100 டிகிரியை தாண்டி கொளுத்துகிறது வெயில் - துளிர்கல்வி

Latest

Saturday, April 3, 2021

100 டிகிரியை தாண்டி கொளுத்துகிறது வெயில்

தமிழகத்தில், 11 நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 


தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கோடை வெயிலின் அளவு, நாளுக்கு நாள் தீவிரம் அடைகிறது. மேலும், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால், தரைப்பகுதியை நோக்கி வெப்பக் காற்று வீசுகிறது.


அதனால், தமிழக நிலப் பகுதிகளில் ஈரப்பதம் குறைந்து, மிகவும் வறண்ட வானிலை நிலவுகிறது. நாளை மறுதினம் வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இயல்பை விட, 6 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக வெப்பம் பதிவாகும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துஉள்ளது. 


நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக வேலுாரில், 43 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. சென்னை நுங்கம்பாக்கம், கடலுார், தர்மபுரி, கரூர் பரமத்தி, மதுரை, மதுரை விமான நிலையம், நாகை, பரங்கிப்பேட்டை, சேலம், திருச்சி, திருத்தணி ஆகிய நகரங்களிலும், புதுச்சேரியிலும், 38 டிகிரி செல்ஷியசுக்கு அதிகமாக வெயில் பதிவானது. 

MOST READ ஏப்., 21ல் காவலர் தேர்வு

இது, 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகம்.நேற்று காலை நிலவரப்படி, திண்டுக்கல், காமாட்சிபுரம், 3; சங்ககிரி, மதுரை வடக்கு, 2; திண்டுக்கல், போடி, ஆண்டிப்பட்டியில், 1 செ.மீ., கோடை மழை பெய்தது.

No comments:

Post a Comment