:கல்வி தொலைக்காட்சியில், நாளை முதல் ஒளிபரப்பப்படவுள்ள, பாடங்கள் குறித்த, புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.பள்ளி மாணவர்களுக்கு, கற்றலில் உள்ள இடைவெளி குறைக்கும் வகையில், பயிற்சி புத்தகம் தயாரிக்கப்பட்டு, ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது.
MUST READ
இப்புத்தகத்தில் உள்ள கருத்துகளை, ஆசிரியர்கள் விளக்கும் வீடியோ, கடந்த மாதம் 22ம் தேதி முதல், வகுப்பு வாரியாக ஒளிபரப்பப்பட்டது.இந்நிலையில், நாளை முதல் வரும் 18 ம் தேதி வரை, வகுப்பு வாரியாக புதிய அட்டவணைப்படி பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இதுகுறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
MUST READ
கோவை மாவட்டத்தில், இப்புதிய அட்டவணை, அந்தந்த பள்ளிகள் மூலம், இரண்டாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, கையாளும் ஆசிரியர்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதை, மாணவர்களுக்கு தெரிவித்து, அந்தந்த பாடத்திற்கான வீடியோ திரையிடப்படும்போது பயிற்சி புத்தகத்தை உடன் வைத்திருக்குமாறு, தெரிவிக்க வேண்டும். மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதா என, தொடர்பு கொண்டு விசாரிக்க வேண்டுமென, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. SOURCE NEWS
No comments:
Post a Comment