தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை Thagadoor Erintha Perunjseral Irumborai | The History of Sera Nadu சேர நாட்டின் வரலாறு - ThulirKalvi

Latest

Search Here!

Sunday, September 20, 2020

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை Thagadoor Erintha Perunjseral Irumborai | The History of Sera Nadu சேர நாட்டின் வரலாறு

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை Thagadoor Erintha Perunjseral Irumborai  | The History of Sera Nadu சேர நாட்டின் வரலாறு


தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 

சோழர்களில் புகாரையும் கடம்பரது பூமி நகரையும் வல்வில் ஓரியின் கொல்லிமலையும் வென்று தன் ஆட்சி நிறுவியவன் பெருஞ்சேரல் இரும்பொறை. செல்வக்கடுங்கோவுக்கும் வேளாவிக்கோ பதுமனின் இரண்டாவது மகளுக்கும் பிறந்தவன். 17 ஆண்டுகால நாடு ஆண்டவன். 

அரிசில் கிழார் என்ற அருந்தமிழ் புலவரின் பாட்டு திறம் மெச்சி அமைச்சர் பதவியை கொடையாகத் தந்தவன் இரும்பொறை. ஒரு முறை இவன் கருவூரில் முகாமிட்டிருந்த போது இவனை காணவந்த மோசிகீரனார் என்ற பெரும்புலவர் களைப்பு மிகுந்து வெற்றிமுரசு வைக்கும் கட்டிலில் படுத்து உறங்கிவிட்டார். விவரம் அறிந்த மன்னன் அங்கேயே வந்து அவருக்கு கவரி வீசி கழித்தான்.  அவர் இதுபற்றி நயம் தோன்ற பாடியிருக்கிறார். அந்த அளவுக்கு தமிழை காத்தவன். தமிழ் புலவர்களை மதித்தவன். கொடைத்திறம் உள்ளவன்.

ஒருமுறை சேரனும் காரியமாக சேர்ந்து,  நாமக்கல்லை தலைநகராகக் கொண்டு ஆண்ட வல்வில் ஓரி மீது போர் தொடுத்தனர் தகடூர் அஞ்சியும் ஓரியம் நின்று காரியை தோற்கடித்தார்கள்.  

காரி சேர மன்னனிடம் தஞ்சம் புக பிறகு அவன் படைத் துணையுடன் முழு வேகத்தோடு ஓரி மீது போர் தொடுத்தான் காரி. இப்போரில் நாமக்கல்லில் ஓரி வீர மரணம் அடைந்தான்.  பிறகு தகடூர் என்னும் தருமபுரியை ஆண்ட அஞ்சி மன்னனோடு போர் தொடங்கியது. அப்போரில் அஞ்சியும் மாண்டான். 

இந்த வெற்றிக்குப் பிறகுதான் இரும்பொறை தகடூர் எறிந்த (Thagadoor Erintha) என்கிற விருதுக்கு பெயர் தாங்கியது.  ஆனால் இரும்பொறையின் இந்த வெற்றிக்கு கண்டு புலவர் அரிசில் கிழார் மகிழ்ச்சியடையவில்லை.  தகடூரை ஆண்ட அதியர்குடி அறிஞர் பெருமக்கள்  மிகுந்த குடியாகும்.  ஆகவே அழியாது பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  அதன்படியே அதியூர் குடியில் தோன்றிய தகுதிமிக்க ஒருவனை தேர்ந்தெடுத்து அந்நாட்டு மன்னன் ஆக்கினான் இவன்.

மாந்தரம் பொறையன் கடுங்கோ

வெற்றி பல குவித்த சேர மன்னனான இவனின் போர்த்திரமும் குலமும் பற்றி கடைச்சங்கப் புலவர் பரணர் புகழ்ந்து பாடியிருக்கிறார்.  

இளங்கோவடிகள்

இமயவரம்பனுக்கும் நற்சோணைக்கும் பிறந்தவன் இவன். ஒரு நாள் அரசவையில் மன்னரோடு இருந்த இவனை பார்த்து நிமித்திகர் ஒருவர் "விரைவில் நீரே அரசு கட்டில் ஏறுவீர்" என்றார்.  அண்ணன் செங்குட்டுவன் இருக்கும்போது நமக்கு ஆட்சிப் பொறுப்பா? என வெகுண்டு கூறி,   யார் தடுத்தும் கட்டுப்படாமல் அன்றே துறவிக் கோலம் பூண்டு குணவாயிற் கோட்டம் சென்று சேர்ந்தவர் இளங்கோ வடிகள். 

சைவ சமயத்தைச் சேர்ந்தவரான இவர் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக யாத்ததே ஐம்பெருங்காப்பியங்களின் ஒன்றான சிலப்பதிகாரம்.  

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலின் தம்பியான இவன் இமய வரம்பனுக்கும் செங்குட்டுவனுக்கும்  அடங்கியவனாகத் தொண்டியிலிருந்து அரசு புரிந்தவன். காக்கைபாடினியார், நச்செள்ளையார் என்ற பெண்பாற் புலவர்க்கு அரசவையில் இடம் கொடுத்து மரியாதை செய்தவன். 

தண்டகாரண்யம் சென்று ஆரியர்களோடு போர் தொடுத்தும்,  பிறகு மழவர்களோடு போர் தொடுத்தும் வெற்றி பல குவித்த பெருமைக்கு உரியவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்.

மற்ற சேர மன்னர்கள் 

கூடலூர் கிழார் என்னும் புலவரைக் கொண்டு "ஐங்குறுநூறு" தொகுத்ததாகக்  கூறப்படும் சேரமன்னன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை,

 புலவர் திருத்தாமதனரால் பாடப்பட்ட சேரமான் வஞ்சன், 

சைவம் தழைக்க பாடுபட்ட செங்கோல் வீரராகவப்பெருமாள், 

நம்பூதிரி கிராமங்களை ஆண்ட இரண்டாம் குலசேகரப் பெருமாள்,
 
எம்மதமும் சம்மதமே என்று கருதிய பாஸ்கர ரவிவர்மன், 

கலாச்சாவு அதிகம் ஏற்படாதபடி அரசு புரிந்த மூன்றாம் குலசேகரப் பெருமாள்,

புலவர்கள் கபிலர் - இளங்கீரையார் காலத்தில் ஆண்ட சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, 

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைக்கும்வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் பிறந்தவன் இரும்பொறை, 

பெருமாள் பட்டம் பெற்ற சேரமான் கேரளன், 

புலவர் மாங்குடி கிழாரால் பாடப்பெற்ற வட்டாற்று எழினியாதன்

சேரன் செங்குட்டுவனுக்கு பிறகு ஆட்சி செய்த குட்டுவன்சேரல்

தன் நாட்டில் வந்து தஞ்சம் புகுந்த யூதர்களையும் ரோமர்ர்களையும் காத்த பாஸ்கர ரவிவர்மன்,

சிறந்த சிவபக்தனான  சேரலன்,

அப்பரால் பாடப்பட்ட மன்னன் சேரலன் பூமியான். 

அவனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த செங்கோற்பறையன்,

63 நாயன்மார்களில் ஒருவராக விளங்கிய முதலாம் சேரமான் பெருமாள், 

24வது வயதில் அரசு பதவியேற்ற தம்பிரான் தோழர் பெருமாள், 

வைணவ பக்தராக விளங்கிய இரண்டாம் சேரமான் பெருமாள், 

மூன்றாம் சேரமான் பெருமாள், 

முதலாம் அந்துவன் சேரல் இரும்பொறை, 

எனச் சேர மன்னர்களின் பலரின் பெயர் விவரங்கள் நமக்குத் தெரிகிறது தவிர அவர்களை பற்றிய தெளிவான தீர்க்கமான விவரங்கள் இன்னும் ஆராய்ச்சியில் இருக்கின்றன.  ஆக மொத்தத்தில் சேர மன்னர்கள் சிறந்த வீரர்களாக மட்டுமின்றி செந்தமிழ் மணக்க  நாடாண்டவர்களாகவும் இருந்தார்கள் என்பது மட்டும் நம்பகமாக தெரிகிறது.