The History of Pandiyargal பாண்டியர்களின் வாழ்க்கை வரலாறு - ThulirKalvi

Latest

Search Here!

Thursday, September 24, 2020

The History of Pandiyargal பாண்டியர்களின் வாழ்க்கை வரலாறு

The History of Pandiyargal பாண்டியர்களின் வாழ்க்கை வரலாறு


பாண்டியர்கள் 

"முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே"  என்று தேசிய கவி பாடிய பெருமைக்குரிய பாண்டியநாடு.  ஐவகை நிலமும் அமையப்பெற்ற இந்நாடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் நிமிர்ந்து நிற்கும் சிறப்புடையது. 

இப்போதுள்ள மதுரை,  இராமநாதபுரம்,  திருநெல்வேலி,  கன்னியாகுமரி மாவட்டங்கள் அடங்கிய நிலப்பகுதியே சங்க காலப் பாண்டிய நாடு. 

வருஷநாடு  ஆண்டிப்பட்டி மலைத்தொடரில் உருவாகும் வையை,  பொதிய மலையினின்றும் தோன்றும் பொருநை  ஆகிய ஆறுகளால் வளம் பெறும் நாடு இது. 

"வையை என்னும் பொய்யாக் குலக்கொடி"  என்று சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் வையை யாறு பரிபாடலிலும் புகழ்ந்து சொல்லப்படுகிறது. 

பாண்டிய மன்னர்கள் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு நாடாண்டார்கள். இந்நாட்டில் சங்க காலத்தில் கொற்கை, தொண்டி ஆகிய துறைமுக நகரங்கள் மிகவும் சிறப்புற்று திகழ்ந்தன. 

பாண்டிய மன்னர்களின் இலட்சினை கயல்

இவர்களுடைய மீன் கொடி 
இவர்கள் விரும்பி அணிந்த மாலை வேப்பம்பூ மாலை

பாண்டிய மன்னர்கள் சங்க காலத்தில் மிகவும் சிறப்புற்று இருந்தார்கள். 

முதல் சங்கம் 
இடைச்சங்கம் 
கடைச்சங்கம் ஆகியவைகளில் மட்டும் 197 பாண்டிய மன்னர்கள் அங்கம் வகித்திருக்கிறார்கள்.  இறையனார் அகப்பொருள் உரை மூலம் இந்த விவரத்தை நாம் அறிய முடிகிறது. ஆனால் அவர்களைப் பற்றிய சரியான விவரம் தெரியவில்லை. 

சங்க காலப் பாண்டிய மன்னர்களில் காலத்தால் மிகவும் முற்பட்டவன்  வடிம்பலம்ப நின்ற பாண்டியன்.  இவனுடைய அவையில்தான் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என்று நச்சினார்க்கினியர் கூறியிருக்கிறார்.

சங்ககாலப் பாண்டிய மன்னர்கள் 

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்.  தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆகிய இருவரும் சங்ககால மன்னர்களில் பெரும் பெருமைக்கு உரியவர்கள் ஆக கருதப்படுகிறார்கள். 

  • அண்டர் மகன் குறுவழுதியார் 
  • அறிவுடைநம்பி 
  • இவ்வந்திகை பள்ளித் துஞ்சிய நன்மாறன் 
  • ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் 
  • கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி 
  • கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி 
  • காய்சின வழுதி 
  • கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி 
  • கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி 
  • சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் 
  • கீரஞ்சாத்தான்
  • குறுவழுதியார்
  • நிலந்தரு திருவிற் பாண்டியன் 
  • நெடுஞ்செழியன் 
  • பல்யாக சாலை 
  • முது குடுமிப் பெருவழுதி 
  • பன்னாடு தந்த பாண்டியன் 
  • பூதப் பாண்டியன் 
  • முடத்திருமாறன்
  • வெண்டேர்ச் செழியன் 
  • வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி 
  • வெற்றிவேல் செழியன் 

என பாண்டிய மன்னர்கள் பலர்

தமிழ் வளர்ச்சி கருதி இப்பாண்டிய மன்னர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எடுத்து வந்த நடவடிக்கைகள் அளவிடற்கரியனவாகும்.  சங்ககாலத்தில் இருந்த மதுரையிலிருந்து மங்கா தமிழ்காத்தமதுரையைச் சேர்ந்த பெரும் புலவர் எண்ணிக்கை மட்டுமே 62 ஆகும்.

The History of Pandiyargal பாண்டியர்களின் வாழ்க்கை வரலாறு