விஷம் தீர வைத்தியன் வேண்டும், பாவம் தீர தெய்வம் வேண்டும் - தமிழ்ப் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் - ThulirKalvi

Latest

Search Here!

Saturday, November 7, 2020

விஷம் தீர வைத்தியன் வேண்டும், பாவம் தீர தெய்வம் வேண்டும் - தமிழ்ப் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

விஷம் தீர வைத்தியன் வேண்டும், பாவம் தீர தெய்வம் வேண்டும் - தமிழ்ப் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் 


விஷம் தீர வைத்தியன் வேண்டும், பாவம் தீர தெய்வம் வேண்டும்

ஒரு வேளை இல்லை என்றாலும் இன்னொரு வேளை நமக்கு இன்னொருத்தர் உதவி தேவையாக இருக்கிறது. அந்த இன்னொருவர் ஏன் தெய்வமாக இருக்க கூடாது?  நாம் வாழ்ந்து கொண்டிருப்பது அல்ல நிஜமான வாழ்க்கை. 

நம்மை அறியாமலே நாம் பல பாவங்களைச் செய்து கொண்டிருக்கிறோம். நாம் தெரிந்து செய்கின்ற பாவங்களுக்கு எந்த வகையிலாவது தண்டனை கிடைத்து விடுகிறது. சில பாவங்களுக்கு தண்டனை கிடைக்காமல் கூட போய் விடலாம். 

ஆக, தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களுக்காக நாம் தண்டனையைப் பெற்றே ஆக வேண்டும், அந்த தண்டனை என்பது நாம் செய்த பாவங்களை மன்னித்து அருளும்படி இறைவனை கெஞ்சுகிற பிரார்த்தனை யாகவும் இருக்கலாம். அல்லது செய்த பாவ காரியங்களுக்கு பிறருக்கு நல்லது செய்து பிராயச்சித்தம் தேடிக் கொள்ளலாம்.

இப்படி செய்ததன் மூலமாக நம்முடைய பாவங்கள் தீர்ந்து விட்டது என்று எண்ணிவிடக்கூடாது.  நம்முடைய பாவ செயல்களுக்கு எப்போது விமோசனம் கிடைக்கிறது தெரியுமா?  மேற்கொண்டு அந்த பாவம் செய்யாமல் இருக்கும் போதுதான். 

மனம் விட்டு உருகி இறைவனை இறைஞ்சும் போது அவர் நம்மை மன்னிக்காமல் இருப்பதில்லை. மன்னிக்கும் முன்பாக மேற்கொண்டு நாம் பாவம் செய்யாமல் இருக்கிறோமா என்று கவனித்து விட்டு மன்னிக்கிறார். 
எவரையும் ஏமாற்றி இறைவனை ஏமாற்ற முடியும் அதனால் இறைவனிடம் நம்பிக்கை வைத்து உங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்ளுங்கள் மேலும் பாவம் செய்யாமல் இருங்கள் அது உங்களை வாழ வைக்கும்