தமிழக அறிவியலறிஞர் விருதுக்கு ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latest

Saturday, May 22, 2021

தமிழக அறிவியலறிஞர் விருதுக்கு ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழக அறிவியலறிஞர் விருதுக்கு ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் 


தமிழக அறிவியலறிஞர் விரு துக்கு ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க லாம் என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் தெரிவித்துள்ளது. 


வேளாண்மை அறிவியல், உயிரியல், வேதி யியல், சுற்றுச் சூழலியல், பொறியியல் தொழில் நுட்பம், கணக்கியல், மருத்துவம், இயற்பியல், கால்நடை அறிவியல், சமூகவியலில் ஆய்வு செய்து சாதனை செய்யும் தமிழக அறிஞர்க ளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது பெறுபவர்களுக்கு ரூ.50,000 ரொக்கம், பட்ட யம், சான்றிதழ் வழங்கப்படுகின்றன. 


மன்றத்தின் இணையதளத்திலிருந்து (www.tanscst.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ள லாம். அனைத்துத் தகவல்களையும் கொண்ட புத்தக வடிவிலான நான்கு நகல்கள் 'உறுப்பி னர் செயலர், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மாநில மன்றம், தொழில்நுட்பக் கல்வி இயக்கக வளாகம், சென்னை-600025 என்ற முகவரிக்கு வரும் ஜூன் 30-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும்.

No comments:

Post a Comment