கேட் நுழைவுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு - ThulirKalvi

Latest

Search Here!

Tuesday, March 30, 2021

கேட் நுழைவுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு

கேட் நுழைவுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு 


சென்னை 

கேட் நுழைவுத்தேர்வை மும்பை ஐஐடி நடத்தியது. அதன்படி, பிப்ரவரி 6, 7 மற்றும் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேர்வை 7.1 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதனைத்தொடர்ந்து, தேர்வு முடிவுகள் 21-ம் தேதி வெளியிடப் பட்டது. 


அதன்படி, மொத்தம் 1 லட்சத்து 26,813 பேர் மட்டுமே தகுதி பெற்றிருந்தனர். இவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் https://gate.itb.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 


ஜூலை 1-ம் தேதிக்குள் கட்டணம் எது மில்லாமல் சான்றிதழை பதி விறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், அதன்பின்னர் ரூ.500 செலுத்தி டிச. 31 வரை பதி விறக்கம் செய்யலாம். இதனை மும்பை ஐஐடி அறிவித்துள்ளது.