193 வேளாண்மை தொழிற்கல்வி தற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு செய்து அரசாணை வெளியீடு!!! - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, March 30, 2021

193 வேளாண்மை தொழிற்கல்வி தற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு செய்து அரசாணை வெளியீடு!!!

193 வேளாண்மை தொழிற்கல்வி தற்காலிக  ஆசிரியர்கள் பணியிடங்களை ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு செய்து அரசாணை வெளியீடு!!!

சுருக்கம் 

பள்ளிக் கல்வி - மேல்நிலைக்கல்வி - தொழிற்கல்வி - மேல்நிலைப் பள்ளிகளில் 193 வேளாண்மை தொழிற்கல்வி ஆசிரியர் தற்காலிக பணியிடங்களை 01.01.2021 முதல் 31.12.2021 முடிய ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. 

பள்ளிக் கல்வித்(பக 7 (19) துறை அரசாணை (1டி) எண்.57 நாள்:25.03.2021 திருவள்ளுவர் ஆண்டு 2052 சார்வரி வருடம், பங்குனி 12 படிக்கப்பட்டவை: 

1. அரசாணை (நிலை) எண்.63, பள்ளிக் கல்வித்(விஇ) துறை, நாள்.13.3.2007. 
2. அரசாணை (நிலை) எண்.143, பள்ளிக் கல்வித்(விஇ) துறை, நாள்.2.7.2008. 
3. அரசாணை (1டி) எண்.47, பள்ளிக் கல்வித்(ப.47(1)) துறை, நாள் 17.02.2020. 4. பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்.615/எல்/இ3/2020, நாள் 27.01.2021. 

ஆணை மேலே முதலாவதாக மற்றும் இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணைகளில் 200 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வேளாண்மை தொழிற்கல்விப் பாடத்தினை அறிமுகப்படுத்தும் பொருட்டு 2007-2008 மற்றும் 2008-2009ஆம் ஆண்டுகளில் முறையே 100 பணியிடங்கள் வீதம் மொத்தம் 200 வேளாண்மை தொழிற்கல்வி ஆசிரியர் தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட 200 வேளாண்மை தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களில் 7 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ள நிலையில் நிரப்பப்பட்ட 193 பணியிடங்களுக்கு இவ்வாணையின் இணைப்பில் உள்ளவாறு, மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் நிலை 16 ரூ.36400-115700 என்ற ஊதிய விகிதத்தில் 01.01.2020 முதல் 31.12.2020 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணையிடப்பட்டது. மேலே நான்காவதாக படிக்கப்பட்ட கடிதத்தில், மேற்காணும் 193 வேளாண்மை தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு 31.12.2020 உடன் முடிவடைந்தமையால் 01.01.2021 முதல் மேலும் மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் அரசைக் கோரியுள்ளார். 

2. பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை அரசு நன்கு பரிசீலனை செய்து,
மேலே முதலாவதாக மற்றும் இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணைகளின்படி அரசுமேல்நிலைப் பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட 200 வேளாண்மைத் தொழிற்கல்வி ஆசிரியர்பணியிடங்களில் நிரப்பப்பட்ட 193 தற்காலிக பணியிடங்களுக்கு மட்டும் 01.01.2021 முதல்31.12.2021 வரை ஓராண்டிற்கு அல்லது தற்காலிக பணியிடங்களுக்கான தேவை குறித்து நிதித்துறையின் மறுஆய்வில் முடிவெடுக்கும் வரை இதில் எது முந்தையதோ அதுவரை நிலை-16ரூ.35400-115700 என்ற ஊதிய விகிதத்தில் தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணையிடுகிறது.


3. இப்பணியிடங்களுக்கான ஊதியம் மற்றும் இதரப் படிகளுக்கான செலவினம் கீழ்க்கண்ட தலைப்பின் கீழ் மேற்கொள்ளப்படும். "2202-பொதுக்கல்வி-02 இடைநிலைக்கல்வி-109 அரசு இடைநிலைப்பள்ளிகள் - மாநிலச் செலவினங்கள் - AA அரசு இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் சம்பளம் - 301 சம்பளங்கள்.” (ததொகு 2202-02-109-AA-30100) 

4. இவ்வரசாணை நிதித்துறையின் அ.சா.எண்.7202/கல்வி-II/2021 நாள்.26.02.2021-ல் பெறப்பட்ட ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது. 

(ஆளுநரின் ஆணைப்படி) 

தீரஜ் குமார் 
அரசு முதன்மைச் செயலாளர் 

பெறுநர் 

பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை-6. 
மாநிலக் கணக்காய்வு தலைவர், சென்னை - 18. 
கணக்கு மற்றும் கருவூல இயக்குநர், சென்னை-35. 
அனைத்து மாவட்ட கருவூல அலுவலர்கள். கருவூலம் மற்றும் கணக்கு ஆணையர் சென்னை-15. 
சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர் (தெற்கு),சென்னை-35. 
சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர் (வடக்கு), சென்னை-79. 
சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர் (கிழக்கு), சென்னை-8. 
சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர், பதிவாளர் வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்துார். 

நகல் 
நிதித்துறை, சென்னை - 9. 
வேளாண்மைத் துறை, சென்னை-9. 
வேளாண்மைத் துறை இயக்குநர், சென்னை-5. 

DOWNLOAD OFFICIAL NOTICE
You have to wait 25 seconds.

Download Timer

No comments:

Post a Comment