ஒற்றுமைக்கு ஒருவன் பாண்டியர்களின் வரலாறு The History of Pandiyargal - ThulirKalvi

Latest

Search Here!

Sunday, September 27, 2020

ஒற்றுமைக்கு ஒருவன் பாண்டியர்களின் வரலாறு The History of Pandiyargal

ஒற்றுமைக்கு ஒருவன் பாண்டியர்களின் வரலாறு The History of Pandiyargal 


கானப்பேர் என்ற ஊரில் பெரும் கோட்டை கட்டி ஆண்டுவந்த வேங்கைமார்பன் என்ற பெரும் வீரனை வெற்றிகண்டு அக் கோட்டையை கைப்பற்றியதால் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி எனப் பட்டான் ஒரு பாண்டிய மன்னன் 

வீரம் மிக்கவனான இவன் தமிழர் புலமை பெற்றவனுங் கூட.  

கடைச் சங்கம் காத்த  பாண்டிய அரசர்களில் இவனும் ஒருவன் அகத்துறைப் பாடல்களைப் புலவர் உருத்திரசன்மர் துணையோடு தொகுத்து அகநானூறு என்ற தொகை நூலாக்கிய சிறப்பும் இவனுக்கு உண்டு. 

சேரரோடும் சோழரோடும் பெரும் நட்புக் கொண்டிருந்த இவன். பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி சேரமான் மாரி வெண்கோ ஆகிய மூவரும் இணைந்திருந்த காட்சி கண்டு இன்புற்று அவ்வையார் பாடிய பாடல் ஒன்று உண்டு.


புறநானூற்றில் (376) காணப்படுகின்ற அப்பாடல் வருமாறு....


முத்தீப் புரையக் காண்டக விருந்த 
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்தீர்
யானறி யளவையோ விதுவே வானத்து
வயங்கித் தோன்றும் மீனினு ம்மென 
இயங்கு மாமழை யுறையினும் 
உயர்ந்துமேந் தோன்றிப் பொலிக நுந்நாளே

 நற்றிணையில் ஒன்றும் (98) அகநானூறில் ஒன்றும் (26) மட்டுமல்ல திருவள்ளுவ மாலையிலும். கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி எழுதிய பாடல்கள் காணப்படுகின்றது.  உலகப் பொதுமறையாம் திருக்குறள் இவன்  தலைமையிலேயே  அரக்ங்கேறியதாக கூறப்படுவது முண்டு. 

தமிழ் சங்கத்தை பற்றிய குறிப்புகள் இறையனார் களவியல் உரையில் தான் காணப்படுகின்றன.  மூன்று சங்கங்களின் வரலாற்றறையும்  அந்த உரை சுருக்கிக்கூறுகின்றது.  

இந்த சங்கங்களின் காலமும் தொல்காப்பியத்தின் காலமும் இன்னதென இன்னும் திட்டவட்டமாகக் கூற இயலவில்லை. 

ஆட்சியின் முடிவு

 பாண்டிய நாட்டில் நடைபெற்று வந்த கடைச்சங்கம் கிபி மூன்றாம் நூற்றாண்டில் முடிவுற்று இருக்கலாம் என்று தெரிகிறது.  இதற்கு காரணம் ஆட்சிக்கு சோதனை போல 12 ஆண்டு காலம் அங்கே நிலவிய கொடிய பஞ்சம் என்று கூறப்படுகிறது.