தெலுங்கானாவில், ஊழியர்களுக்கு 30 சதவீதம் ஊதிய உயர்வு - துளிர்கல்வி

Latest

Tuesday, March 23, 2021

தெலுங்கானாவில், ஊழியர்களுக்கு 30 சதவீதம் ஊதிய உயர்வு

தெலுங்கானாவில், ஊழியர்களுக்கு 30 சதவீதம் ஊதிய உயர்வு 


தெலுங்கானாவில், அரசு ஊழியர்களின் சம்பளத்தை, 30 சதவீதம் உயர்த்தி, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. 


இம்மாநிலத்தின், 11வது ஊதிய கமிஷன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சி.ஆர்.பிஸ்வால் தலைமையில், 2018ல் உருவாக்கப்பட்டது.கமிஷனின் பரிந்துரையின்படி, மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்தை, 30 சதவீதம் உயர்த்தி, முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று உத்தரவிட்டார்.மேலும், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது, 58ல் இருந்து, 61 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment