பிளஸ் 2 பொதுத்தேர்வு: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்! ! - துளிர்கல்வி

Latest

Wednesday, May 12, 2021

பிளஸ் 2 பொதுத்தேர்வு: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்! !

பிளஸ் 2 பொதுத்தேர்வு: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்! ! 


சென்னை, மே.12- பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை பஸ்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இணையவ ழியில் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகள், 38 மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். 

கூட்டத்தில், மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு கருதி பிளஸ் 2 பொதுத்தேர்வை நேரடித் தேர்வாக அவசியம் நடத்த வேண்டும். தேர்வு அட்டவணை 15 முதல் 20 நாள்களுக்கு முன் பாக வெளியிடப்பட வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்கள் கருத்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து. பிளஸ் 2 மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் அவ்வப்போது தொடர்பு கொண்டு முக்கி யப் பாடப்பகுதிகளை திருப்புதல் செய்ய அறிவுறுத்த வேண்டும். 

மேலும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு குறித்து இருக்கும் தயக்கம். அச்சம் ஆகியவற்றைப் போக்கும் வகையில் ஆசிரியர்கள் உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும். தெளிந்த மனதுடன் பொதுத் தேர்வை அணுகும் வகையில் மாணவர்களைக் தயார்ப டுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கல்வித்துறை உயரதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment