொட்டிச் செடிகள் 

சிலர் தக்காளியை தொட்டிச் செடிகளை வைத்து வளர்ப்பது உண்டு.  இந்த தொட்டிகளை தங்கள் வீட்டுத் தாழ்வாரத்தில் இவர்கள் வைத்து வளர்க்கவும் செய்கின்றார்கள். 

 தக்காளி பலன் தரும் காலம் 

தக்காளியானது தான் பெறக்கூடிய மண்ணின் வளத்துக்கு ஏற்பவும்,   தண்ணீரின் தன்மைக்கு ஏற்பவும் மூன்றிலிருந்து நான்கு மாதங்களில் பலனை அள்ளித் தருகின்றது.  

இருக்கவேண்டிய இடைவெளி 

தரையில் சாதாரணமாக தக்காளி நடப்படடால் அவற்றுக்கு இடையில் இருக்க வேண்டிய இடைவெளியானது 2 அடியாகவோ,   3 அடியாகவோ  கூட இருக்கலாம்.  இவ்வாறு முறைப்படித் தக்காளியை பயிரிட்டு வந்தால் அவை சரியான முறையில் பலன் தரத்தக்கதாக அமைகின்றது.

மேற்கண்ட முறைகளைப் பயன்படுத்தி மிளகாய் மற்றும் தக்காளியைப் பயிரிட்டு அதிக லாபம் அடையலாம்.