வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு - தமிழ்ப் பழமொழிகளும் அதன் எளிய விளக்கமும் - ThulirKalvi

Latest

Search Here!

Friday, November 6, 2020

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு - தமிழ்ப் பழமொழிகளும் அதன் எளிய விளக்கமும்

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு - தமிழ்ப் பழமொழிகளும் அதன் எளிய விளக்கமும்

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு 

மனிதனுக்கு ஞாபக மறதி அதிகம். அதனால் தான் அவன் பலவற்றை மறந்து தனது தொடர்புடையதே மட்டும் நினைவில் இல்லை -  நினைப்பில் வைத்துக் கொண்டிருக்கிறான். 

அவன் நினைக்கிறான்,  இவ்வுலகத்தில் நான் மட்டுமே வல்லவன்.  என்னை எதிர்க்க ஆளேது?  வெறும் எண்ணமே நிஜம் ஆகிவிட்டால் அப்புறம் உண்மைக்கு மரியாதை இல்லாமல் போய்விடும். 

ஒருவன் பெரிய மனிதனாக திகழவேண்டும்.  வல்லவனாக இருக்க வேண்டும் என்றெல்லாம் உண்மையிலேயே விரும்பினால் அதற்கான சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.  முயற்சிகள் மட்டும் ஒருவனுக்கு உரமேற்ற கருவியாக இருக்க முடியும். 

நினைப்பு ஒன்றால் மட்டும் ஒருவன் வல்லவன் என்றால் அது அவனின் சுயநலத்தையும் கர்வத்தையும் காட்டுகிறது.  நான்தான் வல்லவன் என்று வெளிப்படையாகவே கூறிக் கொள்பவன் கூட வெறுமே மார்தட்டிக் கொள்ளாமல் தான் வல்லவன் தான் என்பதை நிரூபித்து காட்டுகிற முயற்சியில் இறங்க வேண்டும். 

இரு கைகளும் ஒன்று சேர்ந்தால் தான் சப்தம்ம் வரும். அதுபோலதான் இருவரிடையே பலப்பரிட்சை இருக்கும்போதுதான் உண்மையின் சுயரூபம் தெரிய வேண்டும்.  வல்லவனுக்கு வல்லவன் என்ற உலகத்தில் உண்டு. 

இருவரும் ஒரே இடத்தில் தான் இருக்க வேண்டுமென்பதில்லை. எங்கிருந்தாலும் ஒருவனை மிஞ்சி இன்னொருத்தன் இருக்கவே செய்கிறான். ஏதோ ஒரு இடத்தில் இதை உணரும் பட்சத்தில் தான் கர்வத்தை வடிகட்ட முடியும். சுயநலத்தை ஒழிக்க முடியும். மனிதனாக வாழ கொஞ்சமேனும் இயலும்.