மாநகராட்சிப்பள்ளிக்கு தான்சானியாவில் இருந்து அட்மிஷன் கேட்டு விண்ணப்பம்! - ThulirKalvi

Latest

Search Here!

Wednesday, March 24, 2021

மாநகராட்சிப்பள்ளிக்கு தான்சானியாவில் இருந்து அட்மிஷன் கேட்டு விண்ணப்பம்!

மாநகராட்சிப்பள்ளிக்கு தான்சானியாவில் இருந்து அட்மிஷன் கேட்டு விண்ணப்பம்! 


மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், தனது இரு குழந்தைகளை சேர்க்க, தான்சானியாவில் இருந்து பெற்றோர் அணுகியுள்ளனர்.மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், 430 மாணவர்கள் படிக்கின்றனர். ஆங்கில #வழி இருப்பதோடு, வளாகத்திற்குள்ளே முன்மழலையர் வகுப்பும் துவங்கப்பட்டுள்ளதால், இப்பகுதியை சேர்ந்தவர்கள், தனியார் பள்ளிகளில் சேர்க்க, ஆர்வம் காட்டுவதில்லை.


கம்ப்யூட்டர் லேப், ஸ்போக்கன் இங்கிலீஷ், தற்காப்பு கலை பயிற்சிகள் என, தன்னார்வலர்கள் உதவியோடு, தனியார் பள்ளிக்கு இணையாக கட்டமைப்பு மேம்படுத்தி, பயிற்சி வகுப்புகள் நடத்துவதோடு, பள்ளி சார்ந்த அனைத்து தகவல்களையும், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், பகிர்ந்து வருகின்றனர்.

இதை பார்வையிட்ட, தான்சானியாவில் வசிக்கும் கோவைவாசி பார்த்திபன், தன் இரு குழந்தைகளுக்கும், அட்மிஷன் முன்பதிவுக்கு பள்ளியை அணுகியுள்ளார்.அவரது வேண்டுகோளின்படி, ஒன்றாம் வகுப்பு மற்றும் எல்.கே.ஜி.,க்கு இரு குழந்தைகளுக்கும், அட்மிஷன் உறுதி செய்யப்பட்டது. இந்நிகழ்வு, அப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பள்ளி இடைநிலை ஆசிரியர் சக்திவேல் கூறுகையில், ''தன் குழந்தைகளை அரசுப்பள்ளியில் தான் சேர்க்க வேண்டுமென முடிவு செய்து, எங்கள் பள்ளியை அணுகியது, பெருமையாக இருக்கிறது. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, இது எங்களுக்கு மேலும் ஊக்கமளிப்பதாக உள்ளது. 

இரு மாதங்களுக்கு பின், ஊர் திரும்பியதும், குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்,'' என்றார்.தற்போதைய ஊரடங்கு சமயத்திலும், வாட்ஸ்-ஆப் மூலம், மாணவர்களுக்கு டிஜிட்டல் கன்டென்ட் அனுப்புதல், கூகுள் பார்ம் மூலம் தேர்வு நடத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளில், இப்பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.