பத்தாம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசனை - ThulirKalvi

Latest

Search Here!

Wednesday, March 31, 2021

பத்தாம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசனை

பத்தாம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசனை 

உயா்கல்விக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் அவசியம் என்பதால் நிகழாண்டு அந்த வகுப்பில் பயின்ற மாணவா்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: 


தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில் 9 முதல் 11-ஆம் வகுப்புகளுக்கு தோ்வின்றி தோ்ச்சி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 


அதன்படி பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு தோ்ச்சி வழங்கப்பட்டாலும் இறுதி மதிப்பெண் கணக்கீட்டில் சிக்கல் நிலவுகிறது. மாணவா்களின் உயா்கல்விக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் அவசியம் என்பதால் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 


அதன்படி கடந்தாண்டு 9-ஆம் வகுப்பில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களை மீண்டும் பத்தாம் வகுப்புக்கும் பயன்படுத்துவது தொடா்பாகப் பரிசீலனை செய்து வருகிறோம். அரசின் வழிகாட்டுதலின்படி இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கப்படும் என்றனா். கடந்தாண்டும் இறுதித்தோ்வு நடத்த முடியாததால் காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப்பதிவு அடிப்படையில் மாணவா்களுக்கு இறுதி மதிப்பெண் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.