விடுமுறையில் ஆன்லைன் தேர்வு மாணவர்கள் தயாராக அறிவுரை - துளிர்கல்வி

Latest

Sunday, March 21, 2021

விடுமுறையில் ஆன்லைன் தேர்வு மாணவர்கள் தயாராக அறிவுரை

விடுமுறையில் ஆன்லைன் தேர்வு மாணவர்கள் தயாராக அறிவுரை 


பிளஸ் 1 வரையிலான மாணவர்களுக்கு, கற்றல் திறனை தெரிந்து கொள்ள, ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும்' என, பெற்றோருக்கு, பள்ளிகள் அறிவித்துள்ளன. கொரோனா பரவல் காரணமாக, ஒன்பது முதல் பிளஸ் 1 வரையிலான வகுப்புகளுக்கு, மறு உத்தரவு வரும் வரை, விடுமுறை விடுவதாக, அரசு அறிவித்துள்ளது.

பள்ளி விடுமுறை காரணமாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பருவ தேர்வுகள், கற்றல் அறிதல் தேர்வுகள் எப்படி நடக்கும் என, பெற்றோர், பள்ளிகளில் கேள்வி எழுப்புகின்றனர்.இந்த தேர்வுகளை ஆன்லைனில் நடத்த திட்டமிட்டுள்ளதால், மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள், ஆன்லைனில் தொடர்ந்து நடத்தப்படும் என, பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. 


 மாணவர்கள், 'ஆல் பாஸ்' என, அறிவிக்கப்பட்டாலும், அடுத்த கல்வி ஆண்டில், அடுத்த வகுப்புக்கு முன்னேற, இந்த ஆண்டுக்கான அடிப்படை பாடங்களை, மாணவர்கள் கற்க வேண்டியுள்ளது.எனவே, மாணவர்களின் கற்றல் திறனை தெரிந்து, வரும் காலங்களில் சிறப்பு வகுப்புகளை நடத்துவதற்காக, ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என்றும், பள்ளிகள் தரப்பில், பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment