ஆடம்பரத்தை அகற்றி இன்பமாய் வாழ சேமிக்கும் பழக்கம் அவசியம். - ThulirKalvi

Latest

Search Here!

Tuesday, August 4, 2020

ஆடம்பரத்தை அகற்றி இன்பமாய் வாழ சேமிக்கும் பழக்கம் அவசியம்.

ஆடம்பரத்தை அகற்றி இன்பமாய் வாழ சேமிக்கும் பழக்கம் அவசியம்.



நாம் சேர்த்த செல்வம் மிகுந்த அளவு இருந்தபோதிலும் அதை செலவழித்துக் கொண்டே இருந்தால் காலப்போக்கில் அது கரைந்து விடும்/  ஆகவே செலவை சுருக்கி சேமிப்பைப் பெருக்க வேண்டும். அவ்வாறு செய்தால் எறும்பு புற்று போல் செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும்.  செல்வம் அதிகமாய் இருந்தாலும் அதை மென்மேலும் பெருக வேண்டும்.  அதை பல துறைகளிலும் முதலீடு செய்ய வேண்டும்.  வாய்ப்பு கிட்டியபோது தகுந்தபடி முதலீடு செய்யாத பணம் கைக்கு வராத பணத்துக்கு சமம். ஆகவே கட்டிய பணத்தை பாதுகாத்து பெருக்கி சிறந்த முறையில் முதலீடு செய்ய வேண்டும்.  

அழிவுக்கு யார் காரணம் 

ஆயிரம் ஏக்கர் நிறத்துடன் உன்னத வாழ்வு வாழ்ந்தவர்கள்,

பெரும் பங்களாக்களில் சொகுசு வாழ்க்கை நடத்தியவர்கள்,

 நாளுக்கு ஒரு கார் வேளைக்கு ஒரு உடை என பவனி வந்தவர்கள்,

 பேரும் புகழும் பெற்று மிகுந்த செல்வாக்குடன் ஊர் மெச்ச சிறப்பு பெற்றிருந்தவர்கள்,

பின்னொருநாள் எல்லாவற்றையும் இழந்து துன்பப் படுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.  ஏன் இவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது?

இவர்களிடம் ஆடம்பரம் இருந்தது.  அந்தஸ்து இருந்தது.  அலட்சியப் போக்கு இருந்தது.  ஆனால் எளிமை, சிக்கனம் இல்லை.  எனவே சேமிப்பும் இல்லை.  சிறு துண்டு நிலம்கூட சொந்தமாய் இல்லாதவர்கள்.  ஒண்டு குடித்தனத்தில் வாழ்க்கை நடத்தியவர்கள்.  காலால் நடந்து சென்றே எல்லா காரியங்களையும் செய்தவர்கள்.  பேரும் புகழும் பெற்றிராவிட்டாலும் அமைதியாக வரவுக்கேற்ற வாழ்க்கை நடத்தியவர்கள்.  இவர்களில் பலர் பின்னர் செல்வந்தர்களாக சமுதாய அந்தஸ்து பெற்ற பிரமுகர்களாக ஆனந்தமாக வாழ்ந்து இருக்கிறார்கள்.  

எப்படி இவர்களால் இந்த நிலையை எய்த முடிந்தது?

பெரியோர் வலியுறுத்திய சிக்கனத்தைக் கடைப்பிடித்து செல்வத்தை சேர்த்துக் கொண்டார்கள்.  இந்நிலையை எய்வது எவராலும் இயலக் கூடிய காரியமே. சிக்கனம் என்னும் சொல்லிலேயே கவுரவம் நிறைந்திருக்கிறது.  இதனால் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்றவற்றை வேண்டா என்று ஒதுக்கித் தள்ளும் மனோபாவம் வளர்ந்து மனிதனின் குண நலன்களுக்கு ஊன்று கோலாகிறது.  இதுவும் தவிர  பண்பட்ட மனத்தையும் அது உருவாக்குகிறது.

 இன்றைக்கும் நாளைக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொருளாதாரத் திட்டம் தான் சிக்கனம். செல்வம் உழைப்பால் செறுகிறது.  சிறுசேமிப்பால் காப்பாற்றப்படுகிறது . விடா முயற்சியால் அது வளர்க்கப்படுகிறது.  

சுய உணர்வு பிறவியில் தோன்றும் ஒரு குணமல்ல அனுபவத்தாலும் உதாரணங்களும் முன்யோசனையாலும் வளர்க்கப்படும் ஒன்றுதான் அது.  மனிதனின் புத்தி சாலியாக சிந்தனையாளனாக மாறும் போதுதான் அவன் சிக்கனத்தை கடைப்பிடிக்கிறான்.  

ஒருவன் எவ்வளவு செலவழித்தான்? எப்படி செலவழித்தான் என்பதைக் கொண்டுதான் அவனது தகுதி நிர்ணயிக்கக்கப்படுகிறது. 

இளமையில் சேமிப்பு முதுமையில் மகிழ்ச்சி 

இன்றே சேமிக்க தொடங்க வேண்டும்.  எவ்வளவு செலவானாலும் சரி சேமிக்காமல் இருக்கக்கூடாது.  சில ரூபாய்களை சேமிக்க தொடங்க வேண்டும். 

கைக்கும் வாய்க்கும் எட்டாமல் வாழ்பவர்களால்  எதையுமே எளிதில் சாதிக்க முடியாது.  தாம் சம்பாதிப்பதை முழுவதும் விரயம் செய்பவர்கள் அறிவின் முதற்படியில் காலடி எடுத்து வைத்தவர்கள் ஆகி விடுகிறார்கள்.  

ஆனால் மிக சிறிய அளவு ஆனாலும் சேமித்து வைக்கும் பழக்கம் உள்ள மனிதன் மாறுபட்ட இருக்கிறான்.  அவன் சேர்த்து வைத்த சிறுநிதி பெரிய மன பலத்தை அவனுக்கு தருகிறது.  அவனால் இந்த உலகத்தை நேருக்கு நேர் சந்திக்க முடியும்.  அவனுக்கு முதலாளி அவன்தான் அவன்தான்.  வேண்டுவதை துணிவுடன் எடுத்துச் சொல்லமுடியும்.  அவனை எவராலும் விலைக்கு வாங்கவோ விற்கவோ முடியாது.  எதிர்காலத்தில் ஒய்ந்திருக்கும் முதுமையில் சந்தோஷமும் செளகரியமும் நிறைந்த வாழ்வை அவன் எதிர் நோக்க முடியும்.  எனவே ஆடம்பரத்தை அகற்றி இன்பமாய் வாழ பணத்தை சேமிப்போம். சேமிப்பே சிறந்தது. இன்றைய சேமிப்பு, நாளைய பாதுகாப்பு.