நேதாஜியின் பார்வேர்டு பிளாக் கட்சி Netaji's Forward Bloc Party | நேதாஜியின் வாழக்கை வரலாறு Biography of Netaji - ThulirKalvi

Latest

Search Here!

Sunday, October 4, 2020

நேதாஜியின் பார்வேர்டு பிளாக் கட்சி Netaji's Forward Bloc Party | நேதாஜியின் வாழக்கை வரலாறு Biography of Netaji

நேதாஜியின் பார்வேர்டு பிளாக் கட்சி Netaji's Forward Bloc Party  | நேதாஜியின் வாழக்கை  வரலாறு Biography of Netaji


போராட்டத்தில் ஈடுபடக்கூடாது 

மாநாட்டில் காந்தி அடிகள் பேசும்போது.  இரண்டாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் இங்கிலாந்து போரில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே ஆங்கில அரசுக்கு இடையூறு செய்யும் வகையில் எந்த போராட்டத்திலும் நாம் ஈடுபடக்கூடாது என்று கூறினார். 

இதைக்கேட்டு வெறுப்புற்ற நேதாஜி தர்ம நியாயங்கள் எல்லாம் விடுதலைப் போராட்டத்தில் பார்க்க முடியாது. நமது நோக்கம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு எப்படி விடுதலை அடைவது என்ற வகையில் தான் இருக்க வேண்டும். அந்த நோக்கில்தான் நமது செயல்பாடுகளும் போராட்டங்களும் அமைக்கப்பட வேண்டும்.  

கருத்து வாதம் திட்டம் 

இரண்டாம் உலகப் போரில் இந்தியாவின் அனுமதியை கேட்டு நம் நாட்டை உலகப்போரில் இங்கிலாந்து நாட்டினர் ஈடுபடவில்லை. நம் சம்பந்தமில்லாமல் நம் நாட்டை போரில் ஈடுபடுபவர்களுக்கு நாம் ஏன் அக்கறை காட்ட வேண்டும்? விடுதலை பெற தற்போது நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பை நழுவ விடுவது அறிவின்மையாகும் என்றும் அறிவோடும் ஆவேசத்துடன் அலசி ஆராய்ந்தோம் நேதாஜி கூறிய கருத்தும் மிகவும் சரியானது என்று மக்கள் அனைவரும் கைதட்டி உணர்வுபூர்வமாக வரவேற்றனர்.

இரண்டாம் முறையாக தேர்வு 

நேதாஜி காங்கிரஸ் தலைமை ஏற்று ஓராண்டு முடிந்தது மேலும் ஓராண்டு நீட்டித்து. தன்னுடைய திட்டங்களை செயல்படுத்த விரும்பினார். ஆனால் காந்தியடிகளுக்கு விருப்பம் இல்லை. அதனால் மௌலானா அப்துல் கலாம் ஆசாத்தை நேதாஜிக்கு போட்டியாக தேர்தலில் நிறுத்தினார். தேர்தலில் நேதாஜி வெற்றி பெற்றார். தலைவர் பதவியை துறந்தார். திரிபுரா காங்கிரஸ் மாநாட்டில் கோவிந்த வல்லப பந்த் ராஜகோபாலாச்சாரியார் போன்றோர் நேதாஜியை குறை கூறிப் பேசியதனால் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக நேதாஜி முடிவு செய்தார். அதன்படி 1939 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் பத்தாம் நாள் ராஜினாமா செய்தார். 

பார்வர்ட் பிளாக் கட்சி 

தலைவர் பதவியினை ராஜினாமா செய்து நேதாஜி 1939 ஆம் ஆண்டு மே மாதம் "பார்வர்டு பிளாக்" எனும் கட்சியைத் தொடங்கினார். தனக்கு ஒத்து வரக்கூடிய முற்போக்காளர்களை ஒன்று திரட்டினார். வங்க மாநிலத்தில் கட்சிக்கு ஏராளமான இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து கட்சியில் இணைந்தனர். 

சென்னைக்கு வந்தார் 

காங்கிரசை எதிர்த்து நாடு முழுவதும் பிரசாரம் செய்தார் 1930 ஆம் ஆண்டு செப்டம்பர் மூன்றாம் நாளன்று நேற்று சென்னைக்கு வந்தார்.  கடற்கரைக் கூட்டத்தில் எஸ் சீனிவாச அய்யங்கார் தலைமையில் நேதாஜி பேசிக்கொண்டிருந்தபோது பிரிட்டன் ஜெர்மனி போர் தொடங்கிய செய்தி வந்தது.காங்கிரசை எதிர்த்து நாடு முழுவதும் பிரசாரம் செய்தார். 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்றாம் நாள் அன்று நேதாஜி சென்னைக்கு வந்தார் 

இந்தியா பிரிட்டன் ஒரு போர் தொடங்கிய விடுதலை பெறுவதற்காக தக்க சமயம் வைத்ததாக அவர் அக்கூட்டத்தில் கூறினார். அதன் பின்பு தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்துவிட்டு கொல்கத்தா திரும்பினார். 

சிலை நீக்க கோரிக்கை ஊர்வலம் 

கொல்கத்தா டல்ஹெளசி  சதுக்கத்தில் "ஹல்வெல்" என்னும் ஆங்கில வீரனுடைய சிலை நிறுவப்பட்டு இருந்தது. அதை அகற்ற கோரி பெரும் திரளான மக்களை திரட்டிக் கொண்டு ஊர்வலம் சென்றார். ஊர்வலத்திற்கு தடை விதித்தோடு நேதாஜி கைது செய்யப்பட்டார். 

உண்ணாவிரதத்தின் போரில் விடுதலை 

அச்சமயம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் கொல்கத்தாவில் இருந்த மக்கள் நேதாஜியை உறுப்பினராக தேர்ந்தெடுத்தனர். அப்படி இருந்தும் அவரை அரசு விடுதலை செய்யவில்லை. இதை எதிர்த்து நேதாஜி உண்ணாவிரதம் இருந்தார். அதை கண்டு அஞ்சி அரசு அவரை விடுதலை செய்தது.

மாய மறைவு 

சிறையில் இருந்து வந்த நேதாஜி தன்னை சிறைப்படுத்திக் கொண்டு வீட்டிலேயே இருந்தார். தவம் செய்பவர் போல் இருந்தார். யாருடனும் பேசவில்லை. தேடிவந்த வரையும் சந்திக்கவில்லை.  அறை ஒன்றில் தனித்திருந்தார். தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவர் இருந்த அறையொன்றில் திரைச்சீலை தொங்கவிடப்பட்டது. உணவு கூட திரைக்கு அப்பாலிருந்து கொடுத்தனர். இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் அவர் அவ்வறையிலிருந்து மாயமாய் மறைந்துவிட்டார்.
நேதாஜியின் பார்வேர்டு பிளாக் கட்சி Netaji's Forward Bloc Party  | நேதாஜியின் வாழக்கை  வரலாறு Biography of Netaji