பழமொழியுடன் பழகுவோம் - பழமொழிகளும் விளக்கங்களும் | Let’s practice proverbs - proverbs and explanations - ThulirKalvi

Latest

Search Here!

Monday, October 19, 2020

பழமொழியுடன் பழகுவோம் - பழமொழிகளும் விளக்கங்களும் | Let’s practice proverbs - proverbs and explanations

பழமொழியுடன் பழகுவோம் - பழமொழிகளும் விளக்கங்களும் | Let’s practice proverbs - proverbs and explanations


1.நாளைக்கு கிடைக்கிற பலாப்பழத்தை விட இன்றைக்குக் கிடைக்கும் களாப்பழம் மேல் 

எப்போதெல்லாம் நம் வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் எழுதகின்றனவோ அப்போதே அதை உடனடியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மழை வரும்போதே தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். நாளைக்கு இன்னும் பலமாக மழை வரும் என்று நம்பி இருந்து தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்ளாமல் போக நாளைக்கு மழை வராமல் போய்விட்டால் தலைமீது கை வைத்துக்கொண்டு உட்கார்ந்து விடுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்.  சமயத்தில் கிடைத்ததையும் நழுவவிட்ட முட்டாள்தனத்தை செய்கிறோம் நாம்.

2. நிலத்திற்கு ஏற்ற விதை 
குலத்திற்கு ஏற்ற பெண் 


பெண்ணிடம் பொன் எதிர்பார்க்காதவர் கூட அவளிடம் குணம்தான் கண்டிப்பாக எதிர்பார்க்கிறார்கள்.  ஏனென்றால் குலப்பெருமையை காப்பதில் பெண்ணுக்கு நிகர் பெண்ணே தான்.  நிலத்திற்கு ஏற்ற விதைதான் பயிராகும் என்பது போல குலத்தின் பெருமையையும் வாழ்க்கையில் உயர்வும் காப்பாற்றுவது பெண்ணின் நடத்தையில் தான் இருக்கிறது.  குடும்பத்தில் கணவன் பிள்ளைகள் சீரழியும் போது கெட்ட வழிகளில் செல்லும் போது இந்த உலகம் குடும்பத் தலைவியைத்  தான் தூற்றும். காரணம் குடும்பத்தை வழிகாட்டி செல்வது பெண்ணின் கடமை என்று இந்த உலகம் நினைக்கிறது. ஒரு தாய் தன் மகளுக்கு சமையல் கற்று தரவில்லை என்றாலும் பாதகமில்லை நல்ல ஒழுக்கம் கற்றுத்தர வேண்டும் என்றுதான் உலகம் எதிர்பார்க்கிறது.

3.நீர் உயர நெல் உயரும்

நாம் எந்த காரியத்திற்காக முயற்சிகள் செய்கிறோமோ அந்த காரியத்துக்காக முயற்சிகள் உயர உயர அதற்கான பலன்களும் உயர்ந்துகொண்டே போகும். பண்பு உயர உயரத்தான் ஊரில் நல்ல பெயரும் உயர்கிறது. 

பணத்தை சேமிக்க சேமிக்க அது வட்டியை ஈட்டி தந்து மேலும் பணம் வருகிறது.  தானம் செய்யும் மனசு உயர உயர தான் நம் இதயமும் விசாலாகிக் கொண்டே போகிறது. ஆக நல்லது கெட்டது எது செய்யணும் அதற்கான நல்ல கெட்ட பலன்களும் உயர்ந்து கொண்டே போகும்.

4.நுனிப்புல் மேய்வது போல 

பசித்தவர் எவரும் தன் வயிறு நிறைய சாப்பிட்டு தன் பசியைத் தணித்துக் கொள்ளாமல் இருப்பதில்லை.  ஆனால் இப்படி எல்லா விஷயங்களிலும் செயல்பட்டு வருகிறோமோ?  கண்டிப்பாக இல்லை. 

புத்தகத்தை படிக்கிறேன் பேர்வழி என்று மனம்போன போக்கில் எதையோ படிக்க வைக்கிறோமே தவிர என்ன படிக்கிறோம்?   படித்தது புரிந்ததா என்று ஆழமாக சிந்தித்து படிக்காமலே கால விரயம் செய்கிறோம்.  இது அவசியம்தானா?  படிப்பது கொஞ்ச நேரமே ஆயினும் என்ன படித்தோம் என்பதை மனதுக்குள் ஆழமாக வாங்கிக் கொள்ள வேண்டும்.  அப்போதுதான் படிப்பதற்கான பலன் இருக்கும்.  ஒரு ஏக்கர் நிலத்தில் நன்றாக சீராக விதைக்க வேண்டிய விதைகளை பல ஏக்கர் நிலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விதைப்பதது போலத்தான் இது

5. நூற்றுக்கு ஒரு பேச்சு ஆயிரத்துக்கு ஒரு தலையசைப்பு 

வீணான பேச்சு காலத்தை விரயம் செய்யும். பகையை சம்பாதித்துக் கொடுக்கும். நற்பெயரை சீர்குலைக்கும். நாம் எவருடனாவது பேச நேரிட்டால் கேட்பாளராகத்தான்  இருக்க வேண்டும் தவிர பேச்சாளராக இருக்கக் கூடாது. கேட்பவராக இருக்கும்போதுதான் எதிரிகளிடமிருந்து நமக்கு ஏராளமான விஷயங்கள் கிடைக்கும். நாம் பேச வாயைத் திறந்தால் மறுப்பு வரலாம். எஇந்த மறுப்புக்கும் மறுப்பு தெரிவிக்க அது சண்டையாக மாறிவிடும் அபாயமும் உண்டு.

6. நெருப்பு என்றால் வாய் வெந்து போகுமா?

நாம் நல்லவர்களாக இருக்கும் பட்சத்தில் நம்மை பார்த்து ஒருவர் நீங்கள் கெட்டவர் என்று திட்டினால் அதை மனதுக்குள் வாங்கிக்கொண்டு கவலையில் மூழ்கிப்போய் அதையே எண்ணி எண்ணி வருந்த வேண்டியது இல்லை.

காரணம்,  ஒரு திட்டுவதால் மட்டும்தான் நாம் கெட்டவர் ஆகிவிடுவதில்லை. அதனால் பொறாமை கொண்டு கூறப்படும் வார்த்தைகளுக்கு மதிப்பு தர வேண்டியதில்லை. ஏனென்றால்,  நம் நடத்தையை பற்றி நமக்குத் தெரியும்.  நாம் கெட்டவர்களாக இருந்தால்தான் மனம் வருந்த வேண்டும். அதே நேரத்தில் நம் குறைகளை சுட்டிக்காட்டும் நல் உள்ளங்களின் பேச்சுக்கு காது கொடுத்து நம்மை நாம் திருத்திக் கொள்வதுதான் நமக்கு அழகு.