உப்பே குப்பையிலே - உப்பின் கர்வம் - ThulirKalvi

Latest

Search Here!

Friday, August 28, 2020

உப்பே குப்பையிலே - உப்பின் கர்வம்

உப்பே  குப்பையிலே - உப்பின் கர்வம்

 உப்பின் கர்வம்


உறவினர்களுக்கு விருந்து படைப்பதற்காக தலை வாழை இலைகளின் வரிசை. ஒவ்வொரு இலையிலும் 18 வகை பதார்த்தங்கள். வரிசை ஒரு ஓரத்தில் துளியூண்டு உப்பும் உண்டு.   உப்புக்கு கொஞ்சம் இருமாப்பு.

மற்ற  பதார்த்தங்களை பார்த்த உப்பு சொன்னது,  பூவும் சேர்ந்ததனால்தானே நாருக்கும்  மனம்.  உங்களோடு நானும் சேர்ந்ததனால்தானே உங்களுக்கு இங்கே இடம்.  உப்பில்லாப் பண்டம் குப்பையிலே தெரியுமா.  

பதார்த்தங்களில் எதுவும் உப்புக்கு பதில் சொல்லும் விதத்தில் எதையும் பேசவில்லை. 

கொஞ்சம் ராங்கியுடனே உப்பு மேலும் சொன்னது.  உங்களோடு நான் கொஞ்சம் அதிகமாய் சேர்ந்துட்டாக்கா நீங்க குப்பையில் தான்.  

மற்றப்பதார்த்தங்களின் வாதம்


பதார்த்தங்களில் ஒன்றாக பச்சை வெள்ளரிப்பிஞ்சும்,  பச்சை கோஸ் துருவல் இருந்தன.  இனி பொறுக்க முடியாது என்று பொங்கி எழுந்தது போல அந்த துருவல் பேசியது,

உப்பே  இல்லாம பச்சையாகவே சாப்பிடக் கூடிய காய்கறி வகைதானட நாங்க தெரியுமா? 

 உப்பில்லாமல் பச்சையாகவே சாப்பிடக்கூடிய கிழங்கு வகை நான் என்று இப்போது சர்க்கரை வள்ளிக் கிழங்கும் சேர்ந்து கொண்டது.  

விருந்தை சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவன்  இலையில் மற்றோர் இடத்தில் வைக்கப்பட்டு இருந்த சர்க்கரையை ஒரு விரலால் தொட்டு நாக்கில் தடவி சப்புக் கொட்டி ருசி பார்ப்பதைக் கண்டதும் மற்றப் பதார்த்தங்களுக்கு தெம்பு பிறந்தது. 

உப்புக் எதிராக அவை இப்போது வியூகமே வகுத்து விட்டன. 

ஒரே குரலில் அவை யாவும் உப்புக்கு சவால் விடுத்தன.  

எங்கே அவர் சர்க்கரையைத் தொட்டு திங்கிறது போல உப்பைத் தொட்டு எடுத்து தின்னச் சொல் பார்க்கலாம்?  மற்ற பதார்த்தங்களுக்கு சுவை சேர்க்கத்தான் உப்பு.  அளவுக்கு மீறி சேர்க்கப்பட்டால் அந்தப் பதார்த்தங்களை குப்பையிலே தள்ளச் செய்து விடும் உப்பு.

உப்பின் தலைகுனிவு


ஆனால் தானே உணவாகிவிட முடியாது என்கிற உண்மை உப்புக் இப்போது உரைத்தது.  அந்த வெட்கத்தில் உப்பு கரைந்து போனது.