பாரதியும் இந்திய விடுதலையும் - ThulirKalvi

Latest

Search Here!

Tuesday, September 8, 2020

பாரதியும் இந்திய விடுதலையும்

பாரதியும் இந்திய விடுதலையும்

விடுதலை  

எந்த உயிராக இருந்தாலும் விடுதலையில் நாட்டம் கொள்ளும் என்பது உண்மையாகும்.  ஆடு மாடுகள் கூட விடுதலை பெற்று மனம் போன போக்கில் வாழ நினைக்கும் போது மனிதனின் நிலையை சொல்லவா வேண்டும் பகுத்தறிவு பெற்ற எந்த மனிதரும் அடிமை வாழ்வை வெறுக்கத்தான் செய்வர்.

அடிமையானது ஏன்? 

இந்திய நாடு உலகில் பல்வேறு வளங்களும் பெற்று உள்ள நாடு உலக அளவில் இந்திய நாட்டின் புகழ் மேலோங்கி இருந்தது.  ஆங்கிலேயர் பல நாடுகளை அடிமைப்படுத்தி கொடுத்தனர்.  இந்தியாவும் அடிமைப்படுத்த திட்டம் வகுத்தனர் இந்திய கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் அவர்கள் வருகை அமைந்தது. இந்திய மக்களுக்குள் ஒற்றுமை என்பது அறவே இல்லை. சாதி பிரிவினைகளை கணக்கிலடங்கா.  மத வேறுபாடுகளும் சொல்லி மாளாது.  இன வேறுபாட்டை ஏசினாலும் போக்க முடியாது.  ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டு தன் கண்ணை தன் கையிலேயே குத்திக் கொள்வது போல தங்களை தாங்களே அழித்துக் கொண்டனர். 

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில்தான் மகா கவிஞர் பாரதியார்  தோன்றினார். மக்களோ விடுதலையில் நாட்டம் இன்றி நாட்டுப் பற்று இன்றி வாழ்ந்தனர்.  நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா போல பாரதி தூங்கிக்கிடந்தவர்களை தட்டி எழுப்பி விடுதலை உணர்வு கொள்ளச் செய்தார்.

விடுதலைக் கவிஞர் 

கவிஞர்கள் சாகாவரம் பெற்றவர்கள்.  எதனையும் கற்பனைகள் கொண்டு பார்த்து,  தான் உணர்ந்ததை உலகிற்கு உணர்த்தும் பெருமை உள்ளவர்கள். அதுபோல இந்திய மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டுவதற்காக அவதரித்தவர்தான் பாரதியார்.  பாரதியார் பாடாத கருத்துக்கள் இல்லை. சொல்லாத செய்தி இல்லை.  தெரிவிக்காத நீதி இல்லை.  ஆனால் விடுதலை பாடல்களை பாடி வீறு கொள்ளச் செய்ததே அவரை உலகம் உணர காரணமாக அமைந்தது. 

ஷெல்லியும் பாரதியும் 

ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியும் தமிழ் கவிஞர் பாரதியும் ஒருவிதத்தில் ஒப்புமை உடையவர்.  இருவரும் தாம் வாழ்ந்த இடத்தைவிட்டு வேறு இடத்தில் தங்கி தன் பணியாற்றினர்.  ஷெல்லி லண்டன் சென்று பணி புரிந்ததையும் பாரதி புதுவையில் விடுதலைப் பணியை புத்தாண்டுகள் 10 ஆண்டுகள் பணியாற்றியதும் முன்பே கூறியுள்ளோம்.

விடுதலையின் பெருமை 

விடுதலையில் நாட்டம் அனைவருக்கும் அவசியம் வேண்டும்.  அதைப் பெற இந்திய மக்கள் முயல்வது கடமை. அறிவை செலுத்தாமல் அமுதத்தில் அறிவை செலுத்துவதே இன்றைய தேவை என்பது பாரதியின் எண்ணம்.  

இந்திய மக்களின் நிலை 

ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டு மக்கள் வாழ்வதையும் விடுதலையில் நாட்டம் இன்றி வாழ்வதையும் கண்டார் பாரதியார் மனம் பெரிதும் தொந்தரவுகள் செயல் உலகிற்கு ஒளி தரும் இறைவியை வெற்றி விண்மீன்களை வாங்குவது போன்று உள்ளது தான் இன்பமாய் வாழ விடுதலை என்பது சரியன்று தன் இரண்டு கண்களையும் வெற்றி ஒரு ஓவியத்தை வாங்குவது நகைப்புக்கு உரியது அதுபோலத்தான் நல்ல படி வாழ்ந்தால் போதும் என்று சுதந்திர உணர்வின்றி வாழலாம் என்று நம்மை சிந்திக்க வைக்கிறார்

சுதந்திரப் பயிர் 

சுதந்திரம் என்ற பெயர் எப்படி விளைந்தது என்பதை இந்திய மக்கள் அனைவரும் உணர்வது அவசியம்.  பயிர் விளைய நீர் தேவை.  நீர் இல்லை என்றால் உலக வாழ்வு இல்லை என்று புறநானூறு கூறும்.  சுதந்திரம் என்ற பயிர் பலருடைய கண்ணீரால் வளர்ந்தது.

"தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா 
இப்பயிரை கண்ணீரால் காத்தோம் 
கருகத் திருவுளமோ" 

என்ற பாடல் காலத்தால் அழியாதது.

நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டவர்கள் கொடிய சிறையில் தள்ளப்பட்டனர்.  சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தவர்.  மனைவி மக்கள் உற்றார் உறவினர் முதலியோரை இழந்து நாட்டு விடுதலையை உயிர்மூச்சாய் கொண்டு பலர் தியாகம் செய்தனர்.  இத்தகைய பெருமக்களால் தான் சுதந்திரம் என்ற பயிர் தழைத்து வளர்ந்தது.  அதற்காகத் தம் இன்னுயிரை இழந்து பல இன்னல்களை இன்முகத்துடன் ஏற்ற தியாகிகள் பெருமையைக் கூற வார்த்தைகள் போதாது. 

சுதந்திர தாகம் 

தண்ணீர் வேட்கை ஏற்பட்டால் நீர் பருக தீரும்.  சுதந்திர தாகம் நாட்டில் ஏற்பட காரணமாக இருந்தவர் பாரதியார் என்று கூறுவது மிகப் பொருத்தமாகும்.  அந்த தாகம் சுதந்திரம் கிடைத்தால் தான் தீரும் என்பது பாரதியாரின் அசைக்க முடியாத நம்பிக்கை.  

சுதந்திர தாகம் தணியாது எப்போது?  அடிமை மோகம் தீர்வது எப்போது பாரத அன்னையின் அடிமை விலங்குகள் உடைப்பது எப்போது?  இத்தகைய விழாக்கள் மனதில் ஏற்பட்ட இன விடுதலை வேள்வியில் ஈடுபட்டோர் பசி பஞ்சம் நோய் போன்றவற்றால் வாடினர். பிழைக்க வந்த கயவர்களோ, மேலான போகமான வாழ்வு வாழ்ந்தனர்.  இதைக் கண்ட பாரதியாரின்  நெஞ்சம் எரிமலையானது.   விடுதலை வீரர்கள் தரையில் தள்ளி சித்திரவதைகள் செய்தாலும், கோடிக்கணக்கான இன்னல்கள் வந்தாலும், சுதந்திர தேவியின் மீது கொண்ட பற்றை இழக்க தயாராக இல்லை. எத்தகைய தியாகத்தையும் செய்ய முன்வந்தனர்.

விடுதலை 

இந்திய பெரு நாட்டில் அன்று முதல் இன்று வரை தேர்வு தாழ்வு ஆண்டான் அடிமை போன்ற பாகுபாடுகள் நீக்கியதாக வரலாறு இல்லை.  பறையருக்கும் புலையருக்கும் விடுதலை கிடைக்க வேண்டும் என்று தீராத ஆசை பாரதி வெளியிட்டார்.  ஏழை என்றும் அடிமை என்றும் வேறு யாரும் இந்த உலகில் இருக்கக்கூடாது.  இழிவான மனிதர் என்பவர் இந்தியாவில் இல்லை.  அறியாத கல்விச்செல்வம்,  பொருட்செல்வம் பெற்று மன நிறைவுடன் சரிநிகர் சமானமாக வாழ வேண்டும்.  இப்படி ஒரு நிலை நம் நாட்டில் ஏற்பட வேண்டும் என்பது பாரதியாரின் விருப்பமாகும்.

புதிய ருஷியா 

சமுதாயம் சீர் பெற வேண்டும் என்பது பாரதியின் உள்ளிடக்கை. அக்கிரமம் அநியாயம் நாட்டின் எந்த மூலையில் நிகழ்ந்தாலும் பாரதியின் பேனாமுனை சும்மா இருந்ததில்லை. கம்யூனிச நாடான ரஷ்யாவில் ஜார் மன்னன் கொடுங்கோல் ஆட்சி புரிந்தான்.  இரணியன்போல அரசாண்டான். யாரேனும் பாவி என்ற பாடல் புரட்சியில் நாட்கள் கொண்டவர்களை உள்ளம் தொட்ட பாடல்கள் ஆகும் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியில் மக்கள் வாடி வதங்கி பசி பட்டினி தலைவிரித்தாடியது மக்கள் திரண்டெழுந்து மாமலையும் தவிடு பொடியாக்கும் என்பது முன்னோர் வாக்கு முடிவில் கொடுங்கோலன் ஜார் மன்னன் விழுந்தால் அந்த இனிய செய்தி கேட்ட பாரதி அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை

இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் என்ற நிலை இந்தியாவில் மட்டுமில்லை ருசியாவில் இருந்தது என்பதை வரலாறு கூறும்.  இமயமலை வீழ்ந்தது போல ஜார் மன்னன் வீழ்ந்தான்.  குடிமக்களில் எண்ணப்படி பொதுவுடமை ஆட்சி ஏற்பட்டது. எனவே தன் நாடு மட்டுமின்றி உலகில் உள்ள எந்த நாடும் அடிமை வாழ்வு வாழ்தல் கூடாது என்ற உயர்ந்த எண்ணம் பாரதியின் எண்ணமாகும்.

விடுதலை வீரர்கள் இந்திய நாட்டின் விடுதலைக்காக உழைத்த பெருமக்கள் பலரையும் பாடி போற்றிய பாவலர் பாரதியார் தேசப்பிதா மகாத்மா காந்தி அடிகளை தன் உளமாற பாடி போற்றினார் வறுமையில் வாடிக் கிடந்த இந்திய நாட்டை வாழ்வை இந்த வந்தவர் மகாத்மா காந்தி என்று பாடி நம்நாட்டு விடுதலையில் நாட்டம் கொள்ள வைத்தார்

வ உ சிதம்பரனார் 

இந்திய வரலாற்றில் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் அதற்கு தனி இடம் உண்டு இவ்விருவரும் இணைந்து போராடிய விடுதலை வரலாறு கூறுகிறது பாரதியும் பேச்சால் சிதம்பரம் விடுதலை உணர்வை வளர்த்தனர் வெள்ளை இனத்தவரின் குள்ள நரித் தனத்தால் வ உ சிதம்பரனார் சிறையில் செக்கிழுத்தார் கல் உடைத்தார் என்ற கொடிய காட்சியை பற்றி பாடிய பாரதியின் பாடல் இந்திய மக்கள் மனங்களில் ஆவேசத்தை ஏற்படுத்தியது லாலா லஜபதிராய் இந்திய துணைக்கண்டத்தில் பஞ்சாப் கணக்கற்ற வீரர்களை உருவாக்கிய பெருமை பெற்ற மாநிலம் ஆகும் வீரத்தின் விளைநிலம் என்று போற்றும் இங்கு தான் பகத்சிங் சுகதேவ் ஞானகுரு போன்ற புரட்சி வீரர்கள் தோன்றி பெருமை பெற்றனர் தம் இன்னுயிரை ஈந்து புகழ் பெற்றனர் அந்த வரிசையில் பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் குறிப்பிடத்தக்கவர் சொந்த நாட்டில் விடுதலையைப் பற்றிப் பேசிய காரணத்தால் கொடுமையான முறையில் தாக்கப்பட்டவர் எனினும் நம் உள்ளம் சோர்வடையாத ஒரு என்ற பெருமை இவருக்கு உண்டு அந்த மாபெரும் சிங்கத்தை நாடு கடத்தி ஆங்கில அரசு கொடுமை படுத்தியது பஞ்சாப் சிங்கம் பல கொடுமைகளை அனுபவித்தார் தன் சொந்த நாட்டை விட்டு அந்த மாநில நேர்மையை அவர்தம் பாரதி தன் பாட்டால் வடித்துள்ளார்

தாதாபாய் நவரோஜி 

இந்திய விடுதலையின் தாதாபாய் நவரோஜி தனியிடமுண்டு பொறுமையின் சிகரம் என்பது ஆண்டு 80 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த மாமேதை வெள்ளையர்களும் அதிகமா பெரும் தொண்டர் தான் அந்த பெரியவர் கோபால கிருஷ்ண கோகலே மிதவாதிகளின் தலைவரும் காந்தியடிகளின் குருநாதரும் கோபால கிருஷ்ண கோகலே என்பதை உலகமே அறியும் விடுதலையில் ஆற்றிய பணிகள் பாரதியார் சிறப்பித்து பாடப்பட்டுள்ளன

சுதந்திரம் என்பது என் பிறப்புரிமை அதை அடைந்தே தீருவோம் என்று முழக்கமிட்டவர் திலகர் மராட்டிய சிங்கம் தீவிரவாதிகளின் தலைவர் திலகர் பாரதியின் உள்ளம் கவர்ந்தவர்.  அவர் மேலும் இந்திய விடுதலைக்கு பாடுபட்ட தன் இன்னுயிரை ஈந்த பலரையும் போற்றிப் பாடிய பாரதியார் பாடல்கள் அழியாத செல்வமாகும் 

நம் கடமை

இந்திய விடுதலையில் பாரதியின் பங்கு குறிப்பிடத்தக்கது. விடுதலைக்காக பாடுபட்ட அறிஞர்கள் தலைவர்கள் போன்றோர் செய்த தியாகங்கள் தான் எத்தனை எத்தனை. அதன் பயனை நாம் அனுபவிக்கிறோம். பொருள் சம்பாதித்து ஒருவனுக்குத்தான் பொருளின் பெருமை புரியும்.  அதுபோல நாட்டு விடுதலையில் ஈடுபட்ட சிங்கங்கள் புரிந்த தியாகங்களின் விலையை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். பெற்ற விடுதலையை பேணி காக்க நாம் முன்வருவது மிக அவசியம்.