திருவாரூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - ThulirKalvi

Latest

Search Here!

Friday, April 2, 2021

திருவாரூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

திருவாரூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் 

பிறப்பிப்பவர் : 

திரு.மு. இராமன், எம்.எஸ்ஸி., எம்.எட் 

ந.க. எண். 7742/இ1/2020 நாள். 01-04-2021 

பொருள்: தேர்தல் - சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021 - அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி (21 Repeat Training) 03.04.2021 அன்று நடைபெறுதல் - தொடர்பாக, 

பார்வை: 

1.திருவாரூர் மாவட்ட ஆட்சியரக தொலைபேசி வழி செய்தி தேர்தல் நாள்:01.04.2021 
2.இதே எண்ணிட்ட இவ்வலுவலக கடிதம் நாள்:17.03.2021 

எதிர்வரும் ஏப்ரல் 06, 2021 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. சட்ட மன்ற பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவு அலுவலர்களாக நியமனம் பெற்றுள்ள பணியாளர்களுக்கு 18.03.2021 மற்றும் 27.03.2021 ஆகிய தினங்களில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் (PO,PO1.PO2,PO3) இரண்டாம் கட்ட மறுபயிற்சி வகுப்பு (2" Repeat Training) இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்ற அதே இடத்தில் 03.04.2021 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. 

இரண்டாம் கட்ட பயிற்சி ஆணை பெற்ற அனைத்து பணியாளர்களும் 03.04.2021 அன்று நடைபெறவுள்ள பயிற்சியில் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. பார்வை (2) இல் காணும் செயல்முறைகளின் தெரிவித்துள்ள அறிவுரைகளை தவறாது பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

முதன்மைக் கல்வி அலுவலர், 
திருவாரூர் 

பெறுதல் - 

1 கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் (ஓபக), திருவாரூர் 
2. மாவட்டக்கல்வி அலுவலர் திருவாரூர்/மன்னார்குடி 
3. அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் திருவாரூர் மாவட்டம் 
4. அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் திருவாரூர் மாவட்டம் 

நகல்- திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் - தகவலறிய பணிந்தனுப்பப்படுகிறது.