வாழ்க்கை வரலாறு - மகாகவி பாரதியாரின் அரசியல் ஈடுபாடு - ThulirKalvi

Latest

Search Here!

Wednesday, September 2, 2020

வாழ்க்கை வரலாறு - மகாகவி பாரதியாரின் அரசியல் ஈடுபாடு

வாழ்க்கை வரலாறு - மகாகவி பாரதியாரின் அரசியல் ஈடுபாடு

அரசியல் 

அரசியல் ஒரு சாக்கடை என்ற கூற்று இன்று உறுதியாகிவிட்டது.  நம் பாரதியாரோ அரசியலுக்கு வந்தது பயன் கருதி அன்று.  அப்படி நினைத்திருந்தால் சோற்றுக்கே திண்டாடிய  நிலை அவருக்கு ஏற்பட்டிருக்குமா?  வறுமைப் பிடியில் சிக்கி தவித்து இருப்பாரா?  அவர் அரசியலுக்கு வந்த வரலாறு புதுமையானது.

அரசவை கவிஞர் 

எட்டயபுரம் மன்னர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரது அரசவையில் பாரதியார் 1902 இல் பணியை ஏற்றார்/  மன்னருடன் தமிழ் கவிதைகள் பற்றி உரையாடியும் தமிழின் சிறப்புகளை உரைத்தும் தன் பணியை செவ்வனே ஆற்றி வந்தார்.  பாரதிக்கு அப்பணி மன நிறைவை தரவில்லை.  உலகுக்கு அறிவுரைகள் கூறப்பட்ட பாரதி தனிமனிதன் ஒருவருக்கு பயன்படுவது முறையாகுமா?  எட்டையபுரம் வாழ்வு பாரதிக்கு கசந்தது.  

அரசர் தாம் தாம் முன்பு காசியில் வாக்களித்தபடி கவிஞரை உரிய முறையில் நடத்தி வந்ததை மறுப்பதற்கில்லை.  பாரதிக்கு இப்பணி அறவே வெறுத்தது. ஒருநாள் தம் நண்பர்களிடம் முகஸ்துதி செய்து வயிறு வளர்க்கும் தம் பிழைப்பு தமக்கே பிடிக்கவில்லை என்பதை கவிதை வடிவில் தந்தார். விளையாட்டு வினையானது.  பொறாமை கொண்ட புல்லர்களுக்கா  நம் நாட்டில் பஞ்சம்?  அரசரது செவியில் இச்செய்தி எட்டியது.  

மன்னர் கோபத்திற்கு ஆளான கவிஞர் இனியும் அங்கு இருப்பது தகுமா? அப்பணியில் இருந்து அவராகவே தன்னை விடுவித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.  எதையும் ஏற்கும் இயல்புடைய பாரதி இந்த சவாலையும் ஒரு படிப்பினையாக ஏற்றார்.

தமிழாசிரியர் பணி 

எட்டயபுர அரச அவையில் இருந்து பணியைத் தொடர்ந்த பாரதியை மதுரை சேதுபதி கலாசாலை இரு கை நீட்டி வரவேற்றது மாதா பிதா குரு தெய்வம் அல்லவா?  அங்கே தமிழாசிரியர் பணியை ஏற்று சிறக்க பணிபுரிந்தார். அவர் பணிபுரிந்த காலம் மூன்று மாதங்கள்தான்.  அதற்குள் அவர் புரிந்த பணிகளும் அங்கும் அவரால் முழு மனநிறைவுடன் பணிபுரிய இயலவில்லை.  செய்யும் தொழிலே தெய்வம் என்ற வாக்கின்படி தன் பணியை செய்து விலகலானார். அந்த குறுகிய காலத்திலேயே தன் முத்திரையைப் பதித்தார். 

பாரதியால் அப்பள்ளிக்குத்தான் பெருமை ஏற்பட்டது.  அவர் பெருமை அடைந்தார் என்று கூற இயலாது.  இன்றும் பாரதியார் தமிழ் ஆசிரியராக பணி செய்த பள்ளி என்பதை அப்பள்ளி பெருமையுடன் கூறிக் கொள்கிறது.

சென்னை குடிபுகுதல் 

சென்னை மாநகரம் வந்தவர்களை எல்லாம் வரவேற்று வாழவைத்த நகரம் ஆகும்.  அக்கூற்று பாரதி வாழ்விலும் உண்மையானது.  ஓயாத உழைப்பாளிகள் பணி செய்யாதே வீணே காலம் கழிக்க விரும்பார் அல்லவா?  சென்னை நம் கவிஞரை வரவேற்று அரசியலில் அவர் நுழைய வழிவகுத்துக் கொடுத்தது

சுதேசி மத்திரன் 

தேசப்பற்றும் தமிழ் பற்றும் ஒருங்கே கொண்ட ஜி சுப்பிரமணிய அய்யர் சுதேசி மித்திரன் இதழை நடத்தி வந்தார்.  பாரதியின் திறமை,  ஆற்றல் ஆகியவற்றை கேள்வியுற்ற அவரை சுதேசி மித்திரன் இதழின் துணை ஆசிரியராக அமர்த்தினார். பாரதியின் வருகைக்குப்பின் சுதேசமித்திரன் புதுமை எழுச்சியுடன் செயல்பட்டது.  பாரதியின் கவிதைகள்,  கட்டுரைகள்,  கதைகள் அந்த இதழை அழகு செய்தன.  மேலும் சக்கரவர்த்தினி என்ற இதழின் பொறுப்பாசிரியர் பொறுப்பும் பாரதியை தேடிவந்தது.  பதவியை அவர் நாடிச் சென்றதே இல்லை.  பதவி அவரைத் தேடி வந்தது.  பாரதியார் தம் மனத்தில் தோன்றிய எண்ண அலைகளை உரிய முறையில் வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டது.

வெள்ளையர் ஆதிக்கம் 

பிழைக்க வந்த வெள்ளையனை கொடுமைப்படுத்துவதை நம்மவர் வாடி வருந்துவதும் கண்ட பாரதி மனம் நொந்தார்.  தன் மனக் கொதிப்பு எழுத்தில் வடித்து காட்டினார்.  இம்மென்றால் சிறைவாசம்.  ஏனென்றால் வனவாசம் என்ற நாட்டு நிலையை உணரச் செய்த பெருமை பாரதியாரைச் சாரும்.  அதனா லன்றோ விடுதலைக் கவிஞர் என்ற பெருமையையும் பெற்றார்.  சுதேசமித்திரன் இதழில் பொய் பித்தலாட்டக் காரர்களை சாடினார்.  பொய்வேடம் போடுபவர்களை தோலுரித்துக் காட்டினார்.  தியாகிகளைப் போற்றியும் விடுதலையின் அவசியத்தையும்அவர் கை  எழுதி குவித்தது. 

சிதம்பரனார் தொடர்பு 

வெள்ளையருக்கு எதிராக கப்பலோட்டிய தமிழனை அறியாதவர் யார்?  செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் பாரதியின் பாடல்கள், எழுத்துக்கள்,  கட்டுரைகள் கவர்ந்தன.  பேச்சுக்கு சிதம்பரம்,  பாட்டிற்கு பாரதி,  எழுத்திற்கு வ,வே,சு அய்யர் என்று நாடு போற்றியது.  தீரர் சுப்பிரமணிய சிவாவும் இவருடன் சேர அரசியல் உலகில் மும்மூர்த்திகள் என்று அரசியல் உலகம் போற்றிப் புகழ்ந்தது.

குரு உபதேசம் 

1906இல் காசியில் காங்கிரஸ் கூட்டம் நடந்தது.  பழம்பெரும் தேசத்தலைவர் தாதாபாய் நௌரோஜி தலைவராக இருந்த அக்கூட்டத்தில் சுயராஜ்யம் என்ற முழக்கம் முதன்முதலாக எழுந்தது.  அக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாரதி சுவாமி விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதாவை சந்தித்தப் சந்திப்பு கவிஞரின் வாழ்வில் ஒரு திருப்புமுனையே என்று கூறலாம்.

மகனே,  மனத்தில் பிரிவு உணர்ச்சியை நீக்கு.  சாதி மதம் இனம் கோத்திரம் பார்ப்பது அனாகரிகம்.  அன்பை மட்டும் என்றும் அகத்தில் கொள்.  நீ பிற்காலத்தில் உலகப்புகழ் உயர்வாய் என்று அறிவுரை பகர்ந்தார்.  பெண்களை நடத்தும் விதம்,  மனைவியை மதிக்கும் முறை,  கல்வியின் தேவை சமுதாய முன்னேற்றம், போன்றவற்றை தமக்கு உள்ளவாறு உணர்த்திய அவரை தன் குருவாக பாரதியார் ஏற்றுவது பொருத்தமே.  மேலும் பெண்ணை போற்றி புதுமைப் பெண்ணை பாடவும் இச்சந்திப்பே காரணம் எனவும் கூறலாம்.

தீவிர அரசியல் ஈடுபாடு 

1905 இல் ஆங்கில அரசு தனி நிர்வாக வசதியின் பொருட்டு வங்காளத்தை இரண்டாகப் பிரித்தது.  இதனால் நாட்டில் எதிர்ப்புகள் மேலிட கலவரம் ஏற்பட்டது.  பாரதியாரையும் இச்செயல் பெரிதும் ஈடுபாடு கொள்ளச் செய்தது.  வங்கம் ஈன்றெடுத்த விபின் சந்திரபாலர் அழைத்து கடற்கரையில் அருமையான சொற்பொழிவுகள் நிகழ்த்தி மக்கள் உள்ளங்களில் சுதந்திரக் கனலை ஊட்டினார். 

இந்தியா உதயம் 

தேசபக்தர் ஆச்சாரியரை அறியதவர் இருக்க நியாயம் இல்லை.  அவர் பெயரை அவர் அமைத்த கல்வி நிலையங்கள் சென்னை திருவல்லிக்கேணியில் நினைவூட்டி வருகின்றன.  நாட்டுப்பற்றும் விடுதலை உணர்வும் கொண்டவர் ஒரு நல்ல பத்திரிக்கை ஆசிரியரை எதிர்பார்த்திருந்தார்.  தேட போன்ற மருந்து கால்களில் கிடைத்தது போல பாரதியார் அவருக்கு கிடைத்தார் என்பதில் மாற்றுக் கருத்து உண்டா? 

திருமால் ஆச்சாரியார்,  சீனிவாச ஆச்சார்யார்,  சுப்பிரமணிய ஐயர் போன்ற பெருமக்கள் முயற்சியால் 1907 இல் இந்தியா இதழ் புதுப்பொலிவுடன் வெளிவந்தது.  பாரதி கைவண்ணம் பட்ட பின் இந்தியா புது மெருகு பெற்று மக்களின் கரங்களில் திகழ்ந்தது.  பால பாரதம் என்ற ஆங்கில இதழையும் நடத்தி தன் மொழி அறிவை நிலைநாட்டிய பாரதியை தேடக் கிடைக்காத திரவியம் என்று போற்றியது பாரதம்.

சூரத் காங்கிரஸ் மாநாடு 

காங்கிரஸ் இயக்கம் நடத்திய மாநாடுகள் சூரத் காங்கிரஸ் மாநாடு வரலாற்றில் இடம் பெற்றது ஆகும்.  தீவிரவாதிகளும் மிதவாதிகளும் இரு வேறு பாதைகளில் சென்று நடத்திய மாநாடு அது.  தீவிர வாதத்தை ஏற்று அந்த பணியில் பாரதியும் தன்னை இணைத்துக் கொண்டார்.  இரு பிரிவினரும் மோதிக்கொண்ட இம்மாநாட்டில் திலகரின் உயிரைக் காத்த பெருமை நமக்கு உண்டு.  தமிழகம் என்றும் நீதிக்கு தலைவணங்கு என்ற கருத்தை பாரதி உணர்த்தினார்.  பாரதியின் பாடல்களை கிருஷ்ணசாமி அய்யங்கார் சர்வதேச சுதேச கீதங்கள் என்ற தலைப்பில் வெளியிடச் செய்தது.  அவரை உலகம் அறியச் செய்த செயலாகும்.  

சுயராஜ்ய தினம் 

சென்னை ஜனசங்கம் என்ற தீவிரவாதிகள் அமைப்பு பாரதியார் தலைமையில் உருவானது.  சுதேசி பொருட்கள் வாங்க வேண்டும் என்ற கோட்பாட்டின்படி பாரத் பந்த்தர் என்ற கடையும் நடத்தப் பெற்றது.  தீவிரவாத தலைவர்கள் ஒன்று கூடி சுயராஜ்ய தினத்தை கொண்டாட முடிவுசெய்தனர்.

புதுமையான ஊர்வலம்

தமிழகத்தின் பல நகரங்களிலும் பல தலைவர்கள் முன் நின்று ஊர்வலத்தை நடத்தினர்.  சென்னையில் சுயராஜ்ஜிய தின ஊர்வலம் பாரதியார் தம் தலையில் எளிதாக நடத்திக்காட்டினார்.  ஊர்வலம் என்றால் காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.  நம் பாரதியும் அனுமதி இறுதிவரை பெற்றிலர்.  ஊர்வலத்திலும் தொண்டர்களும் இசைக் குழுவினரும் அஞ்சிய வாறே சென்றனர்.  பாரதியாரின் வீட்டினரோ நெருப்பை மடியில் கட்டிக் கொண்ட துயரடைந்தனர். ஊர்வலத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. காவல்துறையினர் யாரையும் கைது செய்யவில்லை. 

பாரதியாரே வியக்கும் வகையில் நடந்து அந்த புதுமையான ஊர்வலம் மெரினா கடற்கரையை அடைந்தது.  சுயராஜ்ய தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற விளக்கக் கூட்டம் சிறப்பாக நடந்தது.  இவற்றில் முக்கிய பங்கேற்ற அவர் பாரதியார் என்பதை நாம் பெருமையுடன் சொல்லலாம்.

சிதம்பரனார் சிறைப்பட்டார் 

இதே நாளில் முத்துக்குளிக்கும் முக்கிய துறைமுக நகரமான தூத்துக்குடியில் சுயராஜ்ய தின ஊர்வலம் சிதம்பரனார் தலைமையில் நடைபெற்றது. சிதம்பரனாரின் மீது பொய்க்குற்றம் சுமத்தி சிறையில் தக்க  சமயம் பார்த்திருந்த வெள்ளையருக்கு இது நல்ல வாய்ப்பு என்று சொல்லலாம். அவரையும் சிவாவையும் கைது செய்து சிறையில் தள்ளியது.  இந்த வழக்கில் சான்று சொல்லிவைத்தார் நம் பைந்தமிழ்ப் பாவலர்.

இந்தியா இதழின் பணி 

ஆருயிர் நண்பர்கள் சிறையில் வாடுவது கண்ட பாரதி நெஞ்சம் கொதித்தது தன் எழுத்தில் புது வேகத்தை கூட்டினார்.  இந்தியா நாளிதழில் வெள்ளையரை எதிர்த்து கேலிச்சித்திரங்கள் வெளிவந்தன.  நாட்டின் தற்போதைய நிலை தியாகிகள் வெள்ளையரால் படும் கொடுமைகள் போன்றவற்றை அவர் பேனா முனை வெளிப்படுத்தியது.  தம் கருத்துக்களை தொடர்ந்து இந்தியா இதழில் தீட்டி வந்தார்.

துயர நிகழ்ச்சி

இந்தியா இதழ் மக்கள் கைகளில் எல்லாம் தவழ்ந்தது. அவ்விதழ் இல்லாத கிராமமே இல்லை.  படிக்காத மக்களே இல்லை.  வெள்ளையரின் கழுகுப்பார்வை இந்தியா இதழ் மீது சென்றது.  பத்திரிக்கையை பொறுப்பேற்று நடத்திய திருமால் ஆசாரியர் சீனிவாசர் சுப்பிரமணிய ஐயர் போன்ற வீர மறவர்களை அரசு கைது செய்தது.  பாரதியை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்து செய்தியை அறிந்து தலைமறைவாக முடிவு செய்தார். 

ஏன் தலைமறைவு 

தம் உற்ற  நண்பர்களுடன் கூடி கலந்து பேசி வெள்ளையர் இரும்பு கரங்கள் தொட முடியாத இடம் எது என ஆய்ந்தனர்.  புதுவையே அதற்குரிய  இடம் என தேர்வு செய்து புகைவண்டியில் தனது நண்பர் மூலம் புதுவை சென்று அடைந்தார்.  அவர் உயிரை வெல்லம்ம் என்று கருதி அவ்வாறு சென்றிலர்.  தம் கருத்துக்களை மக்கள் தொடர்ந்து அறிய வேண்டும்.  அதுவே தமது பணி என்று இந்த முடிவுக்கு வந்தார்.