கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு தொடரும்! - துளிர்கல்வி

Latest

Thursday, April 8, 2021

கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு தொடரும்!

கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு தொடரும்! 


சென்னை, ஏப். 8- 'கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும்' என, பல் கலைகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, உயர்கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், கல்லுாரிகளில் நேரடி வகுப்புகளுக்கு, இன்னும் அரசு அனுமதி அளிக் கவில்லை. பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டும், தினமும் கல்லுாரிகளுக்கு வந்து, அங்கி ருந்தவாறு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப் புகளை நடத்த வேண்டும். இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கும், தற் போது நேரடி வகுப்புகள் நடத்தவில்லை. அரசு அனுமதித்தால் அதற்கான அறிவிப்பு வெளி யிடப்படும். எனவே, தற்போதைய நிலையில் அனைத்து மாணவர்களுக்கும், ஆன்லைனி லேயே வகுப்பும், தேர்வும் நடத்தப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment