9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது"- பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. - துளிர்கல்வி

Latest

Wednesday, March 17, 2021

9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது"- பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது"- பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. 


கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்த நிலையில், சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டன. 

இதனைதொடர்ந்து அண்மையில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைந்த காலத்தில் பாடங்களை நடத்தி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

இந்த சுழலில் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின் அடிப்படையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அந்த சுற்றறிக்கையில், அனைத்து பள்ளிகளிலும் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில், இந்த மாத இறுதிக்குள் பள்ளி அளவில் பொதுத்தேர்வு நடத்தி முடிக்க வேண்டும், 

அதற்கான மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் 9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது என்று பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற முதன்மை கல்வி அதிகாரிக்கு கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


No comments:

Post a Comment