பள்ளி மாணவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில முக்கிய குறிப்புகள் (பள்ளிப் பருவம்) - ThulirKalvi

Latest

Search Here!

Saturday, August 29, 2020

பள்ளி மாணவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில முக்கிய குறிப்புகள் (பள்ளிப் பருவம்)

பள்ளி மாணவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில முக்கிய குறிப்புகள் (பள்ளிப் பருவம்)


முருகேரி 


பொன்னனின் கல்வீடு


தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சிறிய கிராமம்/  50 மஞ்சள்புல் வீடுகள்.  15 பனை ஓலை குடிசைகள். மருந்துக்கு ஒரே ஒரு பழைய கல் வீடு. 

கிராமத்திற்கு பக்கத்தில் ஒரு மிகச்சிறிய ஏரியை தன் சொந்த செலவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டபோது வெட்டியவர் நாட்டாமை பொன்னன். 

அந்த ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கிறது.  சில மாதங்களில் தண்ணீர் கரைகளில் அலைபாயும்.  பல மாதங்களில் ஆள்காட்டி விரல் உயரமே தண்ணீர் தளதளக்கும். 

கிராம மக்களில் பலர் விவசாயக் கூலிகள்.  கிராமத்தை சுற்றி இருக்கும் நிலங்களில் பெரும்பான்மைப் பொன்னனுடையது. இப்போது அவர் இல்லை. ஆனால் அவரது சொத்து இருந்தது.  

அவருடைய மகன் வழியில் வந்த கொள்ளுப்பேரன் ஒரு ஒரே வாரிசாக தன் பெற்றோருடன் கல்வெட்டில் இருக்கிறார். 

பட்டதாரியான அவர் அரசு ஊழியராய் ஆளவில்லை. சேவையாளராய் தன்னை உருமாற்றிக் கொண்டார்.

தேவானந்தன்


பொன்னனைப் பற்றி வழி வழி அறிந்தவர்கள் தேவானந்தனாய் பிறந்திருக்கிறாரோ என்று பேசிக்கொண்டனர். 

பகுத்தறிவு பரவாத அந்த கிராமத்தை சுற்றியுள்ள ஏழு எட்டு கிராமங்களில் இன்றும் கூட சாதிகள் இல்லையடி பாப்பா என்ற மகாகவி பாரதியின் பாடல் தவறாமல் ஒளிபரப்பப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 

அதனாலேயேதான் தேவானந்தன் போன்ற இளைஞர்கள் தேவைப்பட்டனர்.

நாட்டாண்மை பொன்னனின் வீட்டு திண்ணைகள் இரண்டும் விசாலானவை. 

பெரிய திண்ணைகள்


ஒவ்வொன்றிலும் 30க்கும் மேற்பட்டோர்  ஒரே சமயத்தில் சப்பணமிட்டு உட்கார்ந்து விளையாடலாம். 

மழமழவென்று பவுன்மாதிரி வழுக்கும் சுண்ணாம்பும்,  மூட்டையும்,  கடுக்காயும் சேர்த்து அரைத்துப் பூச வேலை செய்தவையாம் அந்த திண்ணைகன்.  

சுவர்களும் அதே மாதிரி பூச்சு வேலை செய்யப் பட்டவை.  அந்த திண்ணைகளில் பொழுது விடியும் முன்பே கூட கூட்டம் வழியே தொடங்கிவிடும். 

தேவானந்தனைச் சந்திக்க விரும்பும் கூட்டம் தான் அது. கிராமங்கள் என்றால் பிரச்சனைகள் இல்லாமலா இருக்கும்? 

தேடிவரும் கூட்டத்தின் விடியலாய் இருந்தான் இளைஞர் தேவானந்தான்.

விடுமுறை நாட்களில் மாணவமணிகள் அவரை மொய்ப்பர்.  எப்போதாவது மாலைகளில் கூட சந்திப்பு நிகழ்வது உண்டு. 

புதுமையான பலவற்றை அவர்களுக்கு புகட்டுவார் அவர்.  பாரத நாட்டிற்கு உழைத்த தலைவர்களை பற்றியும் இலக்கிய மேதைகள் பற்றியும் சமுதாய சிற்பிகள் பற்றியும் நிறையவே அவர்களுக்கு சமயங்கள் வாய்த்தப் போதெல்லாம் வாய்த்த போதெல்லாம் கூறியிருக்கிறார் அவர். 

அண்ணல் அம்பேத்கர்


அடுத்த சனிக்கிழமை காலையில் தாழ்த்தப்பட்ட மக்களின் தானைத் தலைவராக விளங்கிய மேதை அண்ணல் அம்பேத்கர் குறித்து கூறுவதாய் சொல்லியிருந்தார்.  

அதனால்...

சனிக்கிழமை அவருடைய வீட்டுத் திண்ணைகளில் இந்திய எதிர்கால நந்தவனங்கள் நிரம்பி வழிந்தனர்.  

வெகு அருகாமையில் அமைந்த கிராமத்துக் குழந்தைகள் பலரும் அதில் அடங்கியிருந்தனர்.  

வணக்கம்.  

குழந்தைகளை கம்பீர குரல் கேட்டு திரும்பி வணக்கம் ஐயா ஒருமித்த குரலில் ஆர்வம் மிகுந்திருந்தது. 

எல்லாரும் காலை சிற்றுண்டியை முடித்து விட்டீர்களா?  உம் முடித்துவிட்டோம் ஐயா.  

என்ன மகா பெரிய காலை உணவு? 

கேப்பை கூழ்
பழைய சோறு
கோதுமை கஞ்சி
நொய் கஞ்சி இவற்றில் ஏதாவது ஒன்று. அது கூட வயிறு நிறைய அல்ல.

வயிற்றின் ஒரு மூலைக்கு மட்டும். 
பொய் சொல்லக்கூடாது பாப்பா? 

கனிவாய் சொல்லிவிட்டு இரண்டு திண்ணைகளின் மீதும் தன் பார்வையைச் செலுத்தினார் தேவானந்தன். 

மாணவ மணிகளின் முகங்களில் பொய் சொல்கிறோம் என்பது அப்படியே பிரதிபலித்தது. 

குமரன்....
குமரன்....
தயாரா இருக்காங்க

எல்லாரையும் வரச்சொல்லுங்க. நாட்டாண்மை பொன்னன் வீட்டு வேலையாள்  அவன். 

காலை டிபன்


வரிசையாய் உள்ளே போய் கூடத்தைக் கடந்து பின்கட்டில் தண்ணீரை முகந்து கை கால் கழுவி பந்தி பாயில்  உட்கார்ந்தன குழந்தைகள். 

இது வழக்கமாய் சனிக்கிழமைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும்.  ஒன்று குறைந்தது 20 முதல் 30 பேர் தேர்வு தேர்வர்.  

ஒரு வாரம் இட்லி சாம்பார் 
மறுவாரம் பொங்கல் வடை 

இவ்வாறு உப்புமா, கிச்சடி, தோசை, சப்பாத்தி, பூரி, சேமியா, இடியாப்பம் இத்தியாதி, இத்தியாதி, அங்கு வருகின்ற அவர்களில் 6 அல்லது 7 குழந்தைகளைத் தவிர மற்றொரு தாழ்த்தப்பட்டோர். 

அறிவு பசிக்காக  தேவானந்தனைத் தேடி வரும் குழந்தைகள் கூடவே வயிற்றுப் பசி நீங்குகிறது என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தனர்.  வீரம் விளைந்த பூமி மகாராஷ்டிரம் அங்கு மஹர் என்ற ஓர் இனத்தார் நிறைந்த அம்பாவடே  என்ற ஒரு கிராமம்.  அக்கிராமத்தில் வாழ்ந்தவர் ராம்ஜி சக்பால் பீமாபாய் அவருடைய மனைவி அவர்களுக்கு 15 குழந்தைகள் பிறந்தனர். 

பீம்ராவ் ராம்ஜி


பதினான்காவது பிறந்தவர் பீம்ராவ் ராம்ஜி.  பின்னாளில் அவருடைய ஆசிரியருடைய பெயரும் சேர்ந்தது.  அதனால் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று அழைக்கப்பட்டார்.  

லோகமான்ய பாலகங்காதர திலகர் பிறந்தது மகாராஷ்டிர மாநிலம் தானே ஐயா ஆமாம் ஆமாம் திலகர் ரத்னகிரி மாவட்டத்தில் பிறந்தவர் ஐயா என்றான் மரிய ஜோசப்.  

எட்டாம் வகுப்பு படிக்கிறான். 
அவன் அதே மாவட்டத்தை சேர்ந்த கிராமம்தான். அம்பாவோடே இளங்கோ குறுக்கிட்டான். 

ஜோசபின் வகுப்பு தோழன் அவன். 

ஐயா, இப்போது பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று அவரை யாரும் அழைப்பதில்லை யே என்றாள் கோமதி.  மிகவும் சூட்டிகையான அவள். 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் அவளுடைய தந்தை ஒரு கிராம சேவகர். 

கோமதி அவருடைய பெயரை முழுவதும் சொல்லி சிரமப்பட்டால் அம்பேத்கர் என்று சுருக்கமாக எல்லாரும் அழைக்கத் தொடங்கி விட்டனர் நெற்றியைத் தேய்த்துக் கொண்டார்  தேவானந்தன்.  

அம்பேத்கர் எப்போது பிறந்தார்? 

ஐயா நான் சொல்கிறேன்

 ஐயா நான்

 6 7 கைகள் உயர்ந்தன 

ஷாயாதி நீ சொல். 

1891ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் பிறந்தார். 

சரியாக சொன்னாய் ஷாயாதி.  அவருடைய தந்தை ராம்ஜி சக்பால் குறித்து சொல்ல யாராவது முன்வருவார்களா?  

ஐயா நான் வருகிறேன் 

அரசினர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஆரோக்கியமேரி எழுந்து நின்றாள். 

''நான் நினைத்தேன்''  ஆரோக்கியமேரி தவிர வேறு யாராலும் பதில் சொல்ல முடியாது என்று.  எல்லாரையும் நோக்கிப் புன்னகைத்தார் தேவானந்தன். 

ராம்ஜி சக்பால் ராணுவப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அவர் படிப்படியாக பதவி உயர்வு பெற்றவர்.  அதற்கு காரணம் அயராத உழைப்பு. அப்பழுக்கற்ற உண்மை.  தான் என்ற தருக்கின்மை.  தாய் மொழி மராத்தி அந்நிய மொழியான ஆங்கிலத்தில் ஆழ்ந்த புலமை.  வீரத்தில் ஊறிய விவேகம்.  உரத்துக் கூறினாள் மேரி. 

எல்லாரும் அழுத்தம் திருத்தமான அவளுடைய எடுப்பையே விழிகள் வாங்காமல் கவனித்தனர்.

அம்பேத்கரின் அம்மா பீமாபாய்.  கனிவும் கருணையும் கொண்டவள்.  உறுதியும் உற்சாகமும் அணிந்தவள்.  காண்போரில் தெய்வமாய் நீக்கமற நிறைந்தவள்.  இல்லை என்றால் 14 பெற்றிருக்க முடியாது.  வளர்ந்திருக்கவும்  முடியாது.  ஆனாலும் அந்த அன்னையாரின் வேதனை அதிகரிக்க காரணமானவர்கள் 9 பேர் இயற்கை எய்திய அவர்களை தவிர்த்து ஐவரே மிஞ்சினர். அம்பேத்கரோடு  மூன்று ஆண்கள்.  2 பெண்கள்.  தந்தை ராம்ஜி மாவுச்சத்தும் தாய் பீமாபாயும் குழந்தைகளை தங்கள் கண்களில் வைத்து காத்தனர். 

சக்பால் மிகவும் ஒழுக்கமானவர்.  கெட்ட பழக்கம் எதுவும் அவரிடம் கிடையாது. காபி தேநீர் குடிக்க மாட்டார்.  சுத்தமான சைவம். பணிவு பெட்டகத்தின் சிகரம். 

இறைப்பற்று நிறைந்த அவர் நல்ல கிரிக்கெட் விளையாட்டு வீரர்.  சுயமரியாதை செல்வர்.  எஞ்சிய தன் குழந்தைகளான பலராம், ஆனந்தராவ், மஞ்சுளா, துளசி ஆகியோரையும் கடைக்குட்டி அம்பேத்கரையும் குறைபாடுகள் இன்றி வளர்த்தார்.

அப்போது அம்பேத்கருக்கு வயது ஐந்து.  தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு துணை அவருடைய அண்ணன் பலராம். அதனால் மிகவும் உற்சாகத்தோடு பள்ளிக்கு போனார் அம்பேத்கர்.  தம்பிக்கும் சேர்த்து இன்னொரு கோணிப் பையை கொண்டு வந்த பலராமர். 

அம்பேத்கர்,  அண்ணா இது என்ன?  

இதுவா என்று ஒரு பார்வை பார்த்தார் பலராம். 

சொல்லுங்கள் அண்ணா

 பீம் இதுதான் நம் பள்ளியில் உட்காரும் இருக்கை

என்ன உட்காரும் இருக்கையா? ஏன் பென்ச் இருக்காதா? 

இருக்கின்றன. 

அவை உயர்ஜாதி பிள்ளைகளுக்காக தான்.  நாம்  தாழ்த்தப்பட்டவர்கள். 

அப்படி என்றால் கீழ் சாதியினர்? 

கடவுள்தானே அனைத்தையும் படைத்தார். 

ஆமா மனிதர்கள் அவருடைய படைப்பில் பேதங்களை உண்டாக்கி விட்டனர் என்றார் பலராம். 

அம்பேத்கரின் பள்ளிப் பருவம்


முதல் வகுப்பில் பீம்ராவையும் மற்ற தாழ்த்தப்பட்ட குழந்தைகளையும் வகுப்பறையில் ஒரு மூலையில் தரையில் உட்கார வைத்தனர்.

அம்பேத்கர் கோணிப்பைய தரையில் போட்டு அதன் மீது உட்கார்ந்தார்.

ஆசிரியர் எல்லாருக்கும் பாடங்களை போதித்தார்.  போதித்த பாடங்களில் வினாக்கள் கேட்டார்.  எல்லாரையும் அல்ல.  உயர்ந்த ஜாதி பிள்ளைகளை மட்டும்.  திருதிருவென்று விழித்த அவர்களிடம்தான் பாடங்களில் அய்யங்கள் உண்டா என்று கேட்டார். பின்னர் விளக்கங்கள் கொடுத்தார்.

தாழ்ந்த ஜாதி அதாவது மகர் இன பிள்ளைகள் ஆசிரியரிடம் ஐயங்களை கேட்கக்கூடாது.  தவறிக் கேட்டாலும் ஆசிரியர் விளக்கம் கூற மாட்டார். சற்று மெளனித்தார் தேவானந்தன். 

 இது மிகவும் அநியாயம் ஐயா  சீறினாள் கோமதி. 

ஆசு + இரியர் = ஆசிரியர்.  குற்றம் களையும் பெரும் பொறுப்பான ஆசிரியரா இவ்வாறு செய்தார்? 

ஆமாம் என்ன செய்வது?  அவருடைய நிலை தப்பித்தவறிச் சொன்னால் உயர் சாதியினரான அவருக்கு..... 

அவருக்கு என்ன நேர்ந்திருக்கும் ஐயா மரிய ஜோசப் தலையை  சற்று முன்னுக்கு நீட்டிக் கேட்டான்.

நேர்ந்தது அந்த காலத்தில் சரி.  அதெல்லாம் இப்போ வேண்டாம்.  உயர்ந்த ஜாதி பிள்ளைகளுக்கு சொல்வதையே தாழ்ந்த சாதிப்பிள்ளைகள் கேட்கவேண்டும். கேட்டு தெருவில் வெற்றிபெற தேர்வில் வெற்றி பெற வேண்டும்.  அப்படித் தான் அந்த கால கல்வி முறை இருந்தது.  

அம்பேத்கரின் பறித்துத் தின்னும் அழகான முகம் ஆசிரியரை ஈர்த்தது.  அதையும் மீறி அவருடைய அறிவு கூர்மையும் மற்ற ஆசிரியர்களையும் பிரமிக்கச் செய்தது. 
உடன் பயின்ற மாணவ மணிகளையும்தான்.  ஆனால் சாதி என்ற பொய் சுவர் உயர்ந்து அவர்களை அந்நியப்படுத்தியது.  

அன்பே கடவுள். அறிவே  செல்வம் என்பதை முதல் வகுப்பிலேயே தன் நடத்தையின் வாயிலாக மெய்ப்பிக்கத் தொடங்கிவிட்டார் அம்பேத்கர்.  

தேவானந்தன் எழுந்து வீட்டுக்குள் சென்று உடனே சென்னைக்கு திரும்பினார். 

தேவானந்தனின்  பக்கத்திலிருந்து அம்பேத்கர் பற்றிய பல நூல்களில் மீது மாணவ மணிகளின் பார்வைகள் பரவின.  இதெல்லாம் அவர் எழுதிய நூல்களில் பல.  உங்களுக்கேற்றவற்றை மட்டுமே நான் சொல்லுகிறேன்.  இனி சொல்ல போகிறேன்.

அம்மாடி எத்தனை புத்தகங்கள்?  வாயைப் பிளந்தாள் ஷாயாதி.  

எம்பி எம்பி எல்லாரும் நூல்களை மீண்டும் மீண்டும் பார்த்தனர்.  சிலர் வழவழவென்று நூல்களின் அட்டைகளை தொட்டு தொட்டு மகிழ்ந்தனர்.