2015-16 ல் ஆசிரியர் தேர்வு வாரியம் செய்யப்பட்டு 28.11.2017 அன்று பணி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை ஆணை - ThulirKalvi

Latest

Search Here!

Wednesday, March 17, 2021

2015-16 ல் ஆசிரியர் தேர்வு வாரியம் செய்யப்பட்டு 28.11.2017 அன்று பணி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை ஆணை

2015-16 ல் ஆசிரியர் தேர்வு வாரியம் செய்யப்பட்டு 28.11.2017 அன்று பணி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை ஆணை 

பொருள்: 

பள்ளிக் கல்வி - 2015-2016 ஆம் கல்வி ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடி நியமனத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பணிநாடுநர்களுக்கு 28.11.2017 அன்று பட்டதாரி ஆசிரியர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டமை பொதுவான பணிவரன் முறை செய்தல் - சார்பு. 

பார்வை: 
1 சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரின் கடிதம் ந.க.எண்.1267/ஆ2/2016, நாள்.18.07.2017. 

2. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள், ந.க.எண்.85993/C2/இ2/2017, நாள்.28.11.2017,

3. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள், ந.க.எண்.85994/சி2/இ1/2017, நாள்.28.11.2017. 

பார்வை 1-ல் காணும் ஆசிரியர் தேர்வு வாரிய கடிதத்தின் மூலம் 2015-2016 ம் கல்வி ஆண்டில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் பள்ளிக் கல்வித் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள (அறிவியல் - 30, வரலாறு -39 மற்றும் புவியியல் - 11) பணி நாடுர்களுக்கு அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் (அறிவியல் மற்றும் சமூக அறிவியல்) காலிப்பணியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக 28.11.2017 அன்று கலந்தாய்வு நடத்தப்பட்டு நியமன ஆணை வழங்கப்பட்டது. 

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டு பார்வை -2 மற்றும் 3ல் காணும் செயல்முறைகளின் படி பணி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி (அறிவியல் மற்றம் சமூக அறிவியல்) ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன் முறை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிப்பதோடு, பார்வை 2 மற்றும் 3-ன் படி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர் (அறிவியல் மற்றும் சமூக அறிவியல்) தற்காலிக நியமனங்கள் அனைத்தும் அவ்வாசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் முறையான நியமனமாக முறைப்படுத்தி இதன் மூலம் ஆணை வழங்கப்படுகிறது. 

மேலும், மேற்கண்ட செயல்முறைகளின்படி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் சார்பாக தகுதிகாண் பருவம் முடித்தமைக்கான உத்தரவு வழங்குவதற்கு முன்னர் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களின் கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மையினை உறுதி செய்து அதற்கான சான்றினை முன்னிலைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமென சார்ந்த ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) பெறுநர் 

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்.

You have to wait 25 seconds.

Download Timer