தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) வே.பாலாஜி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
2021-2022-ம் கல்வி ஆண்டில் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த இடங்கள் 130.
விண்ணப்ப படிவத்தை இணையதளத்தில் (www.tndalu.ac.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பரிசீலனைக் கட்டணம் ரூ.1250. (எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.750). பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான ஆவணங்கள் மற்றும் பரிசீலனை கட்டணத்துக்கான டிமாண்ட் டிராப்டுடன் மே 31-ம் தேதிக்குள் நேரில் அல்லது தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு ஜுன் 19-ம் தேதி ஆன்லைன் மூலம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment